செவ்வாய், 6 செப்டம்பர், 2011

கவர்ச்சியான காலணிகள்

செருப்பு. வசவுச்சொற்களின் போது கையாளப்படும் ஒருவார்த்தையாக எப்போது மாறியது தெரியவில்லை. ஒருவரைக் கேவலப்படுத்துவது என்றால் செருப்பை கண்டிப்பாக பயன்படுத்துகிறோம். ஆனால் இதன் பயனோ அளவிடற்கரியது. நம் கால் பாதங்களைப் பாதுகாப்பதில் இந்தக் காலணிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போதெல்லாம் கிராமங்களில் கூட செருப்பில்லாமல் வெளியே வருவதில்லை. வெயில், மழை, கரடுமுரடான பாதைகள், சாலையில் உள்ள அசுத்தங்கள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நம்மை பாதுகாப்பது இந்த செருப்புதான்.
மேல்தட்டு வர்கங்களின் வீடுகளில் பூஜை அறையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் செருப்பை உபயோகிக்கின்றனர். இப்போதெல்லாம் நாம் உடுத்தும் ஆடைகளில் கவனம் செலுத்துவதைப் போலவே, காலணிகளின் வடிவமைப்பிலும், வண்ணங்களிலும் கவனம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறோம்.
வெறுமனே வடிவமைப்பில் உள்ள கவர்சியை மட்டுமே பார்க்காமல், நம் காலுக்கு பொருத்தமான காலணியைத் தேர்வு செய்வதிலும் கவனம் இருக்க வேண்டும்.
இங்கே உங்களுக்காக விதம் விதமான காலணிகள்.....  
புதுமை விரும்பிகள் காலணியில் கூட கவர்ச்சியை விரும்புகிறார்கள் போலும்.




செருப்பு பற்றிய ஒரு கவிதை குழந்தை வளர்ப்பு கலைகள் என்ற இந்த வலைத்தளத்தில் இருக்கிறது. போய் வாசியுங்கள்.
HIGH HEELS RULES என்று செருப்பின் பெயரிலேயே இருக்கும் ஒரு சுவாரஸ்யமான வலைப்பதிவுக்கும் விஜயம் செய்யுங்கள்.
என்றும் நட்புடன்,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!