பட்டப் படிப்பை
முடித்திருக்கிறேன். மேற்கொண்டு என்ன செய்ய?
ஏனேனும் தனியார் கம்பனியில் உங்கள்
படிப்புக்கேற்ற வேலை தேடுங்கள். அல்லது சுயமாய் வியாபாரம் செய்யுங்கள்.
மறந்து போயும் அரசாங்க
உத்தியோகத்தில் சேர்ந்து விடாதீர்கள்! அரசாங்கத்தில் கடுமையாய் உழைப்பவர்கள் மிகச்சிலரே. டீ
குடித்துவிட்டு, பேப்பர் படித்துவிட்டு ஒரு மெத்தனமான
வாழ்க்கை உங்களைச் சுற்றிக் கொண்டுவிடும். வேலை செய்தாலும்
செய்யா விட்டாலும் மாதச் சம்பளம் வந்து விடும் என்று இருந்தால் குறைவான சம்பளம்,
குறுகிய புத்தியையும் தான் கொடுக்கும்.
வயதான பிறகு அரசாங்கம் போடுகிற
பிச்சைக் காசு பென்ஷனை நம்பிக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். அந்த இரண்டரையணா காசு மிகப்பெரிய
கர்வத்தைக் கொடுத்து உங்களை எந்த முனைப்பும் இல்லாமல் மழுங்கடித்து விடும். சுய தொழில் செய்கின்ற சவாலோ, தனியார் கம்பனியில் காட்ட வேண்டிய
ஒழுக்கமோ, வீர்யமோ இங்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்காது.
எப்போது வேண்டுமானாலும் வேறு
கம்பனிக்குத் தாவலாம் என்கிற சுறுசுறுப்போடும், மதர்ப்போடும், கம்பீரத்தோடும்
இருங்கள். அம்மாதிரி இளைஞர்கள் பலபேர் இப்போது வளர்கிறார்கள்.
ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து ஐந்து வருடத்தில்
நாற்பதாயிரம் என்று சம்பாதிக்கிறார்கள்.
உழைப்பு மறந்துபோய் சோம்பலுடன்
உயிரோடு இருப்பதை விட இல்லாமல் இருத்தலே உத்தமம்.
சென்னையிலுள்ள டிராக்டர் கம்பனி, அங்கு கற்றுக் கொண்ட வேலை, அங்கு காட்டிய சுறுசுறுப்பு, இடைவிடாத உழைப்பு,
உழைப்புக்கு கைமேல் கிடைத்த பலன்கள், ஆங்கில
அறிவு, மனிதர்களை அறியும் புத்தி, நல்லதும்
கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து நிற்க அவைகளை ஏற்று சமாளித்த விதம் போன்றவைதான்
என் சிறப்புக்குக் காரணம்.
என் உற்றார் உறவினர்கள் எவ்வளவு
வற்புறுத்திய போதும் அரசாங்க வேலையில் சேரமாட்டேன் என்று நான் அப்பொழுதே திடமாக
மறுத்தேன். எனக்கு வயது
அறுபதைத் தாண்டிவிட்டது. இன்னும் துடிப்பாக இயங்கிக்
கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு குருவருளும், அந்த
டிராக்டர் கம்பனியில் கற்றுக் கொண்டதும் காரணம்.
ஒருவேளை அரசாங்க வேலையில்
ஈடுபட்டிருந்தால் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யாத தற்குறியாய்
போயிருப்பேன்.
காசு சம்பாரிப்பது
கடினமாக இருக்கிறதே!?
உங்களுக்கு எதில் காசு இருக்கிறது, அதை எப்படி சம்பாதிக்க வேண்டுமென்று
புரியவில்லை. வெறுமே கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது.
உழைப்புக்குண்டான பலனைப் பெறுவதிலும் சற்று கூர்மையாக இருக்க
வேண்டும்.
எது முக்கியம்? ஓய்வா? உழைப்பா?
எவ்வளவு ஓய்வு, எவ்வளவு உழைப்பு என்று
உங்களுக்குள் நீங்களே தீர்மாணம் செய்துகொள்ள வேண்டும். உழைக்கின்ற
நேரத்தையே ஓய்வு நேரமாக பல பேர் பயன் படுத்துகிறார்கள்.
உழைப்பு என்பது இடைவிடாத விஷயம். ஓய்வு நேரத்திலும் உழைப்பதற்கு ஒரு
பக்குவம் இருக்க வேண்டும். முக்கிய விஷயம் எவ்வளவு காசு
வேண்டும் என்பது? அதிக காசுக்கு ஆசைப்பட்டோமானால் அதற்கு
முடிவே கிடையாது!
கற்பு நெறி தவறிய
ஆண்களும் பெண்களும் அதிகமாகி வருகிறார்களே?
ஆமாம் இது இயல்பு. படிப்பும் படிப்பால் பொருளாதார
விடுதலையும் ஏற்படுகிறபோது இம்மாதிரி எல்லைகள் உடைத்து வேறு எல்லைகள் போடப்படுவது
வழக்கம்தான்.
எப்படி இருக்கிறீர்கள்? நலமா? மனைவி மற்றும்
குழந்தைகள் அனைவரும் நலமா? நான் மற்றும் வீட்டில் அனைவரும்
நலமே!
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எளிமையாக இருந்தது. நன்றாக எழுதி உள்ளேன். அறுவடைக் காலம் என்பதால்
அப்பாவுடன் சேர்ந்து நெல் பிடிப்பதில் பிஸியாக உள்ளேன். சீசன்
முடிஞ்சதும் நீ மெட்ராஸ் போறத வெச்சுக்கோன்னு சொன்னாங்க. அதனால
இப்போதைக்கு அப்பாவோட வொர்க்கிங் பார்ட்னரா (!) இருக்கேன்.
அதனாலதான் உடனே லெட்டர் எழுத முடியலை.
என்ன!
இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா? எவ்வளவு
ஆச்சர்யமான விஷயம். என்ன எழுதியிருக்கிறார் யாழினி? நீங்கள் பதில் கடிதம் போட்டுவிட்டீர்களா?
எனது தங்கையைப் பார்த்தால்
பேசுங்களேன்! இதிலென்ன தயக்கம்?
நல்லா படிக்கச்சொல்லுங்க. அதெல்லாம் ஒண்ணும்
நினைச்சுக்க மாட்டா.
அப்புறம் உங்கள் தோழியைப் பற்றி
எழுதியிருந்தீர்கள். நான் எதுவும் தப்பா
நினைக்கல. உங்களோட அனுபவங்கள என்னுடன் பகிர்ந்துக்கறீங்க.
எல்லாருடைய அனுபவமுமே நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடம் என்பது என்
கருத்து. அதனால நீங்க எழுதுங்க.
எனக்குத் தோணும் கருத்துக்களையும்
சொல்லலாம்தானே?! புரட்சியாய் பேசிய,
அறிவாளியாய் இருந்த உங்கள் தோழி இரட்டை வேடம் போட்டிருக்கிறார்
என்று நினைக்கிறேன். உள்ளுக்குள் உங்கள் மேல் இருந்த காதலை,
நட்புச் சாயம் பூசி மறைத்திருக்கிறார்.
நண்பராக நினைத்திருந்தால் திருமண
பத்திரிகையைக் கொடுத்துவிட்டு, என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்கன்னு சொல்லமாட்டார். அப்புறம்
உங்களை வேறு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கிறத தாங்க முடியலைன்னு அழுது அரற்றவும்
மாட்டார்.
அதே சமயம், இந்த தலைமுறைல நம்ம வரைக்கும்கூட ஜாதி என்பது
பிரிக்க முடியாத பெரிய சக்தியாதான் இருக்கு இந்த சமூகத்துல. நம்மைப்
போன்றவர்கள் அதை ஒழிக்க நினைத்தாலும் நடக்காத விஷயமாகத்தான் இருக்கிறது அது.
எங்க அக்காவுக்கு வரன் பார்க்கிறோம். Msc., B.Ed., படிச்சிருக்காங்க. படிப்புக்கேத்த வரன் எங்க ஜாதில கிடைக்கிறது கஷ்டம். நான் சொல்றேன், “Cast” வேண்டாம்னு சொல்லுங்க ஒரே
மாசத்துல கல்யாணமே முடிச்சிடலாம்னு. ஆனா எங்க வீட்ல யாரும்
ஒத்துக்கலை. அப்படி இருக்க எழுத்தளவுல எழுதறதாலயோ, பேசறதாலேயோ ஒண்ணும் மாறிடப் போறதில்ல இது.
வேணும்னா நாம நம்ம சந்ததிகள் மேல இந்த
ஜாதிச் சாயம் பரவ விடாம தடுத்து அவங்கள உருவாக்கலாம்.
புரட்சியாய் செய்த எத்தனையோ
திருமணங்கள் புஸ்வாணமாகிக் கொண்டிருக்கின்றன. காதல்ன்ற பேர்ல ஒருத்தரை ஒருத்தர் நம்பி, பெத்தவங்கள
எதிர்க்க முடியம தப்பியோடி, சில காலம் வாழ்ந்து பிறகு
அதுவும் வெறுத்துப்போய் பரஸ்பரம் குறைகூறிக்கொண்டு ஏனோ தானோவென்று வாழ்ந்து (பிரிந்து) வருகின்றனர்.
காதலில் இருக்கும் வேகம் இவர்களுக்கு
வேறெதிலும் இல்லை. இப்படி
விட்டேற்ற்றியாய் வாழ்வதைவிட, பேசாமல் பெற்றோர் பார்க்கும்
அந்த ‘ஜாதி’ வாழ்க்கையை
வாழ்ந்துவிடலாம்?!
அதற்கும் மேல் நமது கலாச்சாரம்
காலங்காலமாய் உபயோகித்து வரும் வார்த்தை கற்பு. கற்புன்னா என்ன? அது உடல்ல இருக்கிற ஒரு வஸ்துவா?
இல்ல டி.என்.ஏ. ஜீன் போன்ற சமாச்சாரங்களா?
ஏன் அப்படின்னா அது ஆணுக்கு கிடையாதா?
திருமணம் கற்பை பாதுகாக்கிறதா? விபத்தா நடந்தா கூட கற்பை பறிகொடுத்தாட்டான்னு
சொல்றவங்க திருமணமானவங்களை சுமங்கலின்னு சொல்லுவதேன்?!
‘ஒருவனுக்கு ஒருத்தி’ன்ற கொள்கைதான்
தடம் புரண்டு கற்புன்னு மாறி இருக்கணும். ராஜேஷ்குமார் சொல்வார் – இந்த உலகத்துல
காற்றை சுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய விஷயம் கற்புன்னு.
ஒழுக்கம், நேர்மைன்னு எல்லாத்தையும் சேர்த்து கற்புன்னு ஒரு வார்த்தையைச் சொல்லி
பெண்களுக்குன்னு முத்திரையும் குத்திட்டாங்க.!
பெண்களா இதை புரிஞ்சிகிட்டு வெளில
வந்தாதான் இதுக்கு விடிவு காலம்.
அதுக்கும் மேல நம் மக்களோட சிந்தனை
எப்போதும் உடலைப் பற்றியதாகவே இருப்பது. அதுல முக்கிய பங்கு தமிழ்
சினிமாவுக்குத்தான். ஆதி காலத்திலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இப்படியே
தொடர்கிறது.
இதனால்தான் ஆண்-பெண் நட்பு கூட இங்கு
அன்னியமாய், வித்தியாசமாய் பார்க்கப்படுகிறது. அடிமட்டத்திலிருந்து மாறணும்.
வாழ்க்கைல செக்ஸ் ஜஸ்ட் சாதாரணம்தான் எனும் எண்ணம் வரணும். அதன் பிறகே நல்ல
சிந்தனைகள் எழும்பும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.
விடுதலை உணர்வை விரும்புகிற
பெண்களுக்கு அவர்களது கணவர்கள் தடையாய் இருப்பதாலேயே அவர்கள் தனித்தே வாழலாம் என்ற
முடிவுக்கு வருகின்றனர் போலிருக்கிறது.
சுய சம்பாத்தியம் இருக்கும்போது
பெண்ணுக்கு ஒரு தைரியமும், எதையும் எதிர்கொள்ளும், சமாளிக்கும் அளவுக்கு
தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
அப்படி இல்லாதபோது ஆணை சார்ந்திருக்க வேண்டிய
கட்டாயமும், அதனாலேயே எதையும் எதிர்க்க முடியாமல், அவனுக்கு பயந்து அடிமையாய்
வாழ்தலும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.
நான் ஆனந்தவிகடன் படிப்பதில்லை.
ஏற்கனவே காசை பேப்பராக்கியே வீண்டிக்கறேன்னு திட்டறாங்க. பட்ஜட் பற்றாக்குறை வேறு.
அதனால்தான் வேறு புத்தகங்கள் எதையும் சேர்க்கவில்லை என் லிஸ்டில்.
இன்னும் கொஞ்ச நாள்ல மெட்ராஸ்
வந்துடுவேன். நல்ல லைப்ரரியா சொல்லுங்க, அங்க வந்து என் படிப்பு ஆசைக்கு தீனி
போட்டுக்கிறேன். எனக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் படைப்பை
(ஜெயகாந்தனுடையதுன்னு நினைக்கிறேன்) படிக்க ரொம்ப நாளா ஆசை. நீங்க
படிச்சிருக்கீங்களா?
அப்புறம் உங்க சிங்கப்பூர் தோழி
ஜென்ஸி வீட்டுக்கு வந்தாங்களா? உங்களுக்கு வேலை விஷயமா என்ன சொன்னாங்க? எண்ணம் போல
வாழ்க்கைன்னு சொல்வாங்க, அதனாலதான் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைத்திருக்கிறது.
என் நண்பர் கோபு நிறைய சின்னச்சின்ன
பரிசுகள் வாங்கியிருக்கார். கவிதை, விமர்சனம், துணுக்கு… என்று நிறைய படைப்புகள்
வெளியகியிருக்கு. வாசகர் வட்டத்தில் நன்கு அறிமுகமான நபர். ‘பாக்யா’தான் அவரோட
ஆஸ்தான பத்திரிகை. பெரிய விஷயமா இப்போதான் கவிதை நூல் எழுதி அதை அச்சுக்கு
கொண்டுவர முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்.
பெற்ற தாய் இறந்தால் கூட அதிலும்
அரசியல் கலந்து அசிங்கம் பண்ணுவார்கள் போலிருக்கிறது நம் அரசியல்வாதிகள்.
தரும்புரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கழக கட்சிகள் ஒன்றையொன்று
சாடிக்கொண்டிருக்கிறதே தவிர, அய்யோ… கண்ணு முன்னாடி உயிரோட எரிஞ்சாங்களேங்கிற ஒரு
மனிதாபிமானம் எவருக்கும் இல்லை.
இன்னிக்கு பார்லிமெண்ட்ல மொராக்கோ
பிரதமரை வச்சுகிட்டு நம்ம எம்.பி.ங்க குழாயடி சண்டை போட்டுக்கிட்டத பார்த்தா இங்க
ஒரு ‘முஷாஃரப்’ இருக்கலாமோன்னு தோணுது.
வேறென்ன… நிறைய எழுதுங்கள். எனக்குள்
தெளிவு வர உங்கள் எழுத்து உதவியாய் இருக்கும். உங்கள் மகள்களை நல்லா ‘ஷேப்’
பண்ணுங்க. இந்த வயசிலேயே ஆரம்பிச்சாதான் அவங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.
ஆனால்,
மனைவியின்பிரிவில், அவளையேநினைந்துஉருகி, அவளுக்காகவேகரைந்துபோனகற்பார்ந்தஆண்கள்பட்டியலைஇளங்கோஅடிகளால்வெளிப்படுத்தமுடியவில்லை.
‘கற்புள்ளபெண்என்பதற்குஅடையாளம், அவளைப்பார்க்கும்எந்தஆணின்நெஞ்சிலும்தவறானஎண்ணம்தோன்றாமலிருப்பதுதான்’ என்கிறதுமணிமகலை. மருதிஎன்றபார்ப்பனப்பெண்நீராடியநிலையில், இளவரசன்சுகந்தன்அவளைக்காமத்துடன்நோக்குகிறான். ‘மண்ணுக்குமழைவளம்தரும்பெண்ணாகஇருந்தால், அவள்பிறர்நெஞ்சுபுகமாட்டாள். ஒருஆணின்இதயத்தில்காமம்கிளர்ந்துஎழுவதற்குநான்காரணம்ஆனதால், என்கற்புகளங்கம்உடையது’ என்று மருதி மனம் கலங்குவதாக மணிமேகலை
கூறுகிறது. பெண்ணுக்கு கற்பின் பெயரால் இழைக்கப்பட்ட பெருங்கொடுமை அல்லவா இது!
பல பரத்தையருடன்
ஓர் ஆண்மகன் உறவு கொண்டதை எதிர்த்து இலக்கியம் படைத்த முதல் மனிதர் வள்ளுவர். ஆணுக்கும்
பெண்ணுக்கும் கற்பைப் பொதுவாக்கிப்பார்த்த முதல் புரட்சியாளர் அவர். அன்றைய ஆணாதிக்க
சமூகத்தின் செல்வாக்கில், கணவனை மட்டுமே கடுவுளாக வணங்கிய ‘தெய்வக்கற்பு’ பற்றி அவர்
பேசினாலும், அடுத்தவர் மனைவியை நாடும் மனிதர்களை நல்வழிப்படுத்த ‘பிறனில் விழையாமை’யும்,
பரத்தையர் தொடர்பைக் கட்டறுக்க ‘வரைவின் மகளிரை’யும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.
ஆணின் கற்பை அறத்துடன்
நெறிப்படுத்த அவர்தான் முதலில் முயன்றார், அவருடைய வழியில் பின்பு வந்து சேர்ந்தான்
கம்பன். மருத நிலத்தையும், மக்கள் வாழ்க்கை முறையையும் 14 பாடல்களில் விரிவாக விளக்கும்
கம்பன், மறந்தும் மருதத் தினைக்குரிய பரத்தையர் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ஆணுக்கும் பெண்ணுக்கும்
புலனடக்கம் போதிப்பதற்காகவே ராமாயணத்தைத் தமிழில் தந்தவன் அவன். அறுபதாயிரம் மனைவியரோடு
வாழ்ந்த தசரதனுக்கு மகனாகப் பிறந்த ராமன், ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்த சிறப்பைச் சொல்ல
எழுத்தாணியைக் கையில் எடுத்தான் கம்பன். அசோக வனத்தில் ஆற்றமுடயாத சோகத்தைச் சுமந்தபடி…
அமர்ந்திருந்த சீதையின் நெஞ்சில் நினைவலைகள் மோதுகின்றன. ராமனின் நற்பண்புகளை மனதில்
அசை போடுகிறாள். கைப்பிடித்த மணநாளில், ‘இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும்
தொடேன்’ என்று அவன் அளித்த செவ்வரத்தை அவள் சிந்தித்து சிலிர்க்கிறாள். ஒருவனும் ஒருத்தியுமாக
வாழும் வாழ்க்கையை வலியுறுத்தவே கம்பன் காப்பியம் படைத்தான். ஆண் கற்பைக அழுத்தமாகப்
பேசியவன் அவன்.
‘கற்பு நிலை என்று
சொல்ல வந்தால், இருபாலருக்கும் அதை பொதுவில் வைப்போம்’ என்ற பாரதி, பெண்ணுக்கு கற்பு
விலங்கு பூட்டி, ஆண் மக்கள் பிற மாதருடன் நெஞ்சழிந்து நிற்பதை காணச் சகியாமல், கடுமையான
விமர்சனம் செய்தான்.
ஆணாதிக்கம் சுயநலமாக
பெண்ணுக்குக் கற்பெனும் விலங்கு பூட்டி அடிமைப்படுத்தியது. அந்த விலங்கை உடைந்நெரியும்
வேகத்தில், ஒழுக்கச்சிதைவுக்கு வாசற்கதவைத் திறந்து வைக்க பெண்ணியம் பேசுவோர் முனைதல்
தகாது. ‘ பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று சமூகம்
எதிர்பார்க்கக் கூடாது’ என்பது பெண்ணியத்தின் போர்க்குரல் அன்று. அது பண்பாட்டுப் பேரழிவின்
பிரகடனம். வரம்பற்ற காமத்துக்கு வரவேற்புவிழா நடத்தும் திட்டம். இந்த மலினமான சீரழிவுச்
சதிவலையில் இளைஞர் கூட்டம் சரிந்து விழலாகாது.
பெண்ணுரிமைக்காக
வாழ்நாள் முழுவதும் போராடிய பெருமகன் பெரியார் கூட, தாம் எழுதிய புரட்சிகரமான ‘பெண்
ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில், மணமாவதற்கு முன்பே பெண் கன்னித்தன்மையை இழக்கலாம் என்று
பரிந்துரைக்கவில்லை.
திருத்தப்படாத
நிலம் களை மண்டிக்கிடக்கும். தடுக்கப்படாத வெள்ளம் தாளாத துன்பம் தரும். இரண்டு கரைகளுக்குள்
அடங்கி நடக்கும் ஆறுதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். இறுக்கமாக கட்டப்பட்ட வீணையின்
நரம்புகளிலிருந்துதான் இனிமையான இசை பிறக்கும். சுயக்கட்டுப்பாடுதான் நாகரிகத்தின்
நல் அடையாளம். புலனடக்கம் கொண்ட ஆணும் பெண்ணும் உருவாக்கும் குடும்பத்தில்தான் இன்பமும்
அமைதியும் இறுதிவரை நிலைக்கும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதற்குப்
பெயர்தான் கற்பு.
கற்பு பெண்ணுக்கு
மட்டும் என்பது, ஆணாதிக்கம் பூட்டிய அடிமை விலங்கு. அதையே ஆணுக்கும் சேர்த்து வரையறுத்து,
ஒழுக்கப் பயிர் காக்கும் வேலியாக்குவோம்!
- தமிழருவி
மணியன்
கற்பு பற்றிய சுவாரஸ்யமான இடுகை 'வினவு' தளத்தில்... மற்றும்'புதிய பெண்ணியம்' தளத்திலும்.