வியாழன், 23 ஜனவரி, 2014

சமையலில் மனைவிக்கு உதவும் ஆண்களுக்காக...3


 பயனுள்ள சமையலறைக் குறிப்புகள்
டைத்த தேங்காய் பத்தை போட்டு வெயிலில் காயவைத்து எடுத்துக்கொண்டால் வேண்டிய பொழுது உபயோகிக்கலாம்.
அடை அரைக்கும் பொழுது காய்ந்த மிளகாயைப் போட்டு பின் பச்சை மிளகாயை நறுக்கிப்போட வேண்டும்.
கேரட் பச்சடி செய்யும் பொழுது அத்துடன் கொத்துமல்லி தழை, புதினா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவைகளை பொடியாக அரிந்து போட வேண்டும்.
புளியை ஊறவைக்கும் பொழுது அத்துடன் கொஞ்சம் உப்பும் சேர்த்துக் கரைத்தால் புளிப்புச்சுவை நன்றாக இருக்கும்.
சட்டினியை அரைக்கும் பொழுத் ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
இனிப்பு பட்ஞணங்களைச் செய்யும் பொழுது ஒரு சிட்டிகை உப்பு கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேங்காய், பெருங்காயம், தனியா, புளி, கறிவேப்பிலை, உப்பு, கடுகு எல்லாவற்றையும் நல்லெண்ணையில் வதக்கி செய்யும் பொடி ருசியாக இருக்கும்.
கத்தியில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவிக் கொண்டு, ஆப்பிள், வாழைக்காய் நறுக்கினால் கருக்காது.
வெந்த உருளைக் கிழங்கின் மேல் பயத்தம் மாவைப் பூசி செய்யும் பொறியல் பிரமாதமாக இருக்கும்.
கிழங்குகள் வெந்து எடுத்த பிறகே உப்பு சேர்க்க வேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் எடுத்த பிறகே வேக வைக்க வேண்டும்.
கிழங்குகளை அரிசி கழுவிய நீரில் வேகவைத்தால் சீக்கிரம் வேகும்.
பச்சை மிளகாய் பழுக்காமலிருக்க அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி போட்டு வைக்கலாம்.
ஊறுகாயில் ஒரு சிட்டிகை சோடியம் பென்ஸோயிட் போட்டுவைத்தால் எவ்வளவு நாளானாலும் கெடாது.
பாம்பே ரவையை வறுத்து பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்கீரை, உப்பு போட்டு அரைத்து தோசை வார்த்தால் நன்றாக இருக்கும்.
சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் பொழுது ஒரு பிடி பாசிப் பருப்பையும் வேகவிட்டால் ருசி தனியாக இருக்கும்.
பருப்பை வேக வைக்கும் பொழுது இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டால் பருப்பு சீக்கிரம் வேகும்.
நசத்துக்கு நெய்யில் கடுகு தாளித்தால் மணமாக இருக்கும்.
சப்பாத்தி மாவில் கொஞ்சம் மைதா மாவும் சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி உப்பும்.
சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால் வேக வைத்த இரண்டு மூன்று உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டுவிட்டால் போதும்.
கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு அரை கப், வறுத்த உளுத்தம்மாவு ஒரு ஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் வெடிக்காது. எண்ணெயும் குடிக்காது.
மில்க்மெய்ட் சேர்த்து செய்யும் சர்க்கரைப் பொங்கல் புதிய சுவையுடன் இருக்கும்.
பெரிய சப்பாத்தியாக இட்டு பாட்டில் மூடியினால் சின்னச்சின்ன சப்பாத்திகளாக வெட்டி பூரி செய்யலாம்.
தோசை மாவை கல்லில் விட்டு அதன்மீது துருவின தேங்காயை பரப்பினால் தோசை ருசியாக இருக்கும்.
நெய்யை பிரட் மீது தடவி அதன் மீது கொஞ்சம் தேனையும் தடவிவிட்டால் ஜாம் தேவையில்லை.
சேம்பு, பிடிகரணை ஆகியவைகளை இட்டிலி தட்டில் வேகவைத்தால் குழைந்து போகாது.
ஊறவைத்த உளுத்தம் பருப்பை அரைத்து கோதுமை மாவுடன் முதல் நாளே உப்பு போட்டு கரைத்து வைத்தால் தோசை நன்றாக இருக்கும்.
முதல் நாள் இரவே கோதுமை மாவை கரத்து வைத்து மறுநாள் காலையில் தோசை வார்த்தால் கல்லில் ஒட்டிக்கொள்ளாது.
குலோப்ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் கலந்துவிட்டால் உறையாமலும் கெட்டுப்போகாலும் இருக்கும்.
வேகைவைத்த உருளைக்கிழங்கை போட்டு அடைக்கு அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
அப்பளத்தை எண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையாக இருக்கும்.
துவரம் பருப்புக்கு பதிலாக கொள்ளை ஊறப்போட்டு அரைத்த அடை புது சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் சுடும் பொழுது கத்தி முனையில் எண்ணெய் தடவிக் கத்திரிக்கையை சொருகிக் கொண்டு சுடவேண்டும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தொர் மிளகாயை வறுத்தால் எண்ணை கொஞ்சமாக செலவழியும்.

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

சோடியம் பென்ஸோயிட் சேர்ப்பது உட்பட அனைத்தும் பயனுள்ளவை... சிலவற்றை வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

ராஜி சொன்னது… [Reply]

பயனுள்ள குறிப்புகள்

ஜோதிஜி சொன்னது… [Reply]

அதென்ன தொர் மிளகாய்? புதிதாக உள்ளதே?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன். தமிழ்மண ஓட்டுப்பட்டையின் பிரச்னையை தங்களின் சுட்டிக்காட்டலுக்குப்பின் சரி செய்துவிட்டேன். நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ராஜி அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே!

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்
சிறப்பான சமயல் குறிப்பு... குறிப்பு எடுத்தாச்சி... அசத்திப்பார்க்கலாம்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Jayadev Das சொன்னது… [Reply]

Useful tips, thanks.................

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ரூபன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ஜெயதேவ்தாஸ் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!