Thursday, August 22, 2013

மீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்! 
 சேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம்!

"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி நீதிபதிகளைப் பார்த்து தெரிவித்தார். இதற்கு சந்துருவின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். தாமினி மன அழுத்தத்தில் இருக்கிறார். முன்பு காதலனுடன் செல்ல சம்மதித்தவர் இப்போது மாற்றிச் சொல்கிறார். இதற்கு பெற்றோர் நிர்ப்பந்தமே காரணம். 2 வார காலத்தில் அவரது மனதை மாற்றி விட்டார்கள் என்றார்.

உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, "தாமினி மேஜர் பெண். அவர் பெற்றோருடன் செல்ல சம்மதித்து இருக்கிறார். அவர் சொல்வதைத்தான் எங்களால் ஏற்க முடியும்'' என்றனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், தாமினிக்கு இன்னும் திருமணம் நடை பெறவில்லை. (அதுக்குள்ள பதிவுத் திருமணம் முடிஞ்சிருந்தா மகள் விரும்பினாலும் தந்தை கூட அனுப்ப மாட்டாங்களோ?!)அதற்கு முன் அவர் மீது உரிமை கொண்டாட முடியாது. திருமணம் முடிந்து இருந்தால் கணவருடன் செல்வது பற்றி முடிவு எடுக்கலாம். திருமணம் ஆகாத பெண் பெற்றோருடன் செல்ல முடிவு எடுக்கும் போது அதைத்தான் கோர்ட்டு ஏற்க முடியும் என்றனர்.

வக்கீல் சங்கரசுப்பு வாதாடுகையில், தாமினி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம். 2 வாரமாக அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர். சினிமா பிரமுகர்கள் போய்பார்த்து அவர் மனதை மாற்றி விட்டார்கள் என்றார். உடனே நீதிபதிகள், எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பின்புதான் தலைமை ஆசிரியையுடன் அனுப்ப உத்தரவிட்டோம். இப்போது எங்கள் மீதே குற்றம் சுமத்துகிறீர்களா? என்று வக்கீலைப் பார்த்து கேட்டனர்."

"நீதிபதிகள் தாமினியை அருகில் அழைத்து அவரது விருப்பத்தை கேட்டறிந்தனர். அப்போது தனது தந்தை சேரன், தாய் செல்வராணியிடம் செல்வதாக அவர் விருப்பம் தெரிவித்தார். அவரது விருப்பத்தை நீதிபதிகள் வெளிப்படையாக தெரிவித்தனர். இதற்கு சந்துருவின் வழக்கறிஞர் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.

இரண்டு முறை நடந்த வழக்கு விசாரணையின் போது காதலன் சந்துருவிடன் தான் செல்வேன் என கூறிய தாமினி, தற்போது பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்து இருப்பதில் ஏதோ சதி நடந்துள்ளது. அவரை யாரோ மூளைச்சலவை செய்துள்ளனர் என்று வாதாடினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தாமனி மைனர் பெண் கிடையாது. அவர் மேஜரானவர், யாரிடம் செல்ல வேண்டும் என முடிவு எடுக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது. இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் சேரன் மகள் பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையிலும் தந்தையுடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். இதனை வாக்குமூலமாகவும் அளித்தார். எனவே சந்துரு தாயாரின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்."

பகிர்ந்ததும் பகிராததும் பதிவில் நான் எழுதியவை…
சேரன் விவகாரமும் இப்படித்தான் நிறைய இது பற்றிய செய்திகள் வந்துவிட்டது. நாமும் ஏதாவது சொல்லலாமே என்று ஒப்புக்கு எழுதப் பிடிக்கவில்லை. அதனால்தான் இதைப் பற்றிய பதிவு ஒன்று ஜோதிஜியின்தேவியர் இல்லம் திருப்பூர்தளத்தில் 'நடிகர் பிரகாஷ்ராஜ்' என்ற பதிவு  வெளிவந்தபோது நான் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தேன்.  

'இதைப்பற்றி நானே பதிவெழுதலாம் என்றிருந்தேன் ஜோதிஜி! பாவம் சேரன். காதலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் தனக்கென்று வரும்போதுதான் அதன் தீவிரத்தை உணர்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரகாஷ்ராஜ், ராதாமோகன்,சேரன் பங்கு கொண்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை முழுவதும் பார்க்க நேரிட்டது. உருகி உருகி காதலித்தவர்கள் எல்லாம் தங்கள் சோகக் கதையைச் சொல்ல பரிதாபப் பட்டுக்கொண்டிருந்தார் சேரன். இன்று அவரின் நிலைமையைப் பார்த்தீர்களா? எந்த உண்மையான பாசமுள்ள தகப்பனும் அல்லது குடும்பத்தினரும், கண்மூடித்தானமான, இளம் வயதிற்கே உரித்தான இனக்கவர்ச்சியில் வீழும்போது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவே முனைவார்கள். இந்த காதலர்களோ காமத்தை அனுபவிக்கும்வரை கடவுளே தடுக்க வந்தாலும் அவர்மீதும் காவல்நிலையத்தில் கொலைக்குற்றம் சுமத்துவார்கள்.

ஊடகங்களும் இதெற்கென்றே இருக்கும் ஊதாரிகளும் இதை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஆனால் பிள்ளைகள் அதிலும் பெண் கெட்டு நொந்து வீட்டிற்கே திரும்பி வரும்போதும் அல்லது வராமலேயே தற்கொலை செய்துகொள்ளும்போதும் சம்பந்தப்பட்ட குடும்பம்தான் அதை எதிர்கொள்ளுமே தவிர இப்படி இதை வியாபாரமாக்கும் கும்பல்கள் இல்லை. இதைப்பற்றிய பதிவு ஒன்றையும் எழுதவிருக்கிறேன்'.

முகநூலில் சிலர் தெரிவித்த கருத்துக்களையும் அதில் பகிர்ந்திருந்தேன்.

காலம் மாறிக்கொண்டு வருகிறது. எல்லாமே சுயநலமாய் மாறிக்கொண்டு வருகிறது. நாமும் மாற வேண்டும். மேலை நாடுகள் போல பந்தம் பாசம், சொத்து சேர்ப்பு, குழந்தைகள் எதிர்காலம் என்ற கவலைகளையெல்லாம் விடுத்து சுயநலமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

எல்லா உறவுகளும் தேவையின் அடிப்படையில்தான் தொடருகிறது. அன்பாகட்டும், காதலாகட்டும் பாசமாகட்டும், பணமாகட்டும், பொருளாகட்டும். எங்கே கிடைக்கவில்லையோ அங்கிருந்து தாவி கிடைக்குமிடத்துக்குப் போவதுதான் நிதர்சனம். வளர்ப்பு சரியில்லை என்று சேரன் தரப்பை குற்றம் சாட்டுபவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். சுதந்திரம் கொடுத்தாலும் பிரச்னை. கொடுக்காவிட்டாலும் பிரச்னை. இன்றைய இளைய சமுதாயம் வேறு ஏதோ ஒரு பிடியில் சிக்கி சீரழியத் தொடங்கியிருக்கிறது.

பெரியவர்களைப் பற்றிய பயமோ, மரியோதையோ, தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியோ, எதிர்காலம் குறித்த கவலையோ, கல்வி வேலை வாய்ப்பு குறித்த அக்கரையோ எதுவுமில்லாமல் வளர்கிறார்கள். காதலும் காமமும் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

ஏதோ ஒரு பதிவில் படித்தேன்சட்டப்படி திருமண வயதை அடைந்தாகிவிட்டதல்லவா, விட வேண்டியதுதானே!? அது அவரின் வாழ்க்கை. நன்றாக வாழ்ந்தால் வாழட்டும் இல்லை சீரழியட்டும். திரும்பி வந்தால் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும் என்ற ரீதியில் எழுதியிருந்தார். நல்லவனை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை என்று சொன்னால் பொறுக்கிகள் காதலிக்கக் கூடாதா என்கிறார்கள். இதில் நோக்கம் என்பது தெளிவு.. காமத்தை காமத்தை அனுபவிக்க வேண்டும். மற்றவை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். பிடித்தால் வாழ்வோம் இல்லை என்றால் டாடா!  

கர்பமாதல், உடல்நல பாதிப்பு என பெண்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்ற பழைய பல்லவிகளை யாரும் உணர்வதே இல்லை.

பிள்ளைகள் வளர்ப்பு என்பது எளிதான காரியமில்லை. தற்கால சூழலில் நல்ல கல்வியை கொடுப்பதும் சுலபமில்லை. ருசியாண உணவு, நாகரிகத்திற்கேற்ற உடை என்று எல்லாம் பார்த்துப் பார்த்து பெற்றோர்கள் செய்தபோதும் காதல் என்று சொல்லி எவனோ ஒருவன் தூண்டில் விரிக்க எப்படி அதில் போய் விருப்பத்துடனே விழுகிறார்கள் இந்த யுவதிகள். விழுவதும் வீட்டில் சொல்வதும் கூட பரவாயில்லை. யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போவது என்றல்லவா நடக்கிறது.

காதல் திருமணங்கள் வெற்றியடைய என்ன தேவை. சரியான நபரை தேர்ந்தெடுப்பது. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ குணநலன்கள் ஒத்துப்போக வேண்டும். மிக முக்கியமாய் பொருளாதார வசதி. பணப் பற்றாக் குறையில் அவதிப்படும் போதுதான் பெரும்பாலான காதலுக்குள் சிக்கலே வருகிறது. ‘உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேஇப்படித்தான் ஆகிறது எல்லாக் காதலும். பிறகு பெற்றோருக்கு தெரியப்படுத்துவது

பெற்றோர்களை இந்த இருபது வயதுவரை புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? அவர்களின் எதிர்பார்ப்பு, அவர்கள் விருப்பம், என்று அவர்கள் மறுக்க முடியாத நபரை நிறுத்த வேண்டும். வேறு வழியில்லாமல் ஆதரித்துத்தானே ஆக வேண்டும். கௌரவம், ஜாதி, அந்தஸ்து எல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. கல்வியும், நல்ல வேலையும் அதனால் ஏற்படக் கூடிய பொருளாதார வசதியும் இவை எல்லாவற்றையும் அடக்கி ஆண்டுவிடும். ஒருவேளை பிரிய முடிவெடுத்தாலும் பெற்றோரையோ உடன் பிறந்தாரையோ சார்ந்திருக்காமல் கல்வியும் வேலையும் கைகொடுக்கும்.

கல்வியும் வேலையும் இல்லாத பட்சத்தில் கட்டியவனை நம்பி அவன் சரியில்லை என்றாலும் அவனுடனே வாழ்ந்தாக வேண்டும். மீண்டும் பொற்றோரிடம் போக சிலருக்கு கௌரவம் இடம் கொடுக்காது. அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்குப் போவார்கள். வேலை இருந்தால் தன் சுய காலில் நிற்க தன்னம்பிக்கையும் தைரியமும் கிடைக்கும். இவர்களுக்கெல்லாம் பட்ட பின்தான் புத்தி வருமே தவிர எடுத்துச் சொல்லும்போது மண்டைக்கு ஏறாவே ஏறாது.

எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் மகன் அல்லது மகளை நினைத்து வருந்தவே செய்வார்கள். நிறைய இடங்களில் காதல் கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள், மகனோ அல்லது மகளோ ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு பேரனோ பேத்தியோ பெற்றதும் மீண்டும் தங்களோடு இணைத்துக் கொள்வதை கண்கூடாக நாம் காண்பதே!

ஆனால் மனக்காயங்கள் ஆறாதது. பாசத்தோடு வளர்த்த பிள்ளை வீட்டை விட்டுப் போகும்போது யாருக்குத்தான் மனம் கலங்காமல் இருக்கும். போய் சாகட்டும் என்று எந்த தகப்பனும் சொல்லமாட்டான். கௌரவக் கொலைகள், தற்கொலைகள் இதன் காரணமாகவே நிகழ்கின்றன. கருத்து சொல்வதும் கட்டுரை எழுதுவதும் சினிமா எடுப்பதும் எளிது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தனக்கு நேரும்போது தான் அதன் வீரியத்தை பலர் புரிந்து கொள்கிறார்கள்.

சேரன் விவகாரம் குறித்த இன்னொரு பதிவு 'மனசு' சே.குமார் அவர்களின் 'தந்தையின் வலியை கேலிப் பொருளாக்குவதா?'

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

எப்படியோ சந்தோஷ நிகழ்வுகள் மேலும் நடந்தால் சரி...

ராஜி said... [Reply]

அந்த சின்ன பெண்ணின் எதிர்காலம் பாதிக்காம இருந்தா போதும் ஏன்னா, என்னதான் பொறுப்பான தந்தையா சேரன் இருந்தாலும், கன்னித்தன்மை பரிசோதனை, மீடியாக்களில் மகளின் பொய்ன்னு கொஞ்சம் வெளியிட்டுட்டார் சேரன்.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி தனபாலன் அவர்களே!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

ராஜி அவர்களே! கன்னித்தன்மை பரிசோதனை எல்லாம் எதிர்த்தரப்பில் சொன்ன கட்டுக்கதை. அதை யாரும் நம்பவில்லை. மகள் பற்றிய வேதனையில் சேரன் உணர்ச்சி வசப்பட்டதென்னவோ உண்மைதான்!

Zonia Islam said... [Reply]

To Find All Types Of Images,Wallpapers,Photos and much more... in Wide Screen.
Just Visit 2 My Blog

http://imagezhouse.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Online Captcha Work Free Registration
Now Register yourself for free with Perfect Money Account Number
And Start your work And Get Your Payment in your own account.
Download Software For Free...
Use Our Software By Using Our Invitation Code
Just Visit...

http://captcha4onlinework.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Funny Poon | Largest Collection of Latest Funny Pictures, Funny Images, Funny Photos, Funny Jokes

And Cartoon Plus Bizarre Pics Around The World.
Just Visit 2 My Blog

http://funnypoon.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

~*~ Free Online Work At Home ~*~
Here's Everything You Need to Know About Online Working At Home, Including Where to Find Work At Home Job Listings,
The Best Sites For Finding Work At Home Jobs And How to Avoid Work From Home Scams.
Visit...
http://SooperOnlineJobs.blogspot.com/ .

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!