Saturday, September 1, 2012

பாலகுமாரன் பக்கம்             பாலகுமாரன் – ரஜினிகாந்த் உரையாடல்

ஒரு ஆள் எதுக்கு மத்தவங்கள அட்ராக்ட் பண்ணனும்?

மனுஷன் இயல்பு அது. மத்தவங்களவிட ஒரு அடி உயரமா நடக்கணும்னு வர்ற இயல்பான குணம் அது. எல்லார்கிட்டயும் இருக்கிற புத்தி அது. அதை ஏன் அடக்கிவைக்கனும்? உள்ளே ஆசையை வச்சுகிட்டு அடக்கமா இருக்கேன்னு பொய் சொல்லனும்? பி ஈஸி பிரதர்! வயித்து பசிக்கு சோறு போடறமாதிரி மனப்பசிக்கு தீனி போடவேண்டாமா?

பெண்ணைப் பார்க்கிறபோது எப்படி ஃபீல் பண்றீங்க? வெறும் போகப்பொருளாகவா.... இல்லை .....

பெற்ற தாய் மாதிரியானு கேட்காதீங்க. அது என்னை அணுகுகிற பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்தது. தாய்னு வந்தா தாய். சகோதரின்னு வந்தா சகோதரி. சரின்னா சரி.. வெறும் ஸ்நேகிதின்னா ஸ்நேகிதி!

புகழும், பெண்ணும் வந்த பிறகு நெருக்கமாகிற பெண்கள் மீது ஒரு சந்தேகம் வர்றது உண்டா?

எதுக்கு சந்தேகம்? என்னை மிஞ்சி என்ன நடக்கும்? பிரதிபலன் எதிர்பார்க்கிறவள்னா முடிஞ்ச பிரதிபலன் செய்துடறேன். பேராசையான பிரதிபலன்னா ஒதுங்கிடறேன்.

பெண்களே வேண்டாம்னு ஒரு நிலை உங்க மனசுக்குள்ள வருமா?

பெண் இல்லமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு! எதிர்காலத்துல எப்படி மாறுமோ?

செக்ஸ் என்பதை எப்படி நினைக்கிறீங்க? ரிலாக்ஸ் பண்ற விஷயமா? ஞானமா? இல்லை குழந்தைகள் பெறும் முயற்சியா?

எல்லாமும். இது பரம சுகம். ஆனந்தம். வெறுத்து ஒதுக்குகிற அளவுக்கு இது விஷயம் இல்லை. சாதாரணமானவர்களுக்கு இது நிம்மதியான விஷயம்.
    ***************************************************************
*      ‘மௌனம் பழகினால்தான் நம்மை நாமே தேடமுடியும்!
*      புருஷன் கேட்டான் என்று வெறுமனே விட்டுக்கொடுக்கிறவர்கள் சாதாரணமானவர்கள்.
*      கஷ்டமான அனுபவங்களிலிருந்துதான் ஞானம் பிறக்கும்.
*      வலியும், அவமானமும் மனிதர்களைத் தாக்கும் வேகம் மிக விசித்திரமானது.
*      அறிவினால் துக்கம் விலகிவிடும் என்பது உண்மையல்ல. துக்கம் அறிவையும் கெடுக்கும்!
*      கேலி என்பது புத்தியின் தாக்குதல். உடம்பு வலு இல்லாதவர்களின் மிகக்கூர்மையான ஆயுதம். கொஞ்சம் மக்கான மனிதர்களுக்கு வைக்கப்படும் கன்னிவெடி.
*      கேலி சிலசமயம் கடும்பழி வாங்கும் உணர்ச்சியை பதிலுக்கு பதில் செய்யும். வஞ்சத்தை தூண்டும்.
*      ஊனத்தை கேலி செய்கிறவனை, குறையைப் பார்த்து சிரிக்கிறவனை மனிதப்பிறவியாக நினைக்க முடியாது. அவன் ஒரு இழிபிறப்பு. 

 இந்த பாலகுமாரன் யார் என்றே 1990 வரை எனக்குத்தெரியாது. என் ஸ்நேகிதி தேன்மொழிதான் இவரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தாள். அன்று முதல் பாலகுமாரன் பைத்தியமானேன். எல்லாம் கொஞ்ச காலம்தான். அவரின் நாவல்கள் படிக்கும்போதெல்லாம் குறிப்பெடுத்து வைத்தவை இவைகள்!


2 comments:

Jayadev Das said... [Reply]

இதுல யாரு ரஜினி, யாரு பாலகுமாரன்?

கவிப்ரியன் said... [Reply]

கேள்வி கேட்பவர் பாலகுமாரன்! நண்பரே!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!