என் பூவுலக தேவதைக்கு
இன்று பிறந்தநாள்!
வாழ்த்துக் கூற வார்த்தைகளைத்
தேடுகின்றேன் –
வரிகளே அமையவில்லை.
உன் பிறந்தநாள் பரிசாக, -இனி
நீ வேண்டும் என கேட்கமாட்டேன்.
ஆனால்,
நேசிப்பதை நிறுத்த
என்னால் முடியாது.
மறுக்காதே!
மறக்க மட்டும் சொல்லாதே!
மரணத்தின் போது நிச்சயம்
மறந்து போவேன்! – இனி
என் நேசம்
அதிராது, ஆடாது, ஆவேசப்படாது.
என் வேதனைக்கு மருந்து
நீ மட்டும்தான்.
அனுபவங்கள் அறிவை வளர்த்தாலும்
அசட்டுத்தனங்களைக்
குறைப்பதில்லையாம் – இது
ஆழ்ந்த நேசம் என்று புரிந்தாலும் சரி,
அசட்டுத்தனம் என்று ஒதுக்கினாலும் சரி!
உன்னை காயப்படுத்தவில்லை – என்
காயங்களுக்கு மருந்து போடக்
கேட்கிறேன்.
நடப்பது நடக்கட்டும்
நட்பே தொடரட்டும் –உன்
ஜனன நாளில் என்
மரணம் நிகழட்டும்.
உனக்காக வாழத்தலைப் பட்ட
ஓர் உயிரின் நினைவு – உன்
ஒவ்வோர் பிறந்த நாளிலும் வந்து
நினைவூட்டட்டும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!