செவ்வாய், 28 மே, 2013

மனசே மனசே கதவைத்திற!

 (பாலகுமாரன் பக்கம்)



காதல் என்பது காமத்தின் நாகரிகமான வெளிப்பாடு. காதல் என்ற வார்த்தைக்கு காமம்தான் அடிப்படை. உடம்புதான் முதற்பொருள். சுவரை வைத்துதான் சித்திரம். உடம்பை வைத்துதான் உறவுகள். உடம்பு என்பது உணர்வுகளின் மூட்டை. உணர்வுகளை மதிக்க உடம்பையும் மதிக்கவேண்டும்.

என் காதல் தெய்விகமானது என்று எவரும் சொன்னால் அவர் உடம்பு பற்றி எந்த சிந்தனையும் இல்லாது பேசுகிறார் என்று இங்கே சொல்லப்படுகிறது. இது வெறும் பொய். உடம்பில்லா மனிதனுக்கு எந்த அடையாளமும் இல்லை. காமம் அத்தகைய முக்கியமில்லை என்று சொல்லவே பெரியவர்கள் தெய்விகக்காதல் என்றெல்லாம் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

காமத்தோடு இருக்கிறவர்களுக்குத்தான் காதல் பற்றிய சிந்தனை வரும். காமத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் காதல் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். தன்னுடைய வேலை பற்றி அதிக கவனமுள்ளவர்களுக்கு காமம் பற்றிய சிந்தனை எழாது. அப்படி காமம் பற்றிய சிந்தனை எழாது போனால் காதல் பற்றிய தாபங்கள் இல்லாது போகும்.


இந்த உடம்பு எத்தனை அழகு. அந்த உடம்பு எத்தனை வெறியை உள்ளே தூண்டிவிடுகிறது. உடம்பையும், மனசையும் அவ்வப்போது படிக்கிற ஆபாசக்கதைகள் முறுக்கேற வைத்து குதியாட்டம் போட பெண்ணைப் பார்க்கும் வரை காதல், காமம் பற்றிய பிரக்ஞையே இல்லாத மனம் நாலா திசைகளிலிருந்தும் நாய்களால் விரட்டப்படும் ஆடுகள்போல் அவஸ்தைப்படுகறது.

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவள் கலைந்த உடையோடு என்ற நினைப்பு ஏற்படுகிறது. தனம் அமைதி இழந்து, சருமத்தில் வறட்சி தோன்றி, முகம் களையிழந்து போய்விடுகிறது.

பெண் கொடுக்கிற உரிமையும், அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பும், மனசுக்குள் பொங்குகிற காமமும், அதை காதலாக்குகிற புத்திசாலித்தனமும் அதிகமாக மேலெழும்பி பெண்ணை தன்வயப்படுத்த தந்திரம் செய்ய ஆரம்பித்து விடுகிறது.

வாழ்க்கையில் எல்லா நட்புகளும், எல்லா உறவுகளும் ஒன்றை ஒன்று எப்படி திண்பது என்பதில்தான் ஆரம்பிக்கின்றன.
- பாலகுமாரன்.


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

/// தன்னுடைய வேலை பற்றி அதிக கவனமுள்ளவர்களுக்கு காமம் பற்றிய சிந்தனை எழாது...

அப்படி காமம் பற்றிய சிந்தனை எழாது போனால் காதல் பற்றிய தாபங்கள் இல்லாது போகும்... ///

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!