- எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். அம்பத்தூரில் நான் டி.எஸ்.பி.ஆக இருந்தேன். அப்போது ராமாவரம் தோட்டத்துக்குப் பாதுகாப்புக்காகப் போயிருந்தேன். காலை நேரம். என்னுடைய சில நண்பர்கள் அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள். டிபனுக்கு சாப்பிட அழைத்தார்கள். போனேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் டிபன். பிரமாதமாயிருந்தது. ருசித்துச் சாப்பிட்டுச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்ததை எம்.ஜி.ஆர். மாடியிலிருந்து இறங்கி வந்தபோது கேட்டிருக்கிறார்.
- பதினைந்து நாட்கள் கழித்து போலிஸ் மைக்கில் ஒரு தகவல். என்னை ராராவரம் தோட்டத்துக்கு வரச்சொன்னார்கள். உடனே என்னவோ ஏதோ என்று அவசரமாகப் போனேன். எம்.ஜி.ஆரின் பி.ஏ. மாணிக்கம்தான் இருந்தார். 'இன்னிக்குக் காலையில் இடியாப்பம் பண்ணியிருக்கோம், அம்பத்தூர் டி.எஸ்.பியைக் கூப்பிட்டுச் சாப்பிடச்சொல்' னு சொல்லிட்டுப் போயிருக்கார் சின்னவர்' என்று சொன்னார் மாணிக்கம். 'என்ன இது இதுக்காகவா வரச்சொன்னீங்க?' என்று நான் தயங்கினதும், நீங்க சாப்பிடாமப் போனா சின்னவர்கிட்ட என்னால பதில் பேசமுடியாதுன்னு உட்கார வச்சுட்டார். சாதாரண சாப்பாட்டு விஷயத்தில்கூட எம்.ஜி.ஆர் காட்டின அக்கறை வியக்க வைத்துவிட்டது.
- 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஒரு சம்பவம்! எம்.ஜி.ஆர் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். எம்.ஆர். ராதாவும் ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து பொது மருத்துவமனைக்கு மாறினார். மேல்மாடியில் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை நடக்கிறது. கீழ் வார்டில் படுக்கையில் ராதா. அவருக்காக பந்தோபஸ்துக்காக நான் உடனிருந்தேன். ஒரு வார காலம் இருந்தபோது ஒருநாள் பகலில் கரகரத்த குரலில் கத்திக் கூப்பிட்டார். 'இன்ஸ்பெக்டர்…'என்ன பக்கத்தில் போய்க்கேட்டேன். 'என்னய்யா நாடு இது…? சுதந்திரம் வாங்கி இருபது வருஷம் ஆகப்போவுது. இன்னும் சரியான துப்பாக்கி கூட கிடைக்கமாட்டேங்குது… அதுல சுட்டாலும் ஆள் சாகமாட்டாங்க போலிருக்கே'. எனக்கே கொஞ்சம் அதிர்ச்சி. பிறகு மூத்த அதிகாரிகளிடம் சொன்னேன். அவர் அந்த மாதிரி தனி கேரக்டர் என்றனர்.
நீங்கள் யாரோட ரசிகர்?
ஒரு நொடிகூட யோசிக்காம சொல்லுவேன் எம்.ஜி.ஆருன்னு.
'வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல, கொண்டாடுவதற்குன்னு ரஜனீஷ் சொன்னது மாதிரி, சினிமாங்கிறது கூட வெறுமனே பாக்கிறதுக்கு மட்டுமில்ல பார்த்து சந்தோஷமடையறதுக்கு, உற்சாகமடையறதுக்கு.
இதை எப்பவும் என்னால எம்.ஜி.ஆர். படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியுது. அவர் நடிப்பைப் பார்த்தா தெம்பு வரும். தைரியம் வரும். அதனால எனக்குப் பிடித்த நடிகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். சினாமாவில் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர். தரும் உற்சாகத்தை வேறு எந்த நடிகராலும் தரமுடியாது. அதனாலேயே என்னோட நடிப்புல அவரோட சாயல் இருக்குன்னு யார் சொன்னாலும் அதை சந்தோஷமா பாராட்டா ஏத்துக்குவேன்.
சத்யராஜ் (நடிகர்).
7 கருத்துகள்:
அழகான நினைவுகள் சார்!
பகிர்ந்தமைக்கு நன்றி
வருகைக்கு நன்றி கரிகாலன் அவர்களே!
இவனெல்லாம் ஒரு மனுஷன். அவனுக்கு ஒரு பதிவு. சே
எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துப்போவதில்லை நண்பரே! உங்களுக்கேன் இந்தக் காழ்ப்புணர்ச்சியும் கோபமும்!
மறக்க முடியாத மாமனிதர் அவர்.
ஆம் நண்பரே! இப்போதும் பாருங்கள் அவருடைய பதிவுதான் பிரபல இடுகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. பதிவிட்ட இரண்டே நாளில் 1370 பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று இப்போதுதான் தோன்றுகிறது!
thanks for sharing
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!