ஜேன் ஆஸ்டின் (Jane Austin, டிசம்பர் 16, 1775 – ஜூலை 18, 1817) ஒரு பிரிட்டானியப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப்பற்றிய நேசப் புனைவுகள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும், இலக்கிய ஆய்வாளர்களிடமும் இவருக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளன.
18-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் ஸ்டிவென்டன் கிராமத்தில் பிறந்தார். கஸாண்ட்ரா ஆஸ்டின் என்கிற தன் சகோதரியுடன் ஆஸ்டின் ஆபே பள்ளிக்குப் படிக்கச் சென்றார். கீழ் நடுத்தரவர்க்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆஸ்டின், தன் தந்தை மற்றும் சகோதரர்கள் மூலம் கல்வி கற்றார். அவருடைய எழுத்துப்பணியை அவரது குடும்பத்தார் பெரிதும் ஊக்குவித்தனர். இளம் வயதில் பலதரப்பட்ட இலக்கிய பாணிகளில் பரிசோதனையாக எழுதிப்பார்த்த ஆஸ்டின், பின் தனக்கே ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.
17ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த ‘உணர்ச்சிகரமான புதின’ப் பாணியை நிராகரித்த ஆஸ்டினது படைப்புகளில் யதார்த்ததைமும், நகைச்சுவையும் இழைந்தோடுகின்றன. அவரது புதினங்கள் 18ம் நூற்றாண்டு ஆங்கிலப் பெண்கள் சமூகத்தில் முன்னேறவும் பொருளதார ஆதாயத்திற்காகவும் ஆண்களையும், திருமணத்தையும் சார்ந்திருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. 1811 முதல் 1816 வரை வெளியான சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி, பிரைடு அண்ட் பிரிஜுடைஸ், மான்ஸ்ஃபீல்டு பார்க், எம்மா ஆகிய நான்கு புதினங்கள் ஆஸ்டினுக்கு சிறிதளவு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன.
அவர் மறைவுக்குப் பின் நார்த்தாங்கர் ஆப்பி,பெர்சுவேஷன் என்று மேலுமிரு புதினங்களும் வெளியாகின. ஆஸ்டின் வாழ்ந்த காலத்தில் அவர் இலக்கிய உலகில் பெரிதாக அறியப்படவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப்பின் 1869ல் வெளியான எ மெமயர் ஆஃப் ஜேன் ஆஸ்டின் என்ற அவரது வாழ்க்கை வரலாறு சமூகத்தின் பார்வை அவர் படைப்புகளின் மீது திரும்பக் காரணமானது. அதன் பின்னர் அவரது புகழ் பரவி, அவரது புதினங்களுக்கு பெரும் வரவேற்பு உருவானது.
தற்போது ஆஸ்டின் தலை சிறந்த ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆஸ்டினது படைப்புகள் பலமுறை தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன; உலகெங்கும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
தன் சகோதரி கஸாண்ட்ராவிற்கு ஜேன் ஆஸ்டின் ரௌலிங்கிலிருந்து இக் கடிதத்தை 18.09.1796 அன்று எழுதினார்.
என் இனிய காஸாண்ட்ரா,
இன்று காலை முழுவதும் திட்டங்களை அமைப்பதிலும், கஷ்டங்களைப் போக்குவதிலும் உள்ள சந்தேகங்களுடனும் யோசனைகளுடனுமே கழிந்தது. இந்த வாரத்திற்குள் சீக்கிரம் நடக்க வேண்டாம் என நான் கருதுகிற ஒன்றின் அறிவிப்பு இன்று காலை கிடைத்தது. பிராங்குக்கு ‘டிரைடான்’ தலைமை வகிக்கும் ‘கேப்டன் ஜான்கோர்’ கப்பலில் பதவி கிடைத்துள்ளது. இதனால் புதன் கிழமை நகரத்தில் இருப்பார். அந்த நாளில் அவருடன் நான் சேர்ந்திருக்க விருப்பம் கொண்டிருந்தாலும், பியர்ஸன்ஸ் வீட்டில் இருக்க்க் கூடிய நிச்சயமில்லாத்தன்மை இருப்பதால் என்னால் போக முடியாது.
நான் செல்வி.பி.க்கு எழுதினேன். இன்று காலை அவளிடமிருந்து பதில் வரும் என நம்பினேன். எல்லாமே சுலபமாகவும், மேன்மையாகவும் செல்கிறது என்றும், நான் கலந்து கொள்வதற்கு விருப்பமாயிருக்கிற பிராங்கின் பதவியேற்புக்குச் செல்வதற்கான சாத்தியம் பற்றியும் விளக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.
எனக்காக மட்டுமே அவர் புதன் கிழமை வரை இருக்கிறார். புதன் கிழமை என்னை வரவேற்றுக் கொள்வார்களா என்பதை செவ்வாய்க் கிழமையில் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களால் முடியாது என்றால், எட்வர்ட் திங்கட்கிழமை என்னை கிரீன்வீச்சுக்கு அழைத்துப் போவதாய் கூறியுள்ளான்.
ஏற்கனவே குறிக்கப்பட்ட நாள் இது. இது அவர்களுக்குச் சிறப்பாய்ப் பொருந்தும். ஒருவேளை செவ்வாய்க் கிழமையில் எனக்கு பதில் கிடைக்கவில்லை என்றால், மேரி வீட்டில் இல்லை என நினைத்துக்கொள்வேன். நான் முடிந்தவரை இங்கே காத்திருக்க வேண்டும்.
அப்பா தன்னுடைய ஊதாரிமகளை நகரத்தில் இருந்து அழைத்து வர விருப்பமாய் இருப்பார் என நம்புகிறேன். கிரீன்வீச்சை அடைந்ததும் விரைவில் திரும்பவும் எழுதுகிறேன். மிஸ் பியர்ஸன் என்னுடன் திரும்பினால், அதிகமான அழகை எதிர்பார்க்கக் கூடாது என எச்சரிக்கையாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். முதல் சந்திப்பிலேயே அவரைப் பற்றி நான் கருதி கருத்துக்கு அவர் பொருத்தமாக இருந்தார் என்று அவரிடம் பொய்யாக நடிக்க மாட்டேன்.
பிராங்குடன் திரும்பும் யோசனை எனக்கு வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பியர்ஸன்ஸ் வீட்டில் இல்லாமல் இருந்திருந்தால், எனக்கு சிறிது பீர் கொடுக்கும் உடல் பருமன் கொண்ட பெண்ணுடன்தான் பொழுதைக் கழிக்க வேண்டும்.
உன் நெருக்கமானவர்களுக்கு என் அன்புகள்.
எப்போதும் உன்னுடைய,
ஜே. ஆஸ்டின்.
பரணிலிருந்த தன் பழைய கடிதங்களை மீட்டெடுக்கிறார் இம்சையரசி தன் வலைப்பக்கத்தில் அன்புள்ள....என்னும் பதிவில்
பரணிலிருந்த தன் பழைய கடிதங்களை மீட்டெடுக்கிறார் இம்சையரசி தன் வலைப்பக்கத்தில் அன்புள்ள....என்னும் பதிவில்
‘என் மேல நீங்கதான் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க அப்பா. இந்த கடிதங்கள எடுத்துப் பாக்கலைனா எனக்காக நீங்க கண்ணீர் சிந்தினது எனக்குத் தெரியாமலேப் போயிருக்கும்’.....