புதன், 21 செப்டம்பர், 2011

விஜயகாந்தைக் கிழிக்கும் தினமலர்

அப்பட்டமான அ.தி.மு.க. சார்பு நாளேடான தினமலர் தி.மு.க. வை தாளித்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது விஜயகாந்திற்கு அந்த யோகம் அடித்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது இந்த விஜயகாந்த் தன் கட்சி வேட்பாளரை அடித்ததைக் கூட இந்த நாளேடு இருட்டடிப்பு செய்தது. அந்த அளவுக்கு ‘ஜெவுக்கு விசுவாசத்தைக் காட்டியது நினைவிருக்கலாம்.
ஆனால் இப்போது எல்லாம் தலைகீழ். எப்போது ‘ஜெ ‘எங்களுக்கு பாலபாடம் நடத்த வேண்டாம் என்று சட்ட சபையில் பேசினாரோ அப்போதிலிருந்து இந்தப் பத்திரிகையும் வழக்கம் போல விஜயகாந்த் மீதும் தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறது.

செய்திகளையொட்டி வாசகர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். இதை ஆசியரோ, அல்லது ஆசிரியர் குழுவோ பரிசீலித்தபின் தான் வெளியிடுவார்கள். அதிலேயே தெரிந்துவிடும் அவர்களின் நடுநிலைமை வேடம்.


கீழே பாருங்கள் நேற்றைய (20.09.2011) தினமலரின் செய்தியையும், அதற்கு வாசகர்கள் அளித்துள்ள பதில்களையும்!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.க., கழட்டி விடப்படும் நிலை உருவாகியுள்ளதால், தே.மு.தி.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனித்தோ, காங்கிரசுடன் சேர்ந்தோ போட்டியிடுவதை விட, அ.தி.மு.க.,வுடன் சமரசமாக போகவே, தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகள் விரும்புகின்றனர்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 29 இடங்களை கைப்பற்றி, தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அமைந்தது.சட்டசபைத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், கிளை நிர்வாகிகள் வரை போட்டியிட வாய்ப்பு அளித்து, அவர்களை திருப்தி படுத்தும் நிலைபாட்டை, தே.மு.தி.க., தலைமை எடுத்திருந்தது.இதனாலேயே உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை, பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், எவ்வித எதிர்ப்பு குரலும் இல்லாமல், அமைதி காத்து வந்தது.தமிழகத்தில் உள்ள, 10 மேயர் பதவிகளில், இரண்டு முதல் நான்கு வரையும், அனைத்து பதவிகளிலும், 30 சதவீதம் வரை சீட்களை கேட்டுப்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தே.மு.தி.க.,வினர் இருந்தனர். இதன் மூலம், கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, தோல்வியடைந்த நிர்வாகிகளை திருப்திபடுத்தவும் திட்டமிட்டிருந்தது.

ஆனால், அதற்கு பயனில்லாமல், தன்னிச்சையாக, அ.தி.மு.க., சார்பில், மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.அதன் பின் நடத்திய பேச்சுவார்த்தையிலும், மிக சொற்பமான இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தே.மு.தி.க., நிர்வாகிகள், தனித்து போட்டியிடுவது அல்லது மற்ற கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணியில் போட்டியிடுவதா என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறது.


ஆனால், தனித்து போட்டியிடுவதற்கு, தே.மு.தி.க., நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சட்டசபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கட்சி ரீதியாக மக்களை கவரும் வகையில், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், தனித்து போட்டியிட்ட போது இருந்த செல்வாக்கிலும், தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடும் போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால், 90 சதவீதத்துக்கும் மேலான இடங்களை கைப்பற்றிவிடலாம் என, தே.மு.தி.க.,வினர் எண்ணுகின்றனர்.இத்தனை நாட்கள், "அமைதி காத்து' வந்ததை எடுத்துக்கூறி, அ.தி.மு.க., கூட்டணியில் கூடுதல் சீட்களை பெற, தே.மு.தி.க., நிர்வாகிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

தினமலர் ஆசிரியரால் எடிட் செய்யப்பட்ட வாசகர் கருத்துக்கள் !!!

  • வேற வழி? நீ அந்தம்மா கால்ல உழுந்து தானே ஆகணும்? அது தெரிஞ்சு தான் மம்மி உனக்கு ஆட்டம் காட்டுறாங்க. உன் ஆளுங்க மம்மி கிட்ட காரியம் சாதிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னிக்கு கூட உன் எம்.எல்.ஏ ஒருத்தரு நில மோசடி புகார்ல சிக்கிருக்கிறதா சன் நியுஸ்ல செய்தி வந்திருக்கு. உனக்கு தான் எதுவும் தெரியாதே பாவம். ‘கொரங்கு தன் பின் பக்கத்த தானே பாத்து பாத்து பெருமைபட்டுக்குமாம். அது மாதிரி, நீ உன் கேழப்டன் டிவி தவிர வேற எதையும் பாக்க மாட்டே. சரி அத விடு. உன் ஆளுங்க ருசி கண்ட பூனைங்க ஆயிட்டாங்க. ஓவரா டயலாக் உட்டேன்னு வைய்யி, மவனே உன் டிராயரை கழட்டிடுவாங்க. மம்மி கால்ல ஒரு தரம் உழுந்தா அது நூறு தரம் இல்ல, ஆயுள் பூரா உழுந்ததுக்கு சமம். வெளிய போனா நீ போணி ஆவ மாட்டே. உனக்கு எதுக்கு ரோஷமும், மானமும்? என்னமோ உன் தயவுல அந்த பொம்பளை சி.எம்.ஆயிட்ட மாதிரி நீ மப்புல மொதக்குற. தப்பு நயினா.அது சாமி குத்தம் ஆயிடும். கன்னத்துல போட்டுக்கிட்டு அந்தம்மா குடுக்குறத கும்பிட்டு வாங்கிக்க பாசு; உனக்கு வேற வழி இல்ல. எப்படியும் இதே முடிவுக்கு தான் நீ வரப்போறே. எதுக்கு இந்த பில்டப்பு. சினிமாவுல தான் உன் பில்டப் தொல்லைன்னா, அரசியல்லயுமா? தாங்கல, விஜயராஜ். சீக்கிரம் போய் மம்மி கிட்ட சரணாகதி ஆயிடு. நீ தல கீழ நின்னாலும் சி.எம். ஆவ முடியாது. வேணும்னா, சம்முவப்பாண்டி படத்துல நீ சி.எம்.ஆயிட்ட மாதிரி ஒரு சீன் வெச்சி திருப்திப்பட்டுக்க.இப்ப, நல்ல அடிமையா, அந்தம்மா கால்ல போய் விழுவியாம். ஓகேயா?
  • குடிகாரன் என்று அவரும்,நீங்கள்தான் ஊத்தி கொடுத்தீர்கள் என்று இவரும் கூறினார்கள் ..ஊத்தி கொடுதவரோடு நீங்கள் கூட்டணி வைத்தீர்கள் ...அதான் போதை தெளிந்தவுடன்,கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் ...மானமிகு சின்ன கவுண்டர் என்ன செய்ய போகிறார்???
  • முதிர்ச்சியின்மையா, ஆர்வமின்மையா அல்லது அலட்சிய போக்கா? எங்கேயோ கேப்டன் சறுக்குகிறார்; கவனம் தேவை! தொடர்ந்து இரு தேர்தல்களில் அம்மாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட முடிந்ததால் தனது முக்கியத்துவத்தை சற்று மிகையாக உணர்கிறார் என்று தோன்றுகிறது. நினைத்துப் பார்க்கவே முடியாத வெற்றியை வழங்கி எதிர்க்கட்சி தலைவராகவும் ஆக்கிய மக்களை வேதனைப் படுத்துகிறார். சட்ட மன்றத்திற்கு வருவது கிடையாது என்பது ஒரு புறம்; உள்ளாட்சி தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய அதிமுக 15 நாட்களுக்கு முன்பே குழுவை நியமித்தும் கேப்டன் மெத்தனமாக இருந்தது அவருக்கும், கட்சிக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்காது! இதில் அம்மாவை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்? கூட்டணி கட்சியுடன் நல்லுறவு வேண்டும் என்பதற்காகவும், ஆணவப் போக்கு என்ற விமரிசனம் எழாதிருக்கவும் ஆட்சியில் உள்ள பெரிய கட்சி காத்திருக்க வேண்டும் என்பது சிறு பிள்ளைத்தனமான வாதம். யதார்த்தங்களை புரிந்துகொண்டு செயல் பட்டால் ஒரு மாற்றாக உருவாகலாம்; இல்லாவிடில் த்மிழ் தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, கள் வேண்டுவோர் கழகம் இந்த மாதிரி கட்சிகளின் கதிதான் கேப்டன் கட்சிக்கும்!
  • ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? கட்சி ஆரம்பித்த புதிதில் எல்லோரையும் கையாலாகதவர்களாகவும், அரசியல் நடத்த லாயக்கில்லாதவர்களாகவும், தான் மட்டுமே யோக்கியன்; அரசியலை சுத்தம் செய்ய வந்திருப்பவன் என்றும், மக்களோடும் தெய்வத்தோடும் மட்டுமே கூட்டணி என்றும் விதம் விதமாய் பிலிம் காட்டிய விஜயராஜ் இன்று மானம், மரியாதை, எல்லாவற்றையும் விட்டு, பதவிக்காக,மம்மி காலில் விழ தவம் கிடப்பது அந்தாளின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது; மவனே, இனி நீ வெளியிலும் போக முடியாது; இன்னொரு கூட்டணியில் சேரவும் முடியாது; எப்படி இருந்தாலும் உனக்கு ஆப்பு தாண்டி மச்சி. நீ ரோஷமா வீர வசனம் பேசி விட்டு வெளியில் போக நினைத்தாலும், உன் ஆளுங்க அந்தம்மா கால்ல விழுந்து காரியம் சாதிச்சு பணம் பார்த்து ருசி கண்டுட்டாங்க. இனி மேல் மவனே நீ என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்க. நீ ஓவரா துள்ளுனா, தனியா போயி புரட்சி தேமுதிகன்னு ஆரம்பிக்க கூட தயங்க மாட்டாங்க.கண்ணா. துஷ்ட சகவாசம் பிராண சங்கடம்னு கேள்விப்பட்டு இருக்கியா? நம்ம மம்மி அந்த ரகம். ஒரு வாட்டி உள்ளே போயிட்டா வெறும் சக்கையா தான் வெளிய வரணும். கண்ணா, வைகோ, ராமதாஸ், திருமா இவுங்கள பாத்தும் உனக்கு புத்தி வரலியே. மொட்டை தலை மேதாவி பேச்சை கேட்டு வீணா போயிட்டியே. நெறைய எம்.எல்.ஏ கிடைச்சா, நாலு காசு பாக்கலாம்னு நீ அந்தம்மா கூட சேந்தே. அவங்க எலிக்கு மசால் வடை வக்கிற மாதிரி, உன் ஆளுங்களுக்கு சிலபல காரியங்கள செஞ்சு குடுத்து, உனக்கு எதிராவே திருப்பிட்டாங்க. ருசி கண்ட உன் ஆளுங்க இனி உன் பேச்ச கேக்க மாட்டாங்க. நீ இன்னும் சினிமா நெனைப்புலையே இருக்குற;மாமூ,இது அரசியல் மாமூ. இன்னும் நாலு வருஷம் போனா, வேணாம்பா அது வரைக்கும் உன் கட்சி இருக்க வேணாம்; இருக்கவும் கூடாது. உன் மச்சானே உன்னை கவுத்துட்டு, தலைவராயிடுவான். ஏன்னா, இது வியாபாரம் கண்ணு. அக்காங்.பேசாம, மம்மி போடற எலும்பை கவ்விக்கிட்டு, அஞ்சு வருஷமும் வாலாட்டிக்கிட்டு இரு. இல்லியா, என் ஆசான் எம்.சி.ஆரு ஆரம்பிச்ச இயக்கத்துல என் கட்சியை சேக்குரதுல பெருமை படறேன் அப்டீன்னு அறிக்கை உட்டுட்டு ஐக்கியமாயிடு; அதான் வழி. இனிமே உனக்கு ஏழரை தாண்டி ஜிங்லி. உனக்கு ஒழுங்கா ழ வே வராது; நீ சினிமாவுல நடிச்சதே பெருசு; பேசாம அதுலயே இருந்து இருக்கலாம். எதுக்கு அரசியலுக்கு வந்தேடி என் செல்லம். வந்தாலும் மம்மி கூட சேர்ந்தியே, அங்க தாண்டி நீ பெரிய தப்பு பண்ணிட்டே, சரி. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும். அனுபவி.உனக்கு இது போதாது,.இன்னும் எவ்வளவோ மம்மி குடுக்க போறாங்க. வாங்கிக்க. வர்ட்டா.

  • தே.மு.தி.க ,,,அதிமுகவோட தவறுகள சுட்டிக்காட்டனுமா? நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க ராஜேஷ்? ஏற்கனவே தேமுதிக முதல் முதலா வாய தொரந்ததுக்கே அம்மா தெளிவா சொல்லிட்டாங்க எங்களுக்கு சின்னப்புள்ள இஸ்கூல் மாறி பால பாடம் எடுக்கவேனாம்னு..அதுவும் என்னமோ மேடையில் திருவிழாவுக்கு பேசுவது போல சட்டசபையில் பேசி அம்மாவ கடுபேத்தி இருக்கானுக...ஹி ஹி ஹி...இவனுகளா தவறுகள சுட்டி காமிக்க போறானுக?எந்த ஊருல ஆளும் கட்சிக்கு அடி வருடியா எதிர்க்கட்சி இருந்திருக்கு?ஆளும் கட்சிட்ட அஞ்சுக்கும் பத்துக்கு வெக்க மானம் இல்லாம கையேந்தி கிடைப்பதை வாங்கும் சூழ்நிலையில் இருக்கும் இவரை போய்..அட போங்கண்ணே சும்மா தமாஷ் ரொம்ப பண்றீங்க நீங்க.......
  • அரசியலில் "இமேஜ்" என்பது முக்கியம். சீட் கூடுதலாகவோ, குறைவாகவோ ஜெயித்தால் கூட இமேஜை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும்போது அவர் முதலில் காலி செய்வது கூட்டணிக்கட்சிகளின் "இமேஜை"தான். வைகோ, திருமா, ராமதாஸ் எல்லோரும் இதற்கு உதாரணம். கூட்டணிக்கட்சிகளின் நிர்பந்தத்துக்காக தன்னுடைய இமேஜை விட்டுக்கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு கடந்த தேர்தலில் தி.மு.க.வின் நிலை ஒரு பாடம். தன்னுடைய தலைவன் ஒரு கெத்தாக இருப்பதைத் தான் தொண்டன் ஏற்றுக்கொள்ளுவான். இந்த தேர்தலில் ஜெயலலிதா தூக்கிப்போடுவதை ஏற்றுக்கொண்டால் தே.மு.தி.க.வுக்கு இதுவே beginning of the end ஆக இருக்கும். கேப்டனை இந்த இரண்டு கழகங்களிடமிருந்தும் தமிழகத்தை காப்பாற்ற வந்தவராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். இந்த தேர்தலில் தனித்து நின்று சற்று கூட-குறைய சீட் ஜெயித்தாலும் பரவாயில்லை, உங்களுடைய அவசியத்தை ஜெயலலிதாவுக்கு புரியவையுங்கள். இந்த தேர்தலோடு அரசியல் முடிந்துவிடப்போவதில்லை. அதனால கொசுறு சீட்டுகளுக்காக ஆசைப்பட்டு உங்களுடைய இமேஜை கெடுத்துக்காதீங்க. பண்ருட்டியாரோட பேச்சை நம்பி மோசம்போயிடாதீங்க. அவரு கூடி வாழ்ந்தா கோடி நன்மைன்னு சொல்லுவாரு. அவருக்கு "கோடி" நன்மை போயஸ்கார்டன்லேர்ந்து வந்துரும். ஆனா கட்சி காணாம போயிடும்.
  • தேமுதிகவிற்கு ஒருவித அரசியல் "அந்தஸ்தை" கொடுத்த அம்மாவிற்கு தொடர்ந்து விஜயகாந்த் ஆதரவை கேட்டு காத்திருக்க கூடாது. மேலும் உள்ளாட்சி தேர்தல் என்பது பொதுவாய் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் பதவிக்கு வர சந்தர்ப்பம் உண்டு. இது கட்சியினரின் செயல்பாட்டிற்கு கிடைக்கும் உரைகல் சந்தர்ப்பம். அதிமுக சென்ற ஆட்சியில் தொடர்ந்து உள்ளூர் பிரச்சினையை எடுத்துகொண்டு "தினமும்" போராடியதை நாடறியும். அப்படி போராடியவர்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆதரிப்பது அம்மாவின் கடமை. "கப்பம்" செலுத்தியவர்களுக்கு மட்டுமே "ஆதரவு" என்பது திமுகவை போன்றல்லாமல்...கட்சியில் உண்மை தொண்டர்களுக்கு பதவி கொடுத்து பாராட்டுவது அதிமுகவின் கொள்கை. அதனால் பெரும்பான்மை மேயர்..மாநகராட்சி பதவிக்கு அம்மா அவர்களின் கட்சியினரே வருவது சரியான நடவடிக்கை. மேலும் ஆளும் கட்சிக்கு பெருமை சேர்க்கும் விதமாய் உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ளவர்கள் செயல்படவேண்டும்..கட்சியின் திட்டங்கள் சரியான முறையிலே பொதுமக்களை சென்றடையும். அதற்குத்தான் இந்த முடிவினை அம்மா அவர்கள் எடுத்துள்ளார்கள். தொடர்ந்து பார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி அமைக்கலாம்..! உள்ளாட்சியில் அப்படி இருக்க முடியாது. கூட்டணி என்பது "சட்டசபை"க்கான அளவிலே ஏற்படுத்தப்பட்டது..!! ஒப்பந்தம் கூட எந்த எந்த தொகுதி என்பது என்கிற அளவிலே அமைந்த ஒன்றாகும்..! உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் ஒப்பந்தம் ஏற்படுவதும்..மறுக்கப்படுவதும்..அழைக்காமல் இருப்பதும்..கலந்துகொள்ளாமல் இருப்பதும்..ஒவ்வோர் கட்சியின் தனிப்பட்ட விருப்பம்..! அதற்காக "எதிரி"போன்று அணுகுவதும் சரியல்ல..! தேமுதிகவில் அனுபவமுள்ள பண்ருட்டி போன்றோரின் அறிவுரைகள் எவ்வளவு காலம் ஏற்கப்படும் என்று தெரியவில்லை..!! நட்புடன் தேர்தலில் போட்டியிடலாமே.? கூட்டணி இல்லை என்பதற்காக ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிடாமல் இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.! சபாஷ்..!!  
  • ஒரு தொகுதியில் ஜெயித்தாலே பெரிய விஷயம் என்றிருந்த நிலையில் எதிர்க்கட்சிஅந்தஸ்து கிடைத்ததை இன்னும் அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை, ஆசை யாரை விட்டது? ஒரே மூச்சில் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் இருந்ததேயொழிய சாதிப்பதற்கான வழிமுறையை காணத் தவறிவிட்டார்கள். தமிழக அரசியல் சாணக்கியத் தனம் என்பது ஜெயா, முக., வை சுற்றியே வர வேண்டும் என்பதில் இருவரும் குறியாக இருப்பவர்கள், அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அரசியல் அரைவேக்காடுகள். இந்த அரைவேக்காட்டுக்கு புரியும் போது இதற்கு முன் ஆட்சியை பிடிக்க மார் தட்டி மண்ணாய்ப் போன கட்சிகளின் லிஸ்டில் சேர்ந்திருப்பார்கள்.
இனி என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்???

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அரசியலை முன்னெடுக்கலாம் என்ற வெற்று கோஷத்தோடு தன் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய விஜயகாந்த் அதே கட்சிகளிடமே சரண்டைந்தார். இன்று அவரை அரசியலிலிருந்தே ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதிர்ச்சியே இல்லாத தலைவரும், அதன் தொண்டர்களும் கூட்டணி தயவில் பதவியைப் பிடித்துவிடலாம் என்ற அவர்களின் நப்பாசையில் மண் விழுந்திருக்கிறது. இனி என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்???

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!