வெள்ளி, 30 செப்டம்பர், 2011

கேப்டன் மடிப்பிச்சை கேட்கிறார்! மயங்காதீர்கள்!


கேப்டன் மடிப்பிச்சை கேட்கிறார். ஏமாந்து கொடுத்து விடாதீர்கள். கட்சி பார்க்காமல் நல்ல உள்ளங்களுக்கு மட்டுமே ஓட்டை வழங்குங்கள்.

எதிர் கட்சித்தலைவரே! தற்பெருமை அடிச்சா மட்டும் போதாது. சட்டசபைக்கு எத்தனை நாள் வந்தீங்க. அந்த அம்மாகிட்ட உள்ளாட்சி, பாராளுமன்றத் தேர்தலில் குளிர் காயலாமுன்னு நினைச்சீங்க. ஆனா அந்த அம்மா ஆப்பு அடிச்சாங்க. பின்ன உங்கள வளரவிட்டா....(குறிப்பு: ஆக்கலும், அழித்தலும் அம்மாதான் 1 . பிஜேபி 2 . பாமக 3 . மதிமுக இப்போ நீங்க... 2 கம்யூனிஸ்ட்டுங்களும் வந்துட்டாங்க பின்னாடியே. புரியுதா கேப்டன்)

சட்டசபை தேர்தலில் சந்தர்ப்பம் கொடுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை வைத்து என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கூற இயலுமா? உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தவறு நடக்காது என்கிறீர்களே, அப்போது ‘சட்டசபை வெற்றி என்ன ஆனது. துரைமுருகன் பற்றி உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். நீங்கள் அதை அவர் மந்திரியாக உள்ள பொது கூறி இருந்தால்.... இப்போது யார் பொதுப் பணித்துறை அமைச்சர் என்று தெரியுமா உங்களுக்கு? சரி, சாதி வைத்து வெற்றி பெற்றவர்களை குறிப்பிடுகிறீர்களே , அந்தக் கட்சியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் சபையில் தன் கடமையை செய்கிறார்கள். விவாதங்களில் பங்கேற்று ஆதரிக்கின்றனர், விவாதத்தைப் பொருத்து எதிர்த்து வெளிநடப்பும் செய்கின்றனர்.

முதல் முறையாக இவ்வளவு செல்வாக்குடன் நீங்கள் உள்ளே சென்று முகஸ்துதி பாடி, பின் முன்னாள் ஆட்சியர்களைப் பற்றி மட்டும் பேச காரணம் என்ன? தற்போது தமிழகத்தை பற்றி அறிந்து உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கேட்கும் நீங்கள், ஏன் இதனை தமிழகத்தின் எதிர் கட்சி என்ற பெரும் பொறுப்பில் இருந்து கேட்கவில்லை?

இன்னையோட சுமார் 120 நாட்கள் ஆகியுள்ளது எதிர்கட்சித் தலைவரா நீங்க செய்த சாதனைய பட்டியல் இடுங்க, அப்புறம் உங்களுக்கு ஒட்டுப் போடலாமா? வேண்டாமான்னு? நாங்க முடிவு பண்ணுகிறோம். பாவம்யா இந்த அப்பாவி மக்கள் எவனாவது நல்லது செய்வானான்னு ஏங்குறாங்க..
ஏன் சார் உங்க முன்னாடி (சட்டமன்றம்) மைக் இருந்தது நீங்க போகலே,பேசலே, ஓட்டு போட்ட மக்களை மறந்துட்டீங்க. இப்போ தேர்தல் வருவதினாலே ஊர் ஊரா மைக்கைப் புடிச்சிட்டு திரியரிங்களே வெட்கமா இல்ல. ஓ அது இருந்தா நீங்க்கல்லாம் அரசியலுக்கே வரமாட்டீங்களே!

இதிலும் வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும் ஒண்ணும் பெருசா மாற்றம் வராது. உங்கள் கட்சி ஆட்கள் அடாவடி செய்வது உள்ளாட்சி அளவிலும் நடக்கும். கிடைத்த எதிர் கட்சி வாய்ப்பை நீங்கள் சரியாக பயன் படுத்தி இருந்தால், இப்போது கூட்டணிக்காக நிக்க தேவையில்லை. தைரியமாக வாய்ப்பு கேட்கலாம். நீங்கள் அவைக்கு வருவது கூட கிடையாது பின் என்ன சொல்வது. எவ்வாறாயினும் உங்கள் மற்றும் அனைத்து கட்சி செல்வாக்கு தெரிந்துவிடும் கொஞ்சம் நாளில்.

இதே போல் தான் இனி தவறுகள் நடக்காது என்று ஒட்டு கேட்டீர்கள். நம்பி ஒட்டு போட்டோம் ! முன்பாவது தவறுகள் நடந்து கொண்டிருந்தன. இப்போது ஹெலிகாப்டரில் அல்லவா பறக்கிறது !!

நாம் சுதந்திரம் அடைந்து 65 வருஷங்கள் ஆகிவிட்டன .....'நிறுத்தும்... இதற்குத்தானே அம்மா பால பாடம் நடத்த வேண்டாம்' என்று செம டோஸ் விட்டார்கள் ! உன் எம்.எல்.ஏக்களை கொச்சைப் படுத்தியதற்கு மறு நாள் சட்டசபைக்குப் போய், அம்மாவை வாங்கு வாங்கென்று வாங்கி இருந்தால் நீர் வீரன் ! ஆனால் அதற்க்கு பின் சட்டசபை பக்கமே தலை காட்டாத நீர் , இன்று நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று மார் தட்டுவீர், அதை நாங்கள் நம்ப வேண்டும் ! தெய்வம் மனித ரூபத்தில் தான் வருவார் ரொம்ப சரி ! ஆனால் சாத்தான் அரசியல் வாதி ரூபதில்தானே வருகிறது வேறு வேறு ரூபத்தில் ! வரவனுக்கெல்லாம் சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்பதற்கு இது என்ன நாடா! இல்லை குப்பை மேடா?...

மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்றீர் .தெய்வத்துடன் கூட்டணி வைத்து எதிர் கட்சி தலைவர் ஆனீர் .தெய்வம் பிடரியை பிடித்து வெளியே தள்ளியதால் மறுபடியும் மக்களுடன் கூட்டணி வைக்க வருகிறீர். இந்த "கறுப்பு MGR"(ஆட்டுக்கு)..கண்டிப்பாக ஒரு சந்தர்பம் கொடுங்கள் ..

நீர் நடத்தும் கல்லூரியில் காசு வாங்கி கொண்டு தானே சீட் கொடுக்குறீர் ? என்ன ஒரு பித்தலாட்டம் ! சிவந்த கண்ணை மட்டும் நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே! எல்லாம் புருடா!

உங்கள் கட்சிக்காரர்களுக்கும், உங்களுக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. எதற்க்கெடுத்தாலும் திமுக, திமுக என்று உளறுகிறீர். தமிழகத்தை நல்வழிபடுத்துவதும், திருத்துவதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இது சினிமா உலகம் என்று நினைத்துவிடாதீர் விஜயராஜ்!



கடிதம் குறித்தான சுவையான சிறுகதை ஒன்று இரா. வசந்த குமாரின் 'என் பயணத்தின் பிம்பங்கள்' என்ற வலைப்பதிவில் 'சில கடிதங்கள்' என்ற தலைப்பில்....

4 கருத்துகள்:

அம்பலத்தார் சொன்னது… [Reply]

காப்டனை வலு துணிச்சலாக ஆணித்தரமாக ஆய்வுசெய்துள்ளீர்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கருத்துக்கு நன்றி அம்பலத்தாரே!

A.R.ராஜகோபாலன் சொன்னது… [Reply]

அருமையான அசத்தலான பதிவு
அ தி மு க வின் தயவால் தான் இவருக்கு இந்த பதவி எல்லாம், சொந்த சரக்கு ஒன்னும் கிடையாது

இந்த தேர்தலில் நானோ இல்லை நீங்களோ கட்சி தொடங்கி அ தி மு கவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாமளும் எதிர்க் கட்சி தலைவர்தான், இது ஜெ வின் அரசியல் தவறு(அதனால் தான் உடனே திருத்திக் கொண்டார்)வரலாற்று பிழை.1996இல் த மா கா அமர்ந்ததைப் போலே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே! ஆனால் ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சீண்டச்சீண்ட இவர் பெரிய ஆளாகிவிடுவார். இந்தத் தேர்தலிலேயே மக்கள் இவருக்குப் பாடம் புகட்ட வேண்டும். செய்வார்களா?

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!