(பயனுள்ள சமையல் குறிப்புகள்)
எலுமிச்சம் பழங்களை பாலிதின் பையில் போட்டுவைத்தால் ஒரேயடியாக பழுத்துவிடாமல் இருக்கும்.
சாலட்டிற்கு சீவியவுடன் அதிலேயே எலுமிச்சையைப் பிழிந்தால் சாறு மட்டும் சாலட்டுடன் கலக்கும்.
வெங்காயம் அல்லது பூண்டு நறுக்கிய கைகளில் எலுமிச்சம் பழ மூடிகளை தடவிக்கொண்டால் அந்த நாற்றம் போய்விடும்.
குக்கரில் சாதம் வைக்கும் பொழுது அதில் எலுமிச்சம் பழ மூடிகளைப் போட்டுவிட்டால் குக்கரின் உட்பாகம் பளிச்சென்று இருக்கும்.
பால் கேக்குடன் பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்தால் புதுவிதமான மில்க் ஷேக் தயார்.
கெட்டியான ஜாம் பாட்டிலினுள் வெதுவெதுப்பான பாலைக் கொஞ்சம் விட்டு அத்துடன் பிஸ்கட் தூளையும் போட்டு குலுக்கி எடுத்தால் ஜாம் ஷேக்!
தேன் அல்லது தேன் சாஸ் கட்டியாகிவிட்டால் பாட்டிலினுள் ஒரு ஸ்ட்ராவைப் போட்டு கொஞ்சம் ஊதினால் தெளிவாகிவிடும்.
வெங்காய சாலட்டில் தேங்காயைத்
துருவி கலந்துவிட்டால் அது புது ருசியுடன் இருக்கும்.
மெதுவடைக்கு வேண்டியவற்றை தண்ணீரில் சிறிது
ஊறவிட்டு, பின் வடித்து ஒரு மணி நேரம் கழித்து அரைத்து வடை தட்டினால் எண்ணெய்
அதிகம் செலவழியாது.
சரியாக வேகாத துவரம் பருப்பை மிக்ஸியில்
போட்டு அரைத்து சாம்பாரில் கலக்கலாம்.
இரண்டு பங்கு பாசிப் பருப்பு ஒரு பங்கு
கடலைப் பருப்பு என்ற விகிதத்தில் கலந்து அரைத்து மைசூர் பாகு செய்தால் மிகவும் சுவையாக
இருக்கும்.
சிறிய பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் விட்டு
வாயை இறுகக்கட்டி பிரிட்ஜில் வைத்து விட்டால் நிறைய ஐஸ் கிடைக்கும்.
வாழைக்காயை காம்பை நறுக்காமல் தோலைச் சீவிட்டு
நறுக்கினால் அதன் இறுதிவரை காம்பைப் பிடித்துக்கொண்டு நறுக்கலாமே!
மிதமாக ரொட்டித் துண்டுகளை (காய்ந்தது)
மிக்ஸியில் பொடி செய்து ஏலக்காய் முந்திரி போட்டு நெய்யை காய்ச்சிவிட்டு
உருண்டைகள் செய்யலாம்.
நாளடைவில் பாலாடைகளை சேர்த்து வைத்து அதைப்போட்டு
பாயசம் செய்தால் மிகவும் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஐந்து ஆழாக்கு கடலைப்பருப்பு அரை ஆழாக்கு
பாசிப்பருப்பு கலந்து அரைத்து செய்யும் மனோகரம் மிகவும் சுவையாக இருக்கும்.
தர்பூசனித் தோல்களை பொரித்து கூட்டு செய்யலாம்.
முந்தைய நாளே காய்கறியை அரிந்து இறுக்கமாக
பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் விட்டமின் சத்துக்கள் அப்படியே இருக்கும்.
தேங்காய் துருவலை பாலிதீன் பைய்யில் போட்டு
ஃபிரிட்ஜில் ஃபிரீசரில் வைத்தால் சில நாட்கள்வரை அப்படியே இருக்கும்.
புளிக்கரைசலை ஐஸ் டிரேயில் வைத்து ஃபிரீசரில்
வைத்துவிட்டலாஃ அவ்வப்போது எடுத்து எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.
பருப்புடன் வேர்க்கடலையும் வேக வைத்து
சாம்பாரில் போட்டால் சாம்பார் மணக்கும்.
பச்சரிசியை கிரைண்டரில் அரைத்து மாவு கிளறினால்
கொழுக்கட்டை பிரியாமல் வரும்.
பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து ரவை மைதா
கலந்து, கடுகு மிளகாய் வெங்காயம் தாளிதம் செய்து வார்க்கும் தோசை புது
மாதிரியாக இருக்கும்.
காரட்டை ஆவியில் வேக வைத்து பால், சர்க்கரை
எசன்ஸ், நெய் விட்டு கிளறினால் காரட் பர்பி ரெடி.
தக்க்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் கலந்தால் சாம்பார் சிவப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
சமையல் செய்யும்போதே உப்பு போட்டுவிட வேண்டும். இறக்கிய பின் போடக்கூடாது.
பக்கோடா மாவில் கொஞ்சம் வெங்காயத்தையும் இஞ்சியையும் சேர்த்தால் கூடுதல் சுவை.
ஆழாக்கு அரிசியையும் படி
ஆழாக்கு சோற்றையும் அரைத்துக் கொண்டால் திடீர் தோசை செய்யலாம்.
மசாலாவை கொதிக்கும் நீரில் போட்டுவிட்டு பின் நூடுல்சை போடவேண்டும்.
கேழ்வரகு மாவு இரண்டு கோப்பை, உளுந்து மாவு அரை
கோப்பை, கொஞ்சம் வெந்தயம் ஆகியவைகளைக் கலந்து தோசை சுடலாம்.
பொடியாக நறுக்கிய பாகற்காயோடு சீரகம் மிளகு உப்பு கலந்து சூப் செய்யலாம்.
சோமாஸ், சமோசா மேல் மாவு படியாதிருக்க கோதுமை மாவை பசை போல் காய்ச்சி மேலே தடவி விடவேண்டும்.
பாகு விட்டு மாவில் பிசையும் பொழுது கொஞ்சம் தயிரும் கலந்தால் அதிரசம் பூ போல இருக்கும்.
நமத்துப்போய்விட்ட பட்சணங்களை சூடான வெறும் வாணலியில் போட்டு எடுத்தால் முறுமுறு வென்றாகிவிடும்.
அப்பளத்தின் இருபிறமும் கொஞ்சம் நெய்யைத் தடவி தணலில் சுட்டால் புதிய சுவையுடன் இருக்கும்.
சப்பாத்தி, பூரி மீதமாகிவிட்டால் தோல் சீவிய ஒரு
உருளைக் கிழங்கை போட்டு ஒரு
பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டால் அப்படியே இருக்கும்.
கொஞ்சம் மிளகாய்ப்பொடி, கொத்துமல்லித்தழை, புளி உப்பு சேர்த்து அரைக்க சுவையான சட்னி கிடைக்கும்.
வாழைக்காய் இல்லாவிட்டால் காரட்டை நீளவாக்கில் மெல்லிதாக சீவி பஜ்ஜி செய்யலாம்.
துவரம் பருப்பை ஊறவைத்து அதனுடன் மிளகாய் வற்றல்,
தனியா அரைத்து பருப்பில்லாத சாமுபார் செய்யலாம்.
பாலை அகலமான பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் எவ்வளவு நேரமானாலும் கெடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!