சனி, 18 ஜனவரி, 2014

நகர நிர்வாகத்திற்கு நான்கு அடிப்படைகள்

சென்னை மாநகர் இப்போது எல்லாவிதங்களிலுமே விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. நிர்வாகம் முற்றிலும் சீரழிந்து போயிருக்கிறது. எல்லா விஷயங்களிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறது. இருந்த காலியிடங்கள் எல்லாம் ஆக்ரமிப்பாளர்களால் சிக்கி விலைபோய் பல நாட்களாகி விட்டது. எப்படியோ தன்னையும் ஒரு மாநகர் என்ற வார்த்தையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

காரணங்கள் பல இருக்கின்றன. பக்கத்து மாநிலங்களில் உள்ள பெங்களூருவும், ஹைதராபாத்தும் வளர்ச்சியில் சீறிப்பாய்ந்து "மாகா நகர்" என்ற தகுதியைப் பெற்றிருக்கிறது. ஆனால் நமது சென்னையோ துறைமுக வசதி ஒன்றினால் மட்டுமே தன்னுடைய இன்னும் தன் பழைய பெருமையை இழக்காமல் இருக்கிறது
என்ன ஆயிற்று சென்னைக்கு?

தி.மு.. ஆட்சியும் சரி, .தி.மு.க ஆட்சியும் சரிஓட்டு வாங்கி வெற்றி பெற்றபின் எந்த இடத்தை எப்படி வளைக்கலாம் அல்லது வளைத்த இடத்தில் யாருக்கு விலைபேசி என்ன திட்டத்தை அறிவிக்கலாம் என்பதிலேயே காலம் போய்விடுகிறது. இதனையும் மீறி சில நல்ல திட்டங்களும் நடந்தேறிவிடுகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், ஒரகடம் தொழிற்பூங்கா போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.
 
அண்ணா நூற்றாண்டுவிழா நூலகம், புதிய சட்டசபைக் கட்டிடம் பொன்றவையும் சேர்க்கலாம்தான். அதை கெடுக்கத்தானே அ.தி.மு.. ஆட்சிக்கு வந்திருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் எப்படியோ இந்த அரசியலிலிருந்து தப்பிவிட்டது. 

.தி.மு.. ஆட்சியில் கட்டப்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் பழிவாங்கப்படாமல் இன்னும் இருக்கிறது.

துணை நகரம் அமைக்கும் திட்டத்தை முந்தைய தி.மு.. அரசு முன்னெடுத்த போது, அதன் தோழமைக் கட்சியாக இருந்துகொண்டே பா... அதை கடுமையாக எதிர்த்தது. திருப்பெரும்புதூரில் கட்சியினரால் வளைத்து வைக்கப்பட்ட இடத்தில் சர்வதேச விமான நிலையம் வரப்போகிறது என்று கதைகட்டி இடத்தின் மதிப்பை பலமடங்கு கூட்டப்பட்டது.

ஆனால் மத்திய அரசோ புதிய விமான நிலையம் அமைப்பதற்கான எந்த திட்டமும் கைவசம் இல்லை என்று கைவிரித்துவிட்டது. 

தமிழக அரசியல்வாதிகள் ஒருமுறை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தின் அசுர வளர்ச்சியை ஒருமுறை பார்த்துவிட்டு வந்தால் கூட திருந்த மாட்டார்கள். இப்போது இந்தியாவின் முதல் நான்கு இடத்தில் கூட சென்னை இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பெங்களூரு நான்காவது இடத்தைத் தட்டிப்பறித்து பல நாட்களாகிறது. ஐந்தாவது இடத்திற்கு ஹைதராபாத் முந்திக்கொண்டிருக்கிறது.

மாநகரை விரிவு படுத்தும் முடிவிலும் அரசியல் விளையாடுகிறது. எதுவரை விரிவுபடுத்துவது என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. முந்தைய தி.மு.. அரசு அம்பத்தூரைத் தலைநகராகக் கொண்டும், தாம்பரத்தைத் தலைநகராகக் கொண்டும் இரண்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தது. அது அறிவிப்போடு நின்று போய்விட்டது.

சென்னை நகரின் முக்கிய பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளை ஏன் இதுவரை மாநகராட்சியோடு இணைக்க முன்வரவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதேசமயம் சென்னையின் பின்கோடு எல்லைக்குள்ளேயே வராமலிருந்த சோழங்கநல்லூர், மேடவாக்கம் போன்ற பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்படிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

பெங்களூரு மாநகராட்சியின் பரப்பளவு 224 ச.கி.மீ.-லிருந்து தற்போது 741 ச.கி.மீட்டராக்கியிருக்கிறார்கள். ஆனால்  சென்னை மாநகராட்சியின் பரப்பளவோ 174 ச.கி.மீட்டரிலிருந்து வெறும் 464 .கி.மீட்டராக மட்டுமே விரிவுபடுத்தி இருக்கிறார்கள். நாம் எங்கே இருக்கிறோம் புரிகிறதா? எங்கே தவறு? ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சிந்திப்பார்களா?!

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு முன்பாக அக்டோபர் 15 1989 அன்று தினமணியில் வந்தநகர நிர்வாகத்திற்கு நான்கு அடிப்படைகள்என்ற செய்தி விமர்சனத்துக்கு நான் எழுதிய விமர்சனம் உங்கள் பார்வைக்கு.
நகர நிர்வாகத்திற்கு நான்கு அடிப்படைகள்

08.10.1989 தேதியிட்ட தினமணியில் நகர நிர்வாகத்திற்கு நான்கு அடிப்படைகள் என்ற செய்திவிமர்சனம் கண்டேன்.
 

நாட்டில் கட்டுக்கடங்காத மக்கள் தொகைப் பெருக்கத்தினால் நகரங்கள்தான் நரகங்களாகிக்கொண்டு வருகின்றன என்பதை அருமையாக விளக்கியது கட்டுரை. பிரச்னைகள் சில விசுவரூபமெடுக்கின்ற நேரத்தில் (உதாரணமாக குடிநீர் பிரச்னைதற்போது மின் பற்றாக்குறை) மட்டுமே நகரின் நிலையை நினைத்துப் பாராமல் தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்

சாக்கடைக் கால்வாய்கள் மேலுள்ள குடிசைகளை அரசு அஞ்சாமல் அகற்ற வேண்டும். கட்டுரையில் குறிப்பிட்டது போல் சென்னை மாநகரின் சாலைப் போக்குவரத்தை விரிவுபடுத்த பாதாளச்சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி அதன்மீது சாலைகளை அமைக்கலாம். இல்லையெனில் கூவத்தில் கடல்நீரை விட்டுப் படகுப்போக்குவரத்திற்கு (கல்கத்தாவில் உள்ளது போல) ஏற்பாடு செய்யலாம்.

மக்கள் தொகையும் வாகனங்களும் பெருத்து வருவதுபோல் சாலைகளை அகலப்படுத்த முடிவதில்லை. நடைபாதைக்கென 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட பாதைகளில்தான் தற்போது 10 மடங்கு பாதசாரிகள் நடக்கவேண்டியுள்ளது.

இதிலேயும் நடைபாதை ஓரக் கடைகள் என்ற மிகப்பெரிய பிரச்னை. தலைநகருக்கு வரும் வெளியூர் வாசிகள் அதன் பூக்கடை பேருந்து நிலையத்தைப் பார்த்தால் மயக்கம் போட்டே விழுந்துவிடுவார்கள். சுமார் 800 பேருந்துகள் நாள்தோறும் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தினை உடனடியாக புறநகர்ப் பகுதிக்கு மாற்ற வேண்டும்.

தமிழகத்தலைநகரும், இந்தியாவின் நான்கு பெரிய மாநகரங்களுள் ஒன்றான சென்னையில்சார்க் மாநாடுபோன்ற பெரிய மாநாடுகளை நடத்த கட்டிடமும், இடவசதியும் இல்லாதது மிகப்பெரிய குறை. நகர மக்களின் குடிநீர், மின்சாரம், தொலைபேசி, வாகனங்கள் போன்ற தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றால், தற்கால மற்றும் எதிர்கால வளர்ச்சியின் வேகம் கல்கத்தாவைப்போல கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்.

அத்தியாவசியத் தேவைகள் இல்லாத இடங்களில் குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தடைவிதித்து அனைத்து வசதிகளையும் கொண்ட குடியிருப்புகளை அரசே உருவாக்க வேண்டும்.

திருச்சிக்கும், மதுரைக்கும் இடையே ஒரு புதிய நகரை உருவாக்கி அங்கே தலைநகரை மாற்றினாலென்ன என்ற யோசனையை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். கூறிய போது பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய அரசு இதை அறிவித்தால் வரவேற்கலாம்.

.ஞானசேகரன்,


9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்

சுதந்திரம் பெற்ற நாட்டில் உள்ள வளங்களை சுயநலத்திற்காக... விலைபேகிறது.... அண்ணா.. என்ன செய்வது... ?????
வினாக் குறி அடையாளந்தன் விடையாக கிடைக்கும்..
நல்ல கருத்தாடல் மிக்க பதிவு வாழ்த்துக்கள்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது… [Reply]

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜோதிஜி சொன்னது… [Reply]

சென்னையில் இருக்கும் வாய்ப்புகளை விட அங்குள்ள நெரிசல்களைப் பார்க்கும் போது தலைசுற்றிப் போய்விடுகின்றது. தனி மனிதர்களின் சுயநலத்தினால் மட்டுமே நகரங்கள் நரகமாக மாறிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

கிட்டத்தட்ட 20 வருடங்கள் இருந்திருக்கிறேன் (10 வருடங்கள் முன்பு) அப்போது சென்னை விட்டு செல்கிறோமே என்று சிறியதாக வருத்தம் இருந்தது... அவ்வப்போது இப்போது தொழில் விசயமாக செல்கிறேன்... ம்ஹிம்... இன்று இங்கு மிக்க மிக்க சந்தோசம்...

தலைவரின் யோசனை நல்லது தான்...! நடந்தால் அதிசயம் தான்...!!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நெரிசலைப் பொருத்தவரை பெங்களூரை விட சென்னை எவ்வளவோ தேவலை ஜோதிஜி. வருகைக்கு மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தலைநகரத்தை மாற்றுவதோ அல்லது தூணை நகரங்களை ஏற்படுத்துவதோ மிக மிக அவசியமானது. காலம் கடத்தாமல் செய்தால் சென்னை தப்பிப் பிழைக்கும் தனபாலன். வருகைக்கு மிக்க நன்றி.

bandhu சொன்னது… [Reply]

சென்னை.. எல்லா வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் நரகம். சென்னையை விட்டு வந்த பின் தான் quality of life என்றால் என்ன என்றே தெரிந்து கொண்டேன். விட்டு வந்ததில் கொஞ்சமும் வருத்தம் இல்லை!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

சென்னை நகரத்தில் வாழ்ந்தாலும் நீங்கள் குறிப்பிடும் நரகத்தை நான் இதுவரை அனுபவித்ததில்லை, காரணம் கிராமிய சூழ்நிலையில் புறநகர்ப் பகுதியில் வசிப்பதுதான். வருகைக்கு நன்றி பந்து!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!