Tuesday, October 25, 2011

உயிர் உடைத்த புகைப்படம்... (உங்கள் மனமும் வலிக்கக் கூடும் ..)கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு க்ளிக்செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை நியூயார்க் டைம்ஸ்பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி  ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


 ‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am  Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்

நன்றி; இராமன் பாண்டியன் & சம் இதழ்

19 comments:

Anonymous said... [Reply]

RIGHT SAID

RAJESH9019 said... [Reply]

k

எம்.ஞானசேகரன் said... [Reply]

மனதை உலுக்கும் செய்தி. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Avargal Unmaigal said... [Reply]

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

ADAM said... [Reply]

SORRY

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி அனானி!

கவிப்ரியன் said... [Reply]

நன்றி ராஜேஷ்!

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி ஞானசேகரன்!

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி Avargal Unmaigal

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி ADAM

JOTHIG ஜோதிஜி said... [Reply]

மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் எங்கள் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

ஹேமா said... [Reply]

எத்தனையோ நாட்கள் இந்தப் படத்தைப் பார்த்துப் பரிதவித்ததுண்டு.என் பதிவில் இணைத்து நிறையப் பேர் அதை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.அந்தப் படத்தின் விளக்கம் அறிந்ததில் சந்தோஷமும் சங்கடமும்.
நன்றி கவிப்ரியன் !

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி ஜோதிஜி! உங்கள் எழுத்தின் ரசிகன் நான். நீங்கள் என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததையும், கருத்திட்டதையும் பெருமையாகக் கருதுகிறேன்!

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் சங்கடத்தையும், சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஹேமா அவர்களே!

! ஸ்பார்க் கார்த்தி @ said... [Reply]

கெவின் போன்றோர் எல்லா துறையிலும் உள்ளனர், தங்கள் வேலையை சரிவர செய்வர் ஆனால் மனிதநேயத்தை மட்டும் மறந்து விடுவர், இருந்தாலும் கேவின்னின் இந்த புகைப்படம் பல பேருக்கு சென்றடைந்தது , அதன் முலம் பல உதவிகளை அந்த தேசம் பெற்றிருக்கும், அதனால் கெவினுக்கு வைப்போம் க்க்க்கிரெட் சல்யுட்...............

ஜிஎஸ்ஆர் said... [Reply]

புகழ பெற வேண்டும் என்கிற ஆர்வத்தில் பொதுவாகவே மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது..

\\ ‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.\\

இந்த கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்

அன்புடன்
ஞானசேகர் நாகு

கவிப்ரியன் said... [Reply]

நண்பர் ஞானசேகர் நாகு அவர்களுக்கு! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! தங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் நான்! தங்களை தொடர்ந்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Bookmarks said... [Reply]

Hi frnd...
urs this post is really nice and useful.. i copied this in my blog with ur name and blog address...
if u have any objection i ll remove...
thank u..
http://siddubookmarks.blogspot.com/

கவிப்ரியன் said... [Reply]

ஆட்சேபனை இல்லை. தாராளமாக வெளியிடுங்கள்.வருகைக்கும் நன்றி

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!