வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கின்னஸ் உலக சாதனை -2012

இது இந்த ஆண்டின் உலக சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள்

                                                  வயதான இரட்டையர்கள்


                                                               மிகச்சிறிய நாய்


                                            மிகக் குறைந்த உயரமுடைய பெண்

 

                Most number of people to fit into a pair of underpants


                       Most needles inserted into the head
 
             
              Longest distance full-body burn without oxygen


                                     Longest moustache


                         Fastest time to enter a suitcase





                                    Longest chocolate bar


                                Most piercings on a male




புதன், 19 செப்டம்பர், 2012

ஆட்சியும் அவலக்காட்சியும்...


22.02.1990                                                                                                     பெங்களூர்-58


அன்பிற்குரிய இனிய நண்பர் திரு.கவிப்ரியனுக்கு, உனது அன்பை என்றும் மறவாத நண்பன் பாலசண்முகம் எழுதும் மடல்.

உங்களின் 11.01.1990 தேதியிட்ட மடல் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக மடல் போட இயலவில்லை. மன்னிக்கவும், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் சில பிரச்னைகள், சிக்கல்கள் காரணமாக மன வேதனையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். எனவே மனல் போட தாமதம் நேரிட்டுவிட்டது. பெற்றோர், உடன்பிறந்தோரின் பாசத்தில் சிறு விரிசல்கள்!

மற்றபடி நீங்கள் சுயதொழில் மேற்கொண்டதில் மகிழ்ச்சி.( உங்கள் போனஸ் பணம் கம்பனியிலிருந்து பெற்றுவிட்டீர்கள்தானே?!) முன்னேற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நண்பன் சுப்பிரமணியின் மனைவிக்கு கடந்த 14.02 1990 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். மற்றபடி நண்பர்களும் நலம்தான். நீங்கள் பெங்களூர் வரும்போது அவசியம் என்னை சந்திப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்கள் ஐ.டி.ஐ ஆசிரியர் (சுப்பிரமணி திருமணத்திற்கு வந்திருந்தவர்) இறந்துவிட்ட விபரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு நான் தினமணியில் வாசகர் கருத்துக்கள் சரிவர எழுதுவதில்லை. எழுதும் மனநிலையும் இல்லை. என் மனைவி பெயரில் இரண்டு கடிதங்கள் பிரசுரமாகியிருந்தது. 11.02.1990 'கல்கி' இதழிலும் மனைவி பெயரில் கருத்து பிரசுரமாகியிருந்தது. மனைவி ஊரில் தான் இருக்கிறாள். இன்னும் ஓரிரு வாரத்தில் குடும்பத்தை பெங்களூருக்கு மாற்றிவிடுவேன்.
என் மனைவியும் ஒரு சராசரி பெண்தான். என் மனநிலைக்கு ஏற்றவாறு இவளை மாற்றுவதில்தான் என் எதிர்காலமே அடங்கி உள்ளது. அது வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

வி.பி.சிங் ஆட்சி பற்றி கருத்து கேட்டு எழுதியிருந்தீர்கள். ராஜீவை விட பரவாயில்லை. வி.பி.சிங் ஒருவர் மட்டுமே சரியானவராக இருப்பதில் பயன் ஏதுமில்லை. பதவி வெறி பிடித்த தேவிலால் போன்றோரும், சந்திரசேகர் போன்றோரும் இருக்கும்வரை தேசிய முன்னனி அரசு சோதனையை சந்திக்கப்போவது நிச்சயம். வர்க்க ரீதியான புரட்சி மட்டுமே எதிர்கால இந்தியாவை வளப்படுத்த முடியும்.

ஜனதாதள வேட்பாளர்கள் தேர்வு குறித்து இரு தினங்களுக்கு முன்பு தினமணியில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. கேடிகளும், ரௌடிகளும் எல்லாக் கட்சிகளிலும் தங்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கும் கேவலநிலை என்றுமே மாறாது. இந்திய அரசியல் அமைப்பில் இது மாறாத சாபக்கேடாகும்.
ஏழ்மையும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சரியான தொலை நோக்கு திட்டங்கள் இல்லாத இந்தியா அதிகமான வெளிநாட்டுக் கடனில் சிக்கி மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் மறுமலர்ச்சிக்கு இளைய தலைமுறைகள் வித்திடவேண்டும். நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளும் இளைய தலைமுறையினர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. அவர்களும் தெரிந்து கொண்டதை புரிந்துகொண்டு உணர்ந்து செயல்பட முன்வருவதில்லை. காலத்தின் மாற்றம் நிச்சயமாக ஒரு புரட்சியை இந்தியாவில் தோற்றுவிக்கும். பதுக்கலும், சுரண்டலும், அடக்குமுறைகளும் இந்த நாட்டை சீரழிவுப்பாதையில் அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது.

ஆட்சிகள் மாறினாலும் நாட்டில் அவலக்காட்சிகள் மாறப்போவதில்லை. இப்போதைக்கு வி.பி.சிங்கின் ஆட்சி ராஜீவ் ஆட்சிக்கு சரியான மாற்று என்றாலும்கூட இந்த அரசும் மனிதகுல வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இயலாது. வி.பி.சிங்கின் ஆரம்பகால நல்ல நடவடிக்கைகள், முடிவுகள் கூட போகப்போக சரியான பாதையைக் காட்டப்போவதில்லை.

மற்றபடி உங்கள் கருத்தை எழுதவேண்டுகிறேன். உங்களின் திருமண ஏற்பாடுகள் பற்றி செய்தி இருப்பின் தெரிவிக்கவும். இதுதான் விபரம்.

இப்படிக்கு,
என்றும் மாறாத அன்புடன்,

பால.சண்முகம்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எனக்குப் பிடித்த கேள்வி-பதில்கள்!



மௌனம் என்பது என்ன?
சில நேரங்களில் மிகக் கடுமையான விமர்சனம்!

மனவலிமைக்கு எதிரானது எது?
பயன்படுத்தாத இரும்பு துருபிடித்துவிடுகிறது. தேங்கிய தண்ணீர் அழுக்கடைந்து விடுகிறது. குளிர்ந்த தட்பவெப்பத்தில் தண்ணீர் உறைந்து விடுகிறது. செயலற்ற தன்மை மனதை கூறுபோட்டு விடுகிறது.

சாதிப்பவர்களுக்கும், சாதாரணமானவர்களுக்கும் என்ன வித்தாயாசம்?
உயர்ந்த மனிதர்கள் திட்டவட்டமான தீர்மானங்களை வைத்திருப்பார்கள். சாதாரணமான மனிதர்களிடம் வெறும் அபிப்ராயம் மட்டுமே இருக்கும்.

எந்த வயது வரை இளைஞன் என்று சொல்லிக்கொள்ளலாம்?
தியோடர் க்ரீன் என்பவர் அமெரிக்க செனட்டராக இருந்தவர். தன்னுடைய 87-வது பிறந்த நாளில் இப்படிச் சொன்னார், ‘கிழவனாகக் கிழவனாகக் வாழ்க்கை இன்பங்களையெல்லாம் கைவிட வேண்டும் என்றே பலரும் சொல்கிறார்கள். வாழ்க்கை இன்பங்களை எல்லாம் கைவிடக் கைவிடத்தான் கிழத்தனம் வருகிறது என்பது என் அபிப்ராயம்.

வயதுதானே வாழ்க்கையின் உரைகல்?
வாழ்ந்த வாழ்க்கை எந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதைத் தீர்மானிப்பது செயல்கள், வருடங்கள் அல்ல!

எதையும் படிப்பது எந்த விதத்தில் பயன் தருகிறது?
மேலும் மேலும் படிக்கப்படிக்க, மேலும் மேலும் நமது அறியாமையைக் கண்டுகொள்ள முடியும்!

காதலில் சிறந்தவர் ஆணா? பெண்ணா?
பைரன் ஒரு கவிதையில் சொல்வார், ஆண்களின் வாழ்க்கையில் காதல் என்பது ஒரு பகுதிதான். ஆனால் பெண்களின் வாழ்க்கையே காதலில்தான் அடங்கியிருக்கிறது.

காதல் என்பது இரண்டு நபர்களின் சுயநல வெளிப்பாடுதானே?
யாரையாவத் காதலித்தாக வேண்டும், எதன் மேலாவது அன்பு செலுத்தியாக வேண்டும் எனபது சுயநலமில்லை. இயற்கையின் அழகான விதி.

காதல் இனிமையானதா?
காதல் கொள்வது இனிமையானது. காதலிக்கப்படுவது அதைவிட இனிமையானது!

காதல் என்பது புனிதமானதா?
இல்லை! ஆனால் என்றும் இளமையானது!

திருமணம் செய்யாமலிருப்பது சுதந்தரமா? கட்டுப்பாடா?
இரண்டும் இல்லை. புத்திசாலித்தனம்!

நட்பையும் காதலையும் பிரிக்கும் மெல்லிய இழை எது? 
காமம்!


ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

எம்.ஜி.ஆர் சில நினைவுகள்



  • எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். அம்பத்தூரில் நான் டி.எஸ்.பி.ஆக இருந்தேன். அப்போது ராமாவரம் தோட்டத்துக்குப் பாதுகாப்புக்காகப் போயிருந்தேன். காலை நேரம். என்னுடைய சில நண்பர்கள் அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள். டிபனுக்கு சாப்பிட அழைத்தார்கள். போனேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் டிபன். பிரமாதமாயிருந்தது. ருசித்துச் சாப்பிட்டுச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்ததை எம்.ஜி.ஆர். மாடியிலிருந்து இறங்கி வந்தபோது கேட்டிருக்கிறார்.

  • பதினைந்து நாட்கள் கழித்து போலிஸ் மைக்கில் ஒரு தகவல். என்னை ராராவரம் தோட்டத்துக்கு வரச்சொன்னார்கள். உடனே என்னவோ ஏதோ என்று அவசரமாகப் போனேன். எம்.ஜி.ஆரின் பி.ஏ. மாணிக்கம்தான் இருந்தார். 'இன்னிக்குக் காலையில் இடியாப்பம் பண்ணியிருக்கோம், அம்பத்தூர் டி.எஸ்.பியைக் கூப்பிட்டுச் சாப்பிடச்சொல்' னு சொல்லிட்டுப் போயிருக்கார் சின்னவர்' என்று சொன்னார் மாணிக்கம். 'என்ன இது இதுக்காகவா வரச்சொன்னீங்க?' என்று நான் தயங்கினதும், நீங்க சாப்பிடாமப் போனா சின்னவர்கிட்ட என்னால பதில் பேசமுடியாதுன்னு உட்கார வச்சுட்டார். சாதாரண சாப்பாட்டு விஷயத்தில்கூட எம்.ஜி.ஆர் காட்டின அக்கறை வியக்க வைத்துவிட்டது.

  • 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஒரு சம்பவம்! எம்.ஜி.ஆர் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். எம்.ஆர். ராதாவும் ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து பொது மருத்துவமனைக்கு மாறினார். மேல்மாடியில் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை நடக்கிறது. கீழ் வார்டில் படுக்கையில் ராதா. அவருக்காக பந்தோபஸ்துக்காக நான் உடனிருந்தேன். ஒரு வார காலம் இருந்தபோது ஒருநாள் பகலில் கரகரத்த குரலில் கத்திக் கூப்பிட்டார். 'இன்ஸ்பெக்டர்…'என்ன பக்கத்தில் போய்க்கேட்டேன். 'என்னய்யா நாடு இது…? சுதந்திரம் வாங்கி இருபது வருஷம் ஆகப்போவுது. இன்னும் சரியான துப்பாக்கி கூட கிடைக்கமாட்டேங்குது… அதுல சுட்டாலும் ஆள் சாகமாட்டாங்க போலிருக்கே'. எனக்கே கொஞ்சம் அதிர்ச்சி. பிறகு மூத்த அதிகாரிகளிடம் சொன்னேன். அவர் அந்த மாதிரி தனி கேரக்டர் என்றனர்.
- ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ராமநாதன்.



நீங்கள் யாரோட ரசிகர்?

ஒரு நொடிகூட யோசிக்காம சொல்லுவேன் எம்.ஜி.ஆருன்னு.

'வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல, கொண்டாடுவதற்குன்னு ரஜனீஷ் சொன்னது மாதிரி, சினிமாங்கிறது கூட வெறுமனே பாக்கிறதுக்கு மட்டுமில்ல பார்த்து சந்தோஷமடையறதுக்கு, உற்சாகமடையறதுக்கு.

இதை எப்பவும் என்னால எம்.ஜி.ஆர். படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியுது. அவர் நடிப்பைப் பார்த்தா தெம்பு வரும். தைரியம் வரும். அதனால எனக்குப் பிடித்த நடிகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். சினாமாவில் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர். தரும் உற்சாகத்தை வேறு எந்த நடிகராலும் தரமுடியாது. அதனாலேயே என்னோட நடிப்புல அவரோட சாயல் இருக்குன்னு யார் சொன்னாலும் அதை சந்தோஷமா பாராட்டா ஏத்துக்குவேன்.


சத்யராஜ் (நடிகர்).

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

எத்தனை யுகங்கள்!


எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
முகமும் அற்று முகவரி அற்று
முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்!
இல்லம் அலுவல் இரண்டிலும் நொந்து
இரட்டைச் சுமைக்கு ஆளானோம் !
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!

இப்போதாவது சிறை உடைப்போம்
எத்தனை காலம் உறங்கி விட்டோம்!
பெண்கள் ஜாதி உலகில் பாதி
என்பதை உணர்த்த குரல் கொடுப்போம்!
நாணம் சுமந்த பெண்கள் எழுந்து
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!
வானம் சுமக்கும் காலமிது!

ஆடை நகைகள் அணிந்தது போல்
ஆயுதம் அணியும் காலமிது!
ஆணும் பெண்ணும் எதிலும் பாதி
அறிவியல் சொல்லிய வேதமிது!
பெண்ணின் இறக்கை பறியாதிருந்தால்
வானம் அவர்களின் எல்லையன்றோ!
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்!

ஆணும் பெண்ணும் ஆணையிட்டழைத்தால்
வானம் பூமியில் வந்திறங்கி வணங்காதோ!
எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
இன்றே தோன்றின எங்கள் முகங்கள்!

- வைரமுத்து 


சனி, 1 செப்டம்பர், 2012

பாலகுமாரன் பக்கம்



             பாலகுமாரன் – ரஜினிகாந்த் உரையாடல்

ஒரு ஆள் எதுக்கு மத்தவங்கள அட்ராக்ட் பண்ணனும்?

மனுஷன் இயல்பு அது. மத்தவங்களவிட ஒரு அடி உயரமா நடக்கணும்னு வர்ற இயல்பான குணம் அது. எல்லார்கிட்டயும் இருக்கிற புத்தி அது. அதை ஏன் அடக்கிவைக்கனும்? உள்ளே ஆசையை வச்சுகிட்டு அடக்கமா இருக்கேன்னு பொய் சொல்லனும்? பி ஈஸி பிரதர்! வயித்து பசிக்கு சோறு போடறமாதிரி மனப்பசிக்கு தீனி போடவேண்டாமா?

பெண்ணைப் பார்க்கிறபோது எப்படி ஃபீல் பண்றீங்க? வெறும் போகப்பொருளாகவா.... இல்லை .....

பெற்ற தாய் மாதிரியானு கேட்காதீங்க. அது என்னை அணுகுகிற பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்தது. தாய்னு வந்தா தாய். சகோதரின்னு வந்தா சகோதரி. சரின்னா சரி.. வெறும் ஸ்நேகிதின்னா ஸ்நேகிதி!

புகழும், பெண்ணும் வந்த பிறகு நெருக்கமாகிற பெண்கள் மீது ஒரு சந்தேகம் வர்றது உண்டா?

எதுக்கு சந்தேகம்? என்னை மிஞ்சி என்ன நடக்கும்? பிரதிபலன் எதிர்பார்க்கிறவள்னா முடிஞ்ச பிரதிபலன் செய்துடறேன். பேராசையான பிரதிபலன்னா ஒதுங்கிடறேன்.

பெண்களே வேண்டாம்னு ஒரு நிலை உங்க மனசுக்குள்ள வருமா?

பெண் இல்லமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு! எதிர்காலத்துல எப்படி மாறுமோ?

செக்ஸ் என்பதை எப்படி நினைக்கிறீங்க? ரிலாக்ஸ் பண்ற விஷயமா? ஞானமா? இல்லை குழந்தைகள் பெறும் முயற்சியா?

எல்லாமும். இது பரம சுகம். ஆனந்தம். வெறுத்து ஒதுக்குகிற அளவுக்கு இது விஷயம் இல்லை. சாதாரணமானவர்களுக்கு இது நிம்மதியான விஷயம்.
    ***************************************************************
*      ‘மௌனம் பழகினால்தான் நம்மை நாமே தேடமுடியும்!
*      புருஷன் கேட்டான் என்று வெறுமனே விட்டுக்கொடுக்கிறவர்கள் சாதாரணமானவர்கள்.
*      கஷ்டமான அனுபவங்களிலிருந்துதான் ஞானம் பிறக்கும்.
*      வலியும், அவமானமும் மனிதர்களைத் தாக்கும் வேகம் மிக விசித்திரமானது.
*      அறிவினால் துக்கம் விலகிவிடும் என்பது உண்மையல்ல. துக்கம் அறிவையும் கெடுக்கும்!
*      கேலி என்பது புத்தியின் தாக்குதல். உடம்பு வலு இல்லாதவர்களின் மிகக்கூர்மையான ஆயுதம். கொஞ்சம் மக்கான மனிதர்களுக்கு வைக்கப்படும் கன்னிவெடி.
*      கேலி சிலசமயம் கடும்பழி வாங்கும் உணர்ச்சியை பதிலுக்கு பதில் செய்யும். வஞ்சத்தை தூண்டும்.
*      ஊனத்தை கேலி செய்கிறவனை, குறையைப் பார்த்து சிரிக்கிறவனை மனிதப்பிறவியாக நினைக்க முடியாது. அவன் ஒரு இழிபிறப்பு. 

 இந்த பாலகுமாரன் யார் என்றே 1990 வரை எனக்குத்தெரியாது. என் ஸ்நேகிதி தேன்மொழிதான் இவரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தாள். அன்று முதல் பாலகுமாரன் பைத்தியமானேன். எல்லாம் கொஞ்ச காலம்தான். அவரின் நாவல்கள் படிக்கும்போதெல்லாம் குறிப்பெடுத்து வைத்தவை இவைகள்!