ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பெயரற்ற கடிதங்கள்



நீண்ட இடைவெளிக்குப் பின்
நிகழும் சந்திப்பு...
பகிர்ந்து கொள்ள
பல நினைவுகள் இருந்தும்
மௌனம் என்ற
நாகரிகப் பார்வையில்
நகர்ந்து கொண்டிருந்தது நேரம்!
பிரிகையில்...
உன் குடும்பம் பற்றி நீயும்
என் குடும்பம் பற்றி நானும்
உப்புச்சப்புமில்லாமல்
பேசி முடிக்கையில...
தப்பித்தவறிக்கூட அந்த
பழைய பார்வையை
பார்க்கவே இல்லை
உன் கண்களில்.


எல்லாவற்றையும்
மறந்தது போல்
யதார்த்தமாய் பேசும் நீ!
பழகிய நாட்களில்
எனக்கு எழுதிய
பெயரற்ற கடிதங்களை
இனியும் நான்
பாதுகாத்து வைப்பதில்
பயனில்லை!
குப்பைக் கூடையில்
போடவேண்டும்!
சரி....
நீங்காமல் நெஞ்சில் கிடக்கும்
பழைய நினைவுகளை
என்ன செய்வது?

நன்றி; மீரா பழனி, சென்னை.

 

4 கருத்துகள்:

அம்பலத்தார் சொன்னது… [Reply]

அவசரப்பட்டு நெஞ்சத்தையும் தூக்கிக் குப்பையிலை போட்டிடாதையுங்கோ. வேறொருத்திக்கு கொடுக்கத்தேவைப்படும்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருக அம்பலத்தாரே! இதுவரை யாரும் கிடைக்கவில்லையே?! என்ன செய்வது?

பெயரில்லா சொன்னது… [Reply]

superaa irukku kavithai...

appudilaam romba nal serthu vaikkatheergal ayyaa...ippo thane bogi sendrathu..appothu koluththi irukkalam thane...aduththa bogikkaavathu koluththivida vaazthukkal ayya...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மறக்க முடியாத நினைவுகளை என்ன செய்வது கலை?

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!