செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எனக்குப் பிடித்த கேள்வி-பதில்கள்!



மௌனம் என்பது என்ன?
சில நேரங்களில் மிகக் கடுமையான விமர்சனம்!

மனவலிமைக்கு எதிரானது எது?
பயன்படுத்தாத இரும்பு துருபிடித்துவிடுகிறது. தேங்கிய தண்ணீர் அழுக்கடைந்து விடுகிறது. குளிர்ந்த தட்பவெப்பத்தில் தண்ணீர் உறைந்து விடுகிறது. செயலற்ற தன்மை மனதை கூறுபோட்டு விடுகிறது.

சாதிப்பவர்களுக்கும், சாதாரணமானவர்களுக்கும் என்ன வித்தாயாசம்?
உயர்ந்த மனிதர்கள் திட்டவட்டமான தீர்மானங்களை வைத்திருப்பார்கள். சாதாரணமான மனிதர்களிடம் வெறும் அபிப்ராயம் மட்டுமே இருக்கும்.

எந்த வயது வரை இளைஞன் என்று சொல்லிக்கொள்ளலாம்?
தியோடர் க்ரீன் என்பவர் அமெரிக்க செனட்டராக இருந்தவர். தன்னுடைய 87-வது பிறந்த நாளில் இப்படிச் சொன்னார், ‘கிழவனாகக் கிழவனாகக் வாழ்க்கை இன்பங்களையெல்லாம் கைவிட வேண்டும் என்றே பலரும் சொல்கிறார்கள். வாழ்க்கை இன்பங்களை எல்லாம் கைவிடக் கைவிடத்தான் கிழத்தனம் வருகிறது என்பது என் அபிப்ராயம்.

வயதுதானே வாழ்க்கையின் உரைகல்?
வாழ்ந்த வாழ்க்கை எந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதைத் தீர்மானிப்பது செயல்கள், வருடங்கள் அல்ல!

எதையும் படிப்பது எந்த விதத்தில் பயன் தருகிறது?
மேலும் மேலும் படிக்கப்படிக்க, மேலும் மேலும் நமது அறியாமையைக் கண்டுகொள்ள முடியும்!

காதலில் சிறந்தவர் ஆணா? பெண்ணா?
பைரன் ஒரு கவிதையில் சொல்வார், ஆண்களின் வாழ்க்கையில் காதல் என்பது ஒரு பகுதிதான். ஆனால் பெண்களின் வாழ்க்கையே காதலில்தான் அடங்கியிருக்கிறது.

காதல் என்பது இரண்டு நபர்களின் சுயநல வெளிப்பாடுதானே?
யாரையாவத் காதலித்தாக வேண்டும், எதன் மேலாவது அன்பு செலுத்தியாக வேண்டும் எனபது சுயநலமில்லை. இயற்கையின் அழகான விதி.

காதல் இனிமையானதா?
காதல் கொள்வது இனிமையானது. காதலிக்கப்படுவது அதைவிட இனிமையானது!

காதல் என்பது புனிதமானதா?
இல்லை! ஆனால் என்றும் இளமையானது!

திருமணம் செய்யாமலிருப்பது சுதந்தரமா? கட்டுப்பாடா?
இரண்டும் இல்லை. புத்திசாலித்தனம்!

நட்பையும் காதலையும் பிரிக்கும் மெல்லிய இழை எது? 
காமம்!


2 கருத்துகள்:

ஆத்மா சொன்னது… [Reply]

வாழ்க்கை இன்பங்களை எல்லாம் கைவிடக் கைவிடத்தான் கிழத்தனம் வருகிறது என்பது என் அபிப்ராயம்.

//////////////////////////////

அழகான கேள்வி பதில்கள் சார்.. நேற்று இதனை பதிவிட்டு பின்ன்ர் நீக்கி விட்டீர்கள் போல...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சிட்டுக்குருவி!

இணைய இணைப்பு சரிவர கிடைக்காததினால் சிறு தடங்கல் ஏற்பட்டது.அவ்வளவே, வேறொன்றும் இல்லை!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!