Thursday, January 30, 2014

மின்சாரமில்லாத சம்சாரி வாழ்க்கைஒரு நூறு நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. மின்சாரம் வந்த பின்புகூட முக்கியமான நகரங்களில் அதுவும் ஆங்கிலேயர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அந்த மின்சாரமும் இருந்திருக்கும். ஆனால் நம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் செல்வந்தர்களைத் தவிர்த்து மின்சாரம் வந்திருக்க வாய்ப்பில்லை. மின்சாரமில்லாத வாழ்க்கையை அவர்கள் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் அந்தக் காலத்தில்?

இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. கணிணி வந்த புதிதில்…. இது கணக்கெல்லாம் போடுமாம். எல்லா வேலையும் வீட்டிலிருந்தே செய்யலாமாம். அது வந்தா மனிதர்களுக்கு வேலையே இருக்காதாம். அப்படி இப்படின்னு பேச்சு இருந்தது. ஏதாவது அலுவலகத்துக்கோ அல்லது வங்கிக்கோ சென்றால் அத்திப்பூத்தார் போல் இருக்கும் அந்தக் கணிணிகளைப் பார்த்தால் ஏக்கமும் மெத்தப் படித்தவர்களின் விஷயமாகவும்தான் படும். ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. காலம் மாறுகிறது. முன்னேறுகிறது. எல்லாம் மகிழ்ச்சியான விஷயம்தான். நானும்கூட கணிணியைக் கையாள்வேன் என்று அப்ப்போது நினைத்தே பாரக்கவில்லை.

சில்லுப்புரட்சி என்கிற தொழில்நுட்பம் வந்த பிறகு  எது எதுவெல்லாமோ சாத்தியமாகிவிட்டது. ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படையான இந்த மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் மட்டும் ஏன் தேக்கநிலையிலேயே இருக்கிறது என்றுதான் புரியவில்லை. நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம் என்றெல்லாம் தொடங்கி அணு மின்நிலையம் வரை வந்தாகி விட்டது. அணுமின் நிலையத்தின் ஆபத்தை உணர்ந்த அயல்நாடுகள் மாற்றுவழிகளை ஆராயத்தொடங்கியிருக்கிறது. அவர்கள் கழித்துக் கட்டிய அந்த அணுமின் நிலையத்தை கூடங்குளத்தில் நிறுவி தென் தமிழ்நாட்டு மக்களுக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது ‘’வெற்றி’’, ‘’வெற்றி’’ மார்தட்டிக்கொண்டிருக்கிறது நம் மத்திய அரசு

பாவம் ஒரே ஒரு கும்பல்தான் தொடர்ந்து மக்களுக்காக தொடர்ந்து  போராடிக் கொண்டிருக்கிறது. கதிரியக்க பயங்கரங்கள் குறித்த எந்த புரிதலுமில்லாத மற்ற பெரும்பாண்மையான மக்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஒரு போபால் விஷ வாயுப் பேரழிவைக்கூட தாங்க முடியாத நம் தேசம், ஒருவேளை கதிரியக்கக் கசிவுக்கு ஆளாக நேர்ந்தால் என்ன கதியாகும் என்ற அக்கறையோ அறிவோ எவருக்கும்  இல்லை.

காற்றாலைகளிலிருந்து மின் உற்பத்தி எல்லா பருவகாலங்களிலும் சாத்தியமில்லை என்பதும், சூரிய சக்தியிலிருந்து மின் உற்பத்தி என்பது இன்னமும் வெற்றிகரமான வழிமுறைகளைக் கொண்டு உருவாக்கப்படவில்லை என்பதும் கவனத்தில் கொண்டால் மின்சாரம் என்பது இன்னும் ‘’ஷாக்கான’’ சமாச்சாரமாகத்தின் இருக்கிறது.
 
எதற்கு இந்த பீடிகை எல்லாம் என்றால், கடந்த ஒரு மாதகாலமாக இந்த பாழாய்ப்போன மின்சாரம் இல்லாமல் இங்கே சாமானிய சம்சாரியின் வாழ்க்கை எப்படியெல்லாம் பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணரும் நிலை ஏற்பட்டது. அந்த அனுபவங்களைத் தான் ஏற்கனவே பதிவாக்கியாச்சே............

ஒடிஸாவில் பைலின் புயலின்போது எழுதிவைத்தது இப்போதுதான் கண்ணில் தட்டுப்பட்டது. அதான்...ஹி..ஹி...

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

சம்சாரம் போச்சின்னா சகலமும் போச்சி....!

சம்சாரம் அது மின்சாரம்...!

மேலும் பீடிகைகள் தொடரட்டும்....

வாழ்த்துக்கள்...

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்!

ராஜி said... [Reply]

இப்ப கரண்ட் கட்லாம் இல்ல. இப்பதானே வெயில் தலைக்காட்டுது!? கரண்ட் கட்டும் வரும்!!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

சரியா பாராளுமன்றத் தேர்தல் நேரத்துல மின்வெட்டு தலை தூக்கும். என்னா செய்யறாங்க்கன்னு பார்க்கலாம். வருகைக்கு நன்றி ராஜி அவர்களே!

தி.தமிழ் இளங்கோ said... [Reply]

எல்லோருக்கும் உண்டான ஆதங்கத்தை பதிவின் வழியே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

உஷா அன்பரசு said... [Reply]

மின்சாரம் இல்லாத காலத்துல இப்ப இருக்கற மாதிரி அவசர யுகம் இருந்திருக்காதுன்னு நினைக்கிறேன்....

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ அவர்களே!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

பரபரப்பில்லாத அந்த வாழ்க்கை எவ்வளவோ மேல்னுதான் நான் நினைக்கிறேன். உறவுச்சங்கிலி கொஞ்சம் கொஞ்சமாய் அறுந்து கொண்டிருக்கிறது. எல்லோருமே பணத்தை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வருகைக்கு மிக்க நன்றி உஷா அவர்களே!

Anonymous said... [Reply]

வணக்கம்.

தங்களின் ஆதங்கம் புரிகிறது... காலம் வரும் போது மக்கள் பதிலடி கொடுப்பார்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

இப்போது இருக்கிற அரசியல் வாதிகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலைமை சீரடையப்போவதில்லை ரூபன். ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு. பார்ப்போம்!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!