Tuesday, September 3, 2013

நானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…

சேமிப்பு, முதலீடு, காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான். விகடன் குழுமத்தின்நாணயம் விகடனை ஆரம்பத்தில் இதற்காகவே வாங்கியதுண்டு. அப்புறம் சோம வள்ளியப்பனின் முதலீடு, பங்குசந்தை சம்மந்தமான அள்ள அள்ளப் பணம் போன்ற புத்தகங்களைப் படித்தபின் அவைகளில் முதலீடு செய்யும் ஆர்வமும் ஏற்பட்டது.

2007-ம் ஆண்டு என நினைக்கிறேன். நிறைய யோசித்து இரண்டு மூன்று பரஸ்பர நிதித் திட்டங்களின் NFO (New Fund Offer) க்களில் முதலீடு செய்தேன். அப்போதைய என் சிற்றறிவுக்கு எட்டியது என்னவோ 10 ரூபாய்க்கு (மிக குறைந்த விலைக்கு) வாங்கும் ஒரு யூனிட் இரண்டு மூன்று வருடங்களில் வளர்ந்து பெரிய தொகையாகும் என்பது என் கணக்கு.

ஆனால் நடந்தது என்னவோ தலைகீழாய்! பத்து ரூபாய்க்கு வாங்கியது 8, 7, 6 ரூபாய்க்குப் போய் இன்றுவரை கூட 11 ரூபாய்க்கு மேல் போகவில்லை. இதுதான் முதல் அடி! அதற்குப் பிறகு கொஞ்சம் அலசி ஆராய்ந்து கடந்த காலத்தில் அந்த திட்டம் கொடுத்த வருமானத் எல்லாம் பார்த்து முதலீடு செய்ய அதுவும் SIP (Systematic Investment Plan) செய்ய அந்த திட்டங்கள் எனக்கு 60, 70 சதவீத லாபம் கொடுத்தன.
                                              


நான் பங்குச்சந்தையில் முதலீட்டைத் தொடங்கிய நேரம் இத்தனை மோசமானதாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நானாவது பரவாயில்லை, பலர் இடி விழுந்தது போல் பதறித்தான் போனார்கள். அன்றைய செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் என எல்லாமே அன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியை விலாவரியாய் சொன்னது

முதல் முறை என்றாலும் சுமார் முப்பதாயிரம் ரூபாயை நான் 2008 ஜனவரி மாதம் 16-ம் தேதியோ அல்லது 17-ம் தேதியன்றோதான் முதலீடு செய்திருந்தேன். (என்னோடு பணிபுரிந்து கொண்டிருந்த நண்பரொருவர் சுமார் இரண்டரை லட்சம் வரை முதலீடு செய்திருந்தார்). அடுத்த நான்கே நாட்களில் இப்படி பங்குச்சந்தை வீழ்ச்சி காணும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்

என்னுடைய முதலீடு மிகவும் குறைவு என்றாலும், சந்தை வீழ்ந்தால் மீண்டும் எழத்தானே போகிறது. ஏன் கவலைப் படவேண்டும்? நாம்தான் நீண்டகால முதலீட்டை விரும்புபவராயிற்றேஎன்று சமாதானம் செய்து கொண்டேன். அதனால் வீழ்ந்திருந்த அந்த நேரத்தில் இன்னம் கொஞ்சம் முலீடு செய்தேன். மீண்டும் அடி! கிட்டத்தட்ட மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் 21,000-த்திலுருந்து 9,000 புள்ளிகள் வரை சரிந்தது

நான் வாங்கிய பங்குகள் எதுவுமே எனக்கு இன்றுவரை கைகொடுக்கவே இல்லை. பங்கச்சந்தை புள்ளிகள் மீண்டும் 20,000-த்தை தொட்ட பின்பும் இன்னமும் அந்த பங்குகள் அதள பாதாளத்திலேயே இருக்கின்றது. ஆர்வமும் போய்விட்டது. புள்ளிகள் உயரும்போது ஆசை ஏற்படுவதும், வீழும்போது நல்லவேளை நாம தப்பிச்சோம் என்ற ஆறுதலுமாகத்தான் எனது நிலை போய்க்கொண்டிருக்கிறது.

ஆனாலும் முழுவதுமாக விட்டுவிடவோ, தலைமுழுக்கு போடவோ மனமில்லை. ஏன் சராசரி செய்து வரலாமே என்று சிலர் கேட்கக்கூடும். அந்த பக்குவப்பட்ட மனநிலை இன்னும் எனக்கு வரவில்லை. அதற்கு காரணங்களும் இருக்கின்றன.

வேலை நேரத்தில் செய்ய முடியவில்லை. அது சரியும் இல்லை. பங்குச்சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க முடியாத சூழ்நிலை. இணைய இணைப்பின் வேகம் போதுமானதாக இல்லை. நான் முதலீடு செய்து வரும்ஆன்லைன்தரகு நிறுவனமான SBICAPSEC நிறுவனத்தின் டிரேடிங் விண்டோ திறப்பதே இல்லை.

எவ்வளவு முயற்சி செய்தும் ஜாவா செட்டிங்ஸ், பாப்அப் பிளாக்கர், ஃபயர்வால் செட்டிங்ஸ் என எல்லாம் செய்தும் முயற்சி பலனளிக்கவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உதவிமையத்தின் ஆலோசனைகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் புதிய முதலீட் எதையும் செய்ய முடியவில்லை. வாங்கி வைத்திருக்கும் பங்குகள் எதையும் விற்கவும் முடியவில்லை!

இதற்கும் வழி தெரியவில்லை. தொழில்நுட்ப பதிவர்களோ அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களோ எனக்கு உதவுவீர்களா

நான் பயன்படுத்திவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான SBICAPSEC நிறுவனத்தில் தொடரலாமா, டிரேடிங் விண்டோ திறப்பதற்கான குறையை நிவர்த்தி செய்வது எப்படி? அல்லது வேறு ஆன்லைன் தரகு திறுவனத்தை அணுகலாமா? அணுகலாம் எனில் எது சிறந்தது? ICICIDIRECT சிறந்த தெரிவாக இருக்குமா? போன்றவற்றை அனுபவமுள்ள பதிவர்கள் தெரியப்படுத்தினால் எனக்கும் என்னைப்போல உள்ள பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமல்லவா?


இன்றைய தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 700 புள்ளிகள் சரிவைச் சந்தித்திருக்கிறது. சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கலாம் என்ற செய்திதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு (ரூ.68.00) குறைந்தது. இது குறித்த ஒரு அருமையான ஒரு பகிர்வு இந்த இணைப்பில்...

வவ்வால் அவர்களுக்காக.... ஆன்லைனில் வாங்க முடியும், விற்கமுடியும் என்பதற்கான விண்டோ...
  இதல் உள்ள புராடக்ட்ஸ் என்பதை கிளிக் செய்தால் மியீட்சுவல் ஃபண்ட் என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்தால் கீழ்க்கண்ட விண்டோ திறக்கும். 


அதில் எந்த வகையான மியூட்சுவல் ஃபண்டையும் வாங்கவோ விற்கவோ மாற்றவோ முடியும். இதன் சேவை திருப்திகரமாக இல்லை என்பதால்தான் வேறு நிறுவனத்துக்கு மாற யோசித்து இந்த இடுகையை எழுதியது.

18 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

என் ஆலோசனை உங்களிடம் அதிகப்படியான பணம் இருந்தாலும் இந்த பக்கம் செல்லாதீர்கள் என்பதே.

இரண்டு வருடம் இது குறித்து ஆராய்ந்தவன். இது குறித்து ஒரு பதிவும் எழுதி உள்ளேன்.

http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post.html

பங்குச்சந்தை ஆர்வலன் said... [Reply]

7 வருடங்களாக icicidirect பயன்படுத்தி வருகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை.

//அதுவும் SIP (Systematic Investment Plan) செய்ய அந்த திட்டங்கள் எனக்கு 60, 70 சதவீத லாபம் கொடுத்தன.//

அது எந்த SIPனு சொல்லமுடியுமா? நான் நீண்ட கால முதலீடு (10 வருடங்கள்) செய்ய விரும்புகிறேன்.

//பங்கச்சந்தை புள்ளிகள் மீண்டும் 20,000-த்தை தொட்ட பின்பும் இன்னமும் அந்த பங்குகள் அதள பாதாளத்திலேயே இருக்கின்றது. ஆர்வமும் போய்விட்டது. //

2008க்குப் பின்னால் SME பங்குகளில் அந்நிய (FII) முதலீடு சுத்தமாகக் குறைந்துவிட்டது.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

ஜோதிஜி! தங்களின் ஆலோசனைக்கு நன்றி! நீங்கள் இணைப்பில் கொடுத்துள்ள பதிவை அப்போதே படித்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறையும் வாசித்தேன். இப்போதைக்கு கொஞ்சம் ஒதுங்கித்தான் இருக்கிறேன். இருப்பதையாவது விற்றுத்தீர்க்க வேண்டுமல்லவா?

வவ்வால் said... [Reply]

கவிப்பிரியன்,

//ஆண்டு என நினைக்கிறேன். நிறைய யோசித்து இரண்டு மூன்று பரஸ்பர நிதித் திட்டங்களின் NFO (New Fund Offer) க்களில் முதலீடு செய்தேன். அப்போதைய என் சிற்றறிவுக்கு எட்டியது என்னவோ 10 ரூபாய்க்கு (மிக குறைந்த விலைக்கு) வாங்கும் ஒரு யூனிட் இரண்டு மூன்று வருடங்களில் வளர்ந்து பெரிய தொகையாகும் என்பது என் கணக்கு.//

நீங்க எல்லாம் எந்த தைரியத்தில் பங்குசந்தைப்பக்கம் போனிங்கனே புரியலை அவ்வ்!

மியூச்சுவல் பண்டுக்கும் ,ஷேருக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசிட்டு இருக்கிங்க,

மியூசுவல் பண்டில் எல்லா யூனிட்டின் விலையும் எப்பொழுதும் 10 ரூபாய் தான் :-))

சில சமயம் மட்டும் குறிப்பிட்டு விலை வைப்பார்கள்.

எனவே யூனிட் விலை 10 ரூபாய் என விலைப்பார்த்து அதுவும் ஸ்டேட்பாங்கில் தேர்வில் செய்தேன் என சொல்வதிலிருந்தே சரியாகப்புரிந்துக்கொள்ளாமலே குதித்து விட்டீர்கள் எனத்தெரிகிறது.

மியுச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள பெரிய உள்குத்து என்னவெனில் , ,ஒரு யூனிட் தலா 10 ரூ என வாங்க ,ஒரு லட்சம் ரூபாயை மூதலீடு செய்தால் , நமக்கு சுமார் 68 ஆயிரம்(இத்தொகை திட்டம் பொறுத்து மாறும்) ரூபாய்க்கான மதிப்பிற்கு தான் யூனிட்கள் கொடுப்பார்கள் ,மீதித்தொகை கணக்கு துவங்க, நமக்கு விற்பனை செய்த முகவரின் கமிஷன் ஆகும்.

எந்த ஒரு மியூசுவல் திட்டத்திலும் நாம் கொடுத்த முழுத்தொகைக்கு "யூனிட்கள் ஒதுக்கப்படவே படாது"

உங்கள் கையில் கொடுத்த பிரிண்ட் அவுட்டில் என்ன விவரம் போட்டிருக்குனு கூடவா படிச்சு பார்க்கலை?

எனவே பங்குசந்தை நன்றாக போய் , விலை உயர்ந்தால் மட்டுமே நாம் கொடுத்த பணத்தின் மதிப்பிற்கு இணையாக "மியூச்சுவல் பண்ட்"உயரும், அதற்கே சுமார் 5 ஆண்டுகள் ஆகும் என்பது நான் அனுபவ ரீதியாக கண்டப்பலன் :-((

அடுத்து நீங்கள் சொன்ன "sip" என்பதும் மியூச்சுவல் வகை தான், இவ்விரண்டிலும் நீங்கள் நேரடியாக "பங்கு யூனிட்களை" வாங்கி விற்க முடியாது, உங்களுக்காக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி தான் வாங்கி விற்கும், நீங்கள் "நிலவரத்தை மட்டுமே" வேடிக்கை பார்க்கலாம்.

"open end" ஆக இருந்தால் மட்டுமே விருப்பப்பட்ட போது விற்கலாம், குளோஸ்ட் என்ட் என்றால், குறிப்பிட்ட காலம் வரையில் தேவுடு காக்கனும்.

அடிப்படை புரியாம எல்லாரும் செய்றாங்கனு நீங்களும் செய்யப்போனால் இப்படித்தான் ஆகும் எனவே நேராக உங்கள் வங்கிக்கு சென்று மொத்தமாக கணக்கை முடித்து, இருப்பதை பணமாக உங்கள் அக்கவுண்டுக்கு மாற்றிக்கொள்ளவும். இல்லை இன்னும் நான்கைந்து வருடங்கள் அப்படியே கிடக்கட்டும் மேல வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தால் மேற்கொண்டு கவலைப்படாமல் வேறு வேலையைப்பார்க்கவும்.

மியூச்சுவல்,கம்மோடிடி ஆகிய வணிகத்தில் நமக்கு விற்பனை செய்யும் முகவருக்கு நல்ல கமிஷன் கிடைக்கும் என்பதால் "4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகும் என புழுகி நம்மை இழுத்துப்போடுவது வழக்கம், சில சமயம் உங்களைப்போல தானாகவும் போய் விழவும் கூடும் :-))

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

பங்குச்சந்தை ஆர்வலன்! தங்களின் ஆலோசனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி! மூன்று திட்டங்கள் நன்றாக வருமானம் கொடுத்தன.
1. SBI MAGNUM GOLD FUND
2. RELIANCE DIVERSIFIED POWER SECTOR FUND
3. RELIANCE EQUITY OPPORTUNITIES FUND

இவை SIP முறையில் மாதம் 1000 ரூபாய் முதலீட்டில் தோடங்கியவை...

வவ்வால் said... [Reply]

திருத்தம்.

மியூசுவல் ஃபண்டில் "NFO" இல் எல்லா யூனிட்டும் 10 ரூபாய் தான் என சொல்ல வந்ததில் "NFO" விட்டுப்போச்சு.

# மியுச்சுவல் மற்றும் சிப் வகையில் வாடிக்கையாளர் ஆன் லைனில் வாங்கி விற்று டிரேட் செய்ய முடியாது. அது ஷேர் அல்ல. நீங்கள் கணக்கை முடிக்க முகவரை அனுகவும்.

ramanathan said... [Reply]

It is better to trade in online commodity trading wherein you can earn 5 to 10 thousand rupees per month for an investment of Rs.1,00,000/=.

If interested please contact, and i will guide you to trade and earn safely in commodity online trading. My mobile No. 9003199210 - G RAMAN

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வவ்வால் அவர்களே! தங்களின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி!
மியூட்சுவல் ஃபண்டிற்கும் ஷேருக்கும் வித்தியாசம் தெரியும் நண்பரே! NFO வின் போது மட்டும்தான் மியூட்சுவல் ஃபண்டை யூனிட் விலை 10 ரூபாய்க்கு வாங்க முடியும். பழைய திட்டத்தை வாங்குவதென்றால் தற்போதைய யூனிட் மதிப்பில்தான் (பத்து ரூபாய் மதிப்புள்ள ஃபண்டு இப்போது 40 ரூபாயாக உயர்ந்திருக்கலாம்) வாங்க முடியும். தவிர மியூட்சுவல் ஃபண்டில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி மிகப் பெரிய தொகை கமிஷனாகவும், கணக்கு துவங்கவும் போகாது. அதிக பட்சமாக 2 சதவீதம்தான் போகும். அதுவும் இப்போது கிடையாது. நேரடியாக நாமே முதலீடு செய்யலாம். முழுத்தொகையும் முதலீடு செய்யப்படும். நீங்கள் குறிப்பிடுவது யூனிட் லிங்க்கடு இன்ஸ்யூரன்ஸ் திட்டமாக இருக்கலாம். மியூட்சுவல் ஃபண்ட் திட்டமல்ல.

SIP திட்டத்தில் நாமே முதலீடு செய்யலாம் யாருடைய உதவியும் தேவையில்லை. மாதாமாதம் பிடித்தம் செய்ய காசோலையாகவோ அல்லது வங்கியிலிருந்து ECS முறையில் பிடித்தம் செய்யச்சொல்லியோ ஏற்பாடு செய்யலாம். இப்போதைய நிலவரப்படி டிமேட் கணக்கு உள்ளவர்கள் அதிலேயே மியூட்சுவல் ஃபண்டில் ஆன்லைன் மூலம் தாராளமாக வாங்கமுடியும். நான் கற்றுக்குட்டி அல்ல. விபரம் தெரிந்துகொண்டு வந்து கூறுங்கள். அல்லது இணையத்தில் தேடுங்கள்.

நீங்கள் கூறுவதில் ஒன்று மட்டும் சரி. அது ஓப்பன் எண்ட், குளோஸ் எண்ட். ஓப்பன் என்ட் என்றால் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். குள்ளோஸ் என்ட் என்றால் குறிப்பிட்ட காலத்துக்கு 3 வருடமோ அல்லது 5 வருடமோ விற்க முடியாது.

வங்கிக்கு சென்று இந்தக்கணக்கை எல்லாம் முடிக்க முடியாது. இது வங்கியில் ஆரம்பிக்கும் கணக்கும் இல்லை. சில வங்கிகளில் முகவர்கள் இருக்கலாம் அவ்வளவுதான். இதில் இப்போது கமிஷன் இல்லை என்பதால் எந்த முகவரும் இதைச் செய்வதும் இல்லை. நீங்கள் விஷயம் தெரிந்தவர் என நினைத்திருந்தேன். சொதப்பி விட்டீர்களே!
ஹூம் யானைக்கும் அடி சறுக்கும் போல....

வவ்வால் said... [Reply]

கவிப்பிரியன்,

காசு போனது உமக்கு தானே ,அப்போ விவரமானவருனே நான் ஒத்துக்கிறேன் :-))

நான் திருத்தம் என "NFo" என சேர்த்து போட்டு அது உமது பதிவிலேயே பளிஷ் ஆனது கூட தெரியாமல் பேசிட்டு இருக்கீர் ,என்ன வேலிமுட்டி குடிச்சீரா :-))

// NFO வின் போது மட்டும்தான் மியூட்சுவல் ஃபண்டை யூனிட் விலை 10 ரூபாய்க்கு வாங்க முடியும். //

அப்புறம் இப்படி சொன்னதன் காரணம் என்ன,

//10 ரூபாய்க்கு (மிக குறைந்த விலைக்கு) வாங்கும்//

எல்லாருக்குமே 10 ரூபாய்க்கு NFO ல கிடைக்கும் போது நீங்க ரொம்ப மெனக்கெட்டு 10 ரூவாய்க்கு தேர்வு செய்தார் போல பேசியதால் தான் அப்படி சொன்னேன்.

அறிவேயில்லாம ஒரு கழுதை போய் காசு கொடுத்தாலும் NFO ல 10 ரூவாய்க்கு தான் யூனிட் விலை கொடுப்பான் :-))

//தவிர மியூட்சுவல் ஃபண்டில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி மிகப் பெரிய தொகை கமிஷனாகவும், கணக்கு துவங்கவும் போகாது. அதிக பட்சமாக 2 சதவீதம்தான் போகும். அதுவும் இப்போது கிடையாது. //

2007 லனு சொன்னது நீங்க தான் அப்போ நல்ல கமிஷன் உண்டு,மேலும் நான் பிராக்கெட்ல நீங்க எடுக்கும் திட்டம் பொறுத்துனும் சொன்னது அதான்,


நீங்க எந்த வகை மியுசுவல் என சொல்லவும் இல்லை,அப்புறம் மியுட்சுவலில் போட்டுவிட்டு ஷேரில் போட்டது போல ஏறவேயில்லை என சொலவ்தும் நீங்கள் தான் :-))


//வங்கிக்கு சென்று இந்தக்கணக்கை எல்லாம் முடிக்க முடியாது. இது வங்கியில் ஆரம்பிக்கும் கணக்கும் இல்லை. சில வங்கிகளில் முகவர்கள் இருக்கலாம் அவ்வளவுதான். //


ஷ்ப்பா நீங்க எந்த காலத்திஜில இருக்கிங்கனே தெரியலை, இப்போ பெரும்பாலான வங்கிகளிலும் இருக்காங்க, குறிப்பா SBIக்கு வங்கி மூலம் தான் செய்யப்படுகிறது(ஒரு வேளை இப்போ புரோக்கர்களும் வந்துட்டாங்களா) அங்கேயே ஆரம்பிச்சு ,அங்கேயே முடிச்சுக்கலாம், நீங்க ஏதேனும் ஏஜன்ட் ,புரோக்கர் மூலம் போவதை விரும்பினால் நான் என்ன சொல்ல?

ம்ம்க்கும் நீங்க தான் "sbi" என சொன்னது அவர்களுக்கு வங்கியில் முகவர்கள் இருக்கிறார்கள், அங்கேயே முடிச்சுக்கலாம். மேலும் "SBI" வங்கியில் தான் எளிதாக முடியும். எனக்கு தெரிஞ்சு தனியா புரோக்கர்களே "SBI" மியூட்சுவல் டீல் செய்ய விரும்புவதில்லை.

அப்புறம் உங்க சிஸ்டத்துல முடியலைனா வேற எதுலையாவது முயற்சி செய்து பார்த்து இருந்தா நான் சொல்லாமலே தெரிஞ்சி இருக்கும் :-))

அப்படி எல்லா எழவும் செஞ்சு பார்த்தேன் அப்படியும் முடியலைனு சப்பைக்கட்டு கட்டலாம்,ஆனல அது எதுவும் நீங்க சொல்லவே இல்லைனு நான் வேற சொல்லனுமா :-))

//நிலவரப்படி டிமேட் கணக்கு உள்ளவர்கள் அதிலேயே மியூட்சுவல் ஃபண்டில் ஆன்லைன் மூலம் தாராளமாக வாங்கமுடியும். நான் கற்றுக்குட்டி அல்ல. விபரம் தெரிந்துகொண்டு வந்து கூறுங்கள். //

வாங்கினிங்க சரி வித்தீங்களா ? அதான் முடியலைனு சொல்லி புலம்பி இருக்கீங்களே அப்புறம் என்ன?

ம்க்கும் டீமேட் அக்கவுண்ட் இல்லாமலே மியுட்வல் பண்டில் முதலீடு செய்யலாம்னு சொன்னா அது கூட தெரியாதானு சொன்னாலும் சொல்லுவாரு ,இம்புட்டு விவரமானவரு இவ்ளோ நாளா "SBI" டிரேடிங் வின்டோ ஓபன் ஆகலினு ஏன் சொல்லுறார்னே தெரியலை அவ்வ்!

SBI மூலம் மியுட்சுவலில் வாங்கி ஆன் லைனில் விற்று இருந்தால் சொல்லவும் ,இல்லை எனில் ,ஆளை விடும்.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வவ்வால்!
// காசு போனது உமக்கு தானே//
அதில் விழுந்து அடிபட்டதால்தானே இந்த விபரமும் தெரிந்து கொள்ள முடிந்தது! அதனால்தான் எனது அனுபவங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். தற்போது எச்சரிக்கையாகவும் இருக்கிறேன்.

//:-)) நான் திருத்தம் என "NFo" என சேர்த்து போட்டு அது உமது பதிவிலேயே பளிஷ் ஆனது கூட தெரியாமல் பேசிட்டு இருக்கீர்//
நான் பின்னூட்டமிட்டபிறகுதான் பார்க்க நேர்ந்தது. ஆரம்பத்தில் மியூட்சுவல் ஃபண்ட் பற்றி தெரியாத காலத்தில் முதலீடு செய்ததைப் பற்றித்தான் குறிப்பிட்டேன். அதன் பிறகு முதலீடு செய்தவைகளில் 60,70 சதவீதம் லாபம் கிடைத்ததையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

// பட்சமாக 2 சதவீதம்தான் போகும். அதுவும் இப்போது கிடையாது. // 2007 லனு சொன்னது நீங்க தான் அப்போ நல்ல கமிஷன் உண்டு,மேலும் நான் பிராக்கெட்ல நீங்க எடுக்கும் திட்டம் பொறுத்துனும் சொன்னது அதான், நீங்க எந்த வகை மியுசுவல் என சொல்லவும்//

இல்லை 2007-லும் இத்தனை கமிஷன் கிடையாது. 2 அல்லது 3 சதவீதத்துக்கு மேல் கிடையாது. இப்போது அதுவும் கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறேன். எல்லாவகை மியூட்சுவல் ஃபண்டுக்கும் இது பொருந்தும். பதிவிலேயோ அல்லது பின்னூட்டத்திலேயோ ஆதாரத்தைக் கொடுக்க முடியும்.

விலை ஏறாத மியூட்சுவல் ஃபண்டிலிருந்து முதலீட்டை எப்போதோ எடுத்தாகிவிட்டது. ஒன்றே ஒன்றைத்தவிர. அது யு.டி.ஜ.-யின் லாங் டேர்ம் அட்வான்டேஜ் ஃபண்ட் (குளோஸ்டு ஃபண்ட்) 10 வருடத்திற்கு எடுக்க முடியாது என்பதால் விட்டுவைக்க வேண்டியதாகிவிட்டது. 5 வருடத்திற்கு முன்பு 10 ரூபாய்க்கு வாங்கியது. இன்றைய NAV மதிப்பு வெறும் 11.15 தான்.

//நீங்க எந்தக்காலத்துல இருக்கீங்கன்னு தெரியலை? \\
இந்தக் கேள்வியை நான் உங்களிடம்தான் கேட்கவேண்டும்! இப்போதும் சொல்கிறேன். எந்த வங்கிக்கும் போய் இந்தக் கணக்கை முடிக்க முடியாது. இதற்கென இருக்கும் மியூட்சுவல் ஃபண்ட் அலுவலகத்திலோ அல்லது இந்த ஃபண்டை நடத்தும் நிறுவனங்களிலோதான் (உதாரணத்திற்கு எஸ்.பி.ஜ. மியூட்சுவல் ஃபண்டை நடத்துபவர்கள் CAMS, ரிலியன்ஸ் மியூட்சுவல் ஃபண்டை நடத்துபவர்கள் கார்வி போன்ற நிறுவனங்கள்) விற்க முடியும். ஒருவேளை வங்கியில் நீங்கள் கொடுத்தால் கூட அவர்களிம் இங்கேதான் அனுப்புவார்கள்.

நான் எந்த புரோக்கரையும் இதுவரை அணுகியதில்லை. கடிதங்களின் மூலமாகவே நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாம். யாருடைய உதவியும் தேவையில்லை. இதற்கென ஒரு சிறிய விண்ணப்பம் இருக்கிறது. அதில் REDEEM பகுதியில் எத்தனை யூனிட் அல்லது எவ்வளவு தொகை, பகுதியாகவா அல்லது முழுவதுமாகவாக என்று குறிப்பிட்டு 5 ரூபாய் தபால்தலை ஒட்டி அனுப்பினால் 4 அல்லது 5 தினங்களில் கணக்கு முடிக்கப்பட்டு நமது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இப்படித்தான் நான் ஆரம்பம் முதலே செய்துவருகிறேன். எந்த வங்கியையோ அல்லது புரோக்கரையோ நாடவில்லை. என்னிடம் விவாதிப்பதைவிட வேறு யாரையாவது கேட்டுப்பாருங்கள்.

ஆன்லைனில் இப்போது வாங்கலாம் விற்கலாம், அதே மியூட்சுவல் ஃபண்டில் வேறு திட்டத்துக்கும் மாற்றலாம். டிமேட் கணக்கு வைத்திருந்து ஆன்லைனில் வர்த்தகம் செய்பவருக்கு மியூட்சுவல் ஃபண்டிலும், கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கு வழி இருக்கிறது.இப்படித்தான் நான் செய்து வருகிறேன்.

இப்போது புதிதாக எனது பதிவில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை இணைத்திருக்கிறேன் பாருங்கள். இப்போதும் நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரில்லை என்றால்… மன்னிக்கவும்….

வவ்வால் said... [Reply]

கவிப்பிரியன்,

சரியாப்போச்சு போங்க, நீங்க ஆன் லைனில் மியுட்சுவல் ஃபண்டில் ஷேர் வாங்கி,விற்றதாக சொன்னது இப்படித்தானா அவ்வ், நானும் நீங்க எப்படி ஷேர் வாங்கி விற்றிருக்க முடியும் என குழம்பி போய் தான் கேட்டிக்கிட்டுருக்கேன் ,நீங்க செய்தது எல்லாம் அம்மியுட்சுவல் ஃபண்டின் "NAV units' கேன்சலேஷன் மற்றும் மறு கொள்முதல்.

இது முழுக்க முழுக்க மியுச்வல் ஃபண்டின் போர்டலுக்குள் நடப்பது.

மியுச்சுவல் ஃபண்ட் மூலமாக நாம் அவர்கள் விற்கும் சிறு யூனிட் ஒன்றினை "NAV" மதிப்பு உ.ம் ரூ 10 என்ற அளவில் வாங்குவதே,ஒரு ஷேரையும் முழுசாக கூட வாங்குவதேயில்லை. நீங்கள் விற்பதாக சொன்னது யூனிட்களை ஓபன் என்டில் கேன்சல் செய்வது, பின்னர் மீண்டும் விருப்பம் இருந்தால் யூனிட்களை மாற்றி வாங்குவது, இதற்கும் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு நிறுவனத்தின் ஷேருக்கும் சம்பந்தமே இல்லை.

நீங்கள் செய்தது ஷேர் டிரேடிங்கே இல்லை, ஆனால் ஷேர் டிரேடிங் செய்ததாக நினைத்துக்கொண்டே இன்னமும் இருக்கிறீர்கள் என்னத்த சொல்ல அவ்வ்!

நாமே ஷேர் டிரேடிங் செய்யும் போது பத்து ரூபாய் ஏறினால் நமக்கு பத்து ரூபாய் லாபம் எனக்காட்டும் ஆனால் SIP mutual இல் units NAV இல் ஒரு ரூபாய் ஏறினாலே அதிகம், எனவே ஷேர் டிரேடிங் வேறு மியுச்சுவல் டிரேடிங் வேறு.

ஷேர் மார்க்கெட்டின் ஃப்ளக்சுவேஷனுடன் மியூசுவல் ஃபண்டினை தொடர்பு படுத்திக்கொண்டு பதட்டப்பட்டுக்கிட்டு இருப்பீங்க போல, மியூச்வல் ஃபண்ட் பொதுவாக மெதுவாகத்தான் வளர்ச்சியை காட்டும், காசு ரொம்ப மிச்சம் இருக்கு சும்மா போட்டு வைப்போம்னு தான் செய்யனும்,ஆனால் நல்ல லாபம் கொட்டும்னு வசிகரமாக சொல்வதை நம்பி காசுப்போட்டால் ஏமாற்றமாகத்தான் இருக்கும் :-))

//ஒருவேளை வங்கியில் நீங்கள் கொடுத்தால் கூட அவர்களிம் இங்கேதான் அனுப்புவார்கள்.
//

வங்கியில் முடியாது என சொல்லிவிட்டு அப்புறமா என்ன ஒரு வேளை :-))

ஸ்டேட் வங்கியின் பெரும்பாலான கிளைகளில் மியுட்வல் ஃபண்ட் மேனஜர் என்றே ஒருவர் இருக்கார்,அவரு தான் இந்த வேலைய எல்லாம் பார்க்கிறார் என்னை இப்படி முதலீடு செய்ய சொன்னதும் அவ்வங்கி மேனஜரே(அவரு பேச்சைக்கேட்டுத்தான் ஏமாந்தேன் அவ்வ்),நான் இரண்டு முறை வங்கியில் சென்றே எனது வேலைகளை முடித்துக்கொண்டுள்ளேன், எல்லா வங்கியிலும் இவ்வசதி இருக்கானு தெரியலை, கேட்டால் விவரம் சொல்வார்கள்,ஆனால் நீங்கள் எப்படி SBI mutual வங்கியில் முடிக்கவோ,ஆரம்பிக்கவோ முடியாது என சொல்கிறீர்கள் எனத்தெரியவில்லை.

பின்குறிப்பு:

பங்கு வர்த்தகம் என்பது போலவே பதிவில் எல்லா இடத்திலும் சொல்லியுள்ளீர்கள் தெளிவாக இல்லை.

//எவ்வளவு முயற்சி செய்தும் ஜாவா செட்டிங்ஸ், பாப்அப் பிளாக்கர், ஃபயர்வால் செட்டிங்ஸ் என எல்லாம் செய்தும் முயற்சி பலனளிக்கவில்லை.//

இப்பிரச்சினையை சொல்லும் போது கூட என்ன ஆபரேட்டிங் சிஸ்டம்,பிரவ்சர் என்னனு சொல்லாமல் பொத்தாம் போதுவாகவே சொல்லியுள்ளீர்கள்.

பழைய சிஸ்டம் எனில் விண்டோஸ் எக்ஸ்பி எனில் சர்வீஸ் பேக் -2 போட்டு அப்டேட் செய்யவில்லை எனில் சில பிரச்சினைகள் வரும், மேலும் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியிலும் பிரச்சினை வரும். பொதுவாக ஒப்பன் சோர்ஸ் உலாவிகளில் சில சமயம் ஜாவா ,ஜாவாஸ்கிரிப்ட் ஒருங்கிணைந்து செயல்படுவதில் பிரச்சினை வருகிறது. ஏன் எனில் காபிரைட்டைட் புரோகிரம்கள் தர்ட் பார்டி வகையில் ஒருங்கிணைக்கப்படுவதலாகும்.

வின் - 7 மற்றும் எக்ஸ்பிளோரர், குரோமில் பிரச்சினைகள் வருவதில்லை, அப்படியும் வேலை செய்யவில்லை எனில் செர்வர் சைட் பிரச்சினை ,நம்ம பக்கம் சரியாக இருக்குனு சொல்லலாம்.

Anonymous said... [Reply]

//It is better to trade in online commodity trading wherein you can earn 5 to 10 thousand rupees per month for an investment of Rs.1,00,000/=.

If interested please contact, and i will guide you to trade and earn safely in commodity online trading. My mobile No. 9003199210 - G RAMAN//

அய்யா சாமி NSEL ஒண்ணு போதுமே. 5500 கோடி ரூவா காலி. commodity சங்காத்தமே ஆகாது. ஆள உடுங்க.

Anonymous said... [Reply]

என்ன வவ்வால் காரிகன் காசெட் கடைய கண்டுக்காம அம்போனு விட்டுட்டு இங்க வந்து கவிப்பிரியன கலாய்ச்சிட்டிருக்கீங்க?

அவரப் பாத்தா இப்பத்தான் தமிழ்மணத்தில இணைஞ்சிருக்காரு போலருக்கு. பாவம் பொழச்சிப்போகட்டும். அவரை கெடா வெட்டி பதிவுலகத்திலிருந்தே விரட்டி விட்றாதீங்க.

யார் யாருக்கெல்லாமோ நோபல் பரிசு தர்ரானுகளே. தல உங்களுக்கு ஏன் இன்னும் தரல? Bad boys!

Anonymous said... [Reply]

//எவ்வளவு முயற்சி செய்தும் ஜாவா செட்டிங்ஸ், பாப்அப் பிளாக்கர், ஃபயர்வால் செட்டிங்ஸ் என எல்லாம் செய்தும் முயற்சி பலனளிக்கவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உதவிமையத்தின் ஆலோசனைகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் புதிய முதலீட் எதையும் செய்ய முடியவில்லை. வாங்கி வைத்திருக்கும் பங்குகள் எதையும் விற்கவும் முடியவில்லை!

இதற்கும் வழி தெரியவில்லை. தொழில்நுட்ப பதிவர்களோ அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களோ எனக்கு உதவுவீர்களா? //

https://www.sbicapsec.com/Trading/FAQs.html#sysreq

System Requirements

What are the basic system requirements for Online Trading?
The Operating System should be Windows 98 (2nd Edition), Windows XP, Windows Professional 2000, etc.
Internet Explorer 5.5 or above
You can download and install Internet Explorer from the Website of Microsoft Corporation http://www.microsoft.com

Java Virtual Machine
To install Java

Go to the website: http://www.sbicapsec.com
Click on "Java". This will open a browser window with the website of Java
Click on "Free Java Download". Follow the installer to install Java
Internet Connection

What are the system settings that I should make before starting Online Trading?
Use only Internet Explorer as the browser. No other browser will currently support the trading platform.
Before login in, please complete the following process
Open Internet Explorer >>Tools >>Internet Options. In it, go to:
General: Please delete all Temporary Internet Files and Cookies also clear History.
Advanced: Find Java Sun and select "Use JRE 1.6.0_07"
Also find Security and

Please select "Use SSL 2.0"
Please select "Use SSL 3.0"
Please deselect "Use TSL 1.0"
If your Operating System is Windows XP then please disable the Antivirus when you login to the system
Please remove the "Google" and "Yahoo" tool bars from Internet Explorer
Please set the screen resolution to 1024*768 (32 Bits) (Desktop Properties)
Please disable the Pop up Blocker from your system. For this in Internet Explorer go to Tools >> Internet Options and select "Turn off Pop-up Blocker"

பங்குச்சந்தை ஆர்வலன் said... [Reply]

ஆமா பங்குத்தளத்த திறக்க முடியலன்னு சொன்னீங்க. இப்ப ஸ்கிரீன் ஷாட் போடுறீங்க. இது வேற கணிணியா?

1. IE, Chrome, Mozilla Firefox, Apple Safari போன்ற உலாவிகள்ள முயற்சி செஞ்சு பாருங்க.

2. https://www.sbicapsec.com/trading/healthcheck/systemchk.aspx

மேலே உள்ள சுட்டியில அதுவே என்ன இல்லனு சொல்லும்(னு நெனக்கிறேன்).

3. http://blog.applegrew.com/2012/08/hack-sbicapsec-com-to-run-on-firefox/

உங்களப் போல ஒருத்தர் ஏதோ நோண்டிப் பாத்து தளத்த புடிச்சிட்டாரு.

4. http://www.fixya.com/support/t2463798-unable_see_market_prices_in_sbicapsec

5. http://windowsbits.blogspot.in/p/sbicapsec-trading-platform-not.html
(அவ்வளவா வொர்த் இல்ல போல)

பொறுப்பு-துறப்பு : உங்கள் சொந்த ரிஸ்கில் அருகே technical troubleshooting தெரிந்த ஆளை வைத்துக்கொண்டு உங்கள் கணிணியை நோண்டவும்.
டிப்ஸ்: ஒவ்வொரு ஸ்டெப்பையும் எழுதி வைத்துக் கொண்டால் வேலை செய்யாத போது ரிவர்ட் செய்ய ஏதுவாக இருக்கும்.

All the best!

Anonymous said... [Reply]

//ஸ்டேட் வங்கியின் பெரும்பாலான கிளைகளில் மியுட்வல் ஃபண்ட் மேனஜர் என்றே ஒருவர் இருக்கார்,அவரு தான் இந்த வேலைய எல்லாம் பார்க்கிறார் என்னை இப்படி முதலீடு செய்ய சொன்னதும் அவ்வங்கி மேனஜரே(அவரு பேச்சைக்கேட்டுத்தான் ஏமாந்தேன் அவ்வ்)//

என்னாது? டினோசருக்கே அடி சறுக்குச்சா?
நமக்கு ஒரு குறைன்னா ஆத்தாகிட்ட முறையிடலாம். அந்த சாமிக்கே ஒரு குறைன்ன எங்க போய் முறையிட? அவ்வ்வ்வ்வ்!

Anonymous said... [Reply]

//பின்குறிப்பு:

பங்கு வர்த்தகம் என்பது போலவே பதிவில் எல்லா இடத்திலும் சொல்லியுள்ளீர்கள் தெளிவாக இல்லை.//

சிறுகுறிப்பு: தல எதுக்கும் இன்னொருவாட்டி பாதாதிகேசம் ஒரேமுட்டா படிச்சிப் பாருங்க. அது வந்து நீங்களே மானே,தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்குவீங்கன்னு நெனச்சிட்டாரு போல. ஆனா குறளுக்கே 14 உரைகளைத் தாண்டி 15-வதா புது வியாக்கியானம் செய்றவர் நீங்கனு அவருக்குத் தெரியல போல. பாவம் புதுசு இல்லியா?

Anonymous said... [Reply]

Hello Nanba!,

Naan Share / Mutual fund ku puthusu,

Ippa monthly 5000-10000 varai invest panlamnu iruken
yentha mutual fund best nu konjam guide panna mudiyuma?

Ippadikku
-Siva

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!