எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
முகமும் அற்று முகவரி அற்று
முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்!
இல்லம் அலுவல் இரண்டிலும் நொந்து
இரட்டைச் சுமைக்கு ஆளானோம் !
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
இப்போதாவது சிறை உடைப்போம்
எத்தனை காலம் உறங்கி விட்டோம்!
பெண்கள் ஜாதி உலகில் பாதி
என்பதை உணர்த்த குரல் கொடுப்போம்!
நாணம் சுமந்த பெண்கள் எழுந்து
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
வானம் சுமக்கும் காலமிது!
ஆடை நகைகள் அணிந்தது போல்
ஆயுதம் அணியும் காலமிது!
ஆணும் பெண்ணும் எதிலும் பாதி
அறிவியல் சொல்லிய வேதமிது!
பெண்ணின் இறக்கை பறியாதிருந்தால்
வானம் அவர்களின் எல்லையன்றோ!
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
ஆணும் பெண்ணும் ஆணையிட்டழைத்தால்
வானம் பூமியில் வந்திறங்கி வணங்காதோ!
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
இன்றே தோன்றின எங்கள் முகங்கள்!
8 கருத்துகள்:
இதுவரை அறியாத கவிதை
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
tha.ma 2
தொடர் வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி ரமணி அவர்களே!
மீண்டும் தூண்டிய நினைவுகள் நன்றி நினைவு படுத்தியதற்கு
பெண்மையை நுட்பமாக பரட்டியவிதம் சிறப்பு பாராட்டுகள்
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கோவை.மு.சரளா அவர்களே!
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கோவை. மாலதி அவர்களே!
போடா லூசு!!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!