திங்கள், 26 செப்டம்பர், 2011

எனக்கு இந்தியாவில் இருக்கிற நண்பர்கள் வேண்டாம்!

ஆங்கில வழியில் படித்த என் அண்ணன் மகள் எனக்கு எழுதிய கடிதம் இது. எனக்கு இருக்கிற பேனா நட்புகளைப் பார்த்து அவளுக்கும் ஆர்வம் பிறக்க எனக்கும் சில நட்புகளை அறிமுகப் படுத்துங்களேன் சித்தப்பா என்றாள். நானும் எனது மயிலாடுதுறைத் தோழி மாலாவை அறிமுகப்படுத்தி வைத்தேன். மாலாவும் அவருக்கு கடிதம் எழுதினார். 

ஆனால் என்ன காரணத்தினாலோ என் அண்ணன் மகள் மாலாவிற்கு பதிலே எழுதவில்லை. நான் ஏன் பதில் எழுதவில்லை என்று விசாரித்தபோது, போங்க சித்தப்பா எனக்கு இந்தியாவில இருக்கிற நண்பர்கள் வேண்டாம். ஃபாரின்ல இருக்கிறவங்கள அறிமுகப்படுத்துங்க, அப்பதான் கிஃப்ட்டுங்க, கிரீட்டிங்ஸ் எல்லாம் வரும். அதோட எனக்கு இங்லீஷ்லதான் லெட்டர் எழுத வரும். தமிழ்ல என்னால எழுதமுடியாதுன்னு சொன்னாள்.


பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு போகவேண்டிய தருணம் வரும்வரை தமிழிலே எனக்கு எழுத வராது என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? இந்தத் தலைமுறையை என்ன சொல்வது? எப்படி மாற்றுவது? ஆனல் இவள் என் அண்ணன் மகளாயிற்றே! எப்படியாவது தமிழில் எழுத பயிற்சி கொடுக்க எண்ணி, எனக்கு தமிழிலேயே கடிதம் எழுதச் சொன்னேன்.


21.12.1996 – ல் இவள் எனக்கு எழுதிய கடிதம்.


அன்புள்ள சித்தப்பாவிற்கு,
சரண்யா எழுதும் முதல் கடிதம். நான், அம்மா, தங்கை, தம்பி அனைவரும் நலம். நீங்கள் தொத்தா, குழந்தை அனைவருடைய நலத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். அப்பாவுக்கு வைத்து வலியால் இருந்தார். Thursday அப்பாவுக்கு வைத்து வலி இருந்தது. அதானல் ஆஸ்பிட்டலுக்கு போய் வந்தார். எதுவும் இல்லை என்று Doctor கூறினார். Tuesday இரவு நன்றாகத்தான் இருந்தார். ஆனால் புதன் கிழமை காலையில் ரெம்ப வைத்து வலியால் துடித்தார். அப்பாவுக்கு வைத்து வளியை தாங்க முடியவில்லை.


அம்மாவும் பக்கத்து வீட்டில் உள்ள Uncle, aunty –யும் அப்பாவை ஆஸ்பிட்டலுக்குச் சென்றனர். அப்பொழுது Operation செய்ய வேண்டும் என்று Doctor கூறினார். அதனால் Operation செய்தனர். இப்பொழுது நன்றாக இருக்கிறார். தாத்தா, பாட்டி, அத்தை, மாமி, மாமா அனைவரும் வந்து அப்பாவைப் பார்த்தனர். அப்பாவை நான்கு நாட்கள் Hospital லில் இருக்கும்படி கூறினார். எங்களுக்கு 21.12.1996 அன்றுதான் எங்களுக்கு EXAM முடிந்தது. எங்களுக்கு 02.01.2007 வரை விடுமுறை. அம்மா Hospital லில் இருக்கிறார்கள்.


உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. 22.12.96 or 23.12.96 க்கு அப்பாவை வீட்டிற்கு அனுப்புவதாக Doctor கூறினார். உங்கள் வரவை எதிர்பார்க்கறோன். Pongal - லுக்கு leave இருந்தால் அவசியம் வரவும். Advance Happy New Year and Happy Pongal to சித்தப்பா, தொத்தா and குட்டிப் பாப்பா.


இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள,
சரண்யா.

இப்போது படித்தாலும் இதிலுள்ள பிழை, எழுத்துநடையைக் கண்டால் சிரிப்புதான் வருகிறது. கோபித்துக் கொள்ளாதே சரண்யா!

கடிதம் குறித்த ஒரு பதிவு வேடந்தாங்கல் என்ற வலைத்தளத்தில் 'நன்றி மறந்தோமா நாம்... அன்புள்ள கடிதத்திற்கு' போய்ப்பாருங்கள்.


10 கருத்துகள்:

Mathuran சொன்னது… [Reply]

என்ன செய்வது நண்பா.. வெளிநாட்டில் உள்ள எமது சந்ததி தமிழ் மொழியை மறந்து வருவது வேதனைதான்

அம்பலத்தார் சொன்னது… [Reply]

உங்க Blog ஐ திறக்க ரொம்ப நேரமாகிறது கொஞ்சம் கவனியுங்க பாஸ்

அம்பலத்தார் சொன்னது… [Reply]

ஒன்றைப் பெற மற்றொன்றை இழக்கவேண்டி இருக்கிறது.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி மதுரன். வெளிநாட்டிலுள்ள சந்ததி மட்டுமில்லை. இங்கிருக்கும் சந்ததிகளுக்கும் கூட தமிழ் எழுத, படிக்க வரவில்லை என்பதே வேதனையான செய்தி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தகவலுக்கு நன்றி அம்பலத்தாரே! என்ன காரணம் என்று ஆராய்கிறேன். சரி செய்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆம் ஆங்கிலம் கற்கப்போய் தமிழ் தன் தகுதியை இழந்து விட்டது.

aotspr சொன்னது… [Reply]

ஆங்கிலம் கற்கப்போய் தமிழ் படும் பாடு.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி கண்ணன். தொடர்ந்து வாருங்கள்!

baleno சொன்னது… [Reply]

உங்கள் அண்ணன் மகள் எவ்வளவோ பரவயில்லை. எழுதும் போது சில ஆங்கில சொற்களை பாவித்திருக்கிறார். தமிழ்நாட்டு தொலைகாட்சியின் வீடியோ காட்சிகள் சில பார்த்திருக்கிறேன், சகிக்க முடியாதவை. ஆங்கிலம் தங்களுக்கு தெரியும் என்று காட்டுவதற்காக அப்படி கதைக்கிறார்களா என்று சந்தேகபட்டோம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தமிழ்நாட்டுத் தமிழ் தரமிழந்துகொண்டுதான் இருக்கிறது. அதே சமயத்தில் இணையத்தில் தமிழ் வளர்ந்து கொண்டும் இருக்கிறது நண்பரே! தங்களின் வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!