செவ்வாய், 20 செப்டம்பர், 2011

நினைத்ததை முடிப்போம்

கிட்டாதாயின் வெட்டென மறந்தால்
பட்டென ஆசைகள்
பறந்து போகும்.
ஆசைகள் போனால்
ஆக்கமும் போகும் – ஆக்கம்
போனால் வாழ்க்கையே போகும்.

நினைத்ததை அடைய
ஆசைகள் தேவை.
ஆசையும் கனவும் இல்லாமற்போனால்
வாழ்க்கையும் வளமும்
காணாமற் போகும்.
வாழும் வழியும் மறந்து
போகும்.

தோல்வி அடைந்தால் – அது
வெற்றியின் முதல்படி.
விரக்தி அடைந்தால் – அது
சறுக்கலின் முதல்படி!

எதிர்ப்புகள் இன்றி
வாழ்க்கையே இல்லை
எதிர்பார்ப்புகள் இன்றி
எதுவுமே இல்லை.

4 கருத்துகள்:

Mathuran சொன்னது… [Reply]

//எதிர்ப்புகள் இன்றி
வாழ்க்கையே இல்லை
எதிர்பார்ப்புகள் இன்றி
எதுவுமே இல்லை.///

உண்மைதான்..
அருமையான கவிதை.. அழகான வரிகள்
வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள்.

சம்பத்குமார் சொன்னது… [Reply]

//தோல்வி அடைந்தால் – அது
வெற்றியின் முதல்படி.
விரக்தி அடைந்தால் – அது
சறுக்கலின் முதல்படி!//

தன்னம்பிக்கை மிக்க வரிகள் நண்பரே

அருமை.வாழ்த்துக்கள்

நட்புடன்
சம்பத்குமார்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வாழ்த்துக்களுக்கு நன்றி சம்பத்குமார் அவர்களே! தொடர்ந்து வந்து ஆதரவு கொடுங்கள். காலதாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!