செவ்வாய், 27 டிசம்பர், 2011

கண்ணம்மா என் தோழி!



பாரதிக்கு மட்டும் தான் கண்ணம்மாவா?
எனக்கும் தான்!
காதலியும் இல்லை
கனவுக்கன்னியும் இல்லை
தோழி!
ஆம், அவளென் தோழி!
என்னுள் இருந்து என்னை உயர்த்தி
வறண்ட என் மனதில் அன்பைச் செலுத்தி
அமாவாசைக் கனவுகளால்
நிராசையாய்
நீர்த்துப்போன
என் கனவை நிஜமாக்கி
உள்ளத்தில் உண்மையினைப் பரிமாறி
பலமாய்,
பாலமாய் என்
உயிராய் இருக்கும் இவள்
பாதியில் போகிறாள்!
என்ன செய்ய?
அவள் நட்பினை
நேசிப்பது உண்மை
அவள் நினைவையே
நேசித்துக்கொண்டிருப்பேன்
என்னைப்
பிரிந்து சென்றாலும்.

மறக்கமுடியாத நினைவுகளோடு,


2 கருத்துகள்:

arasan சொன்னது… [Reply]

கவிதை கச்சிதமாய் பொருந்தி நிற்கிறது ...
வரிகளில் யதார்த்தம் இயல்பாய் வருகிறது ..
வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கவிஞர்களைப் போற்றும் அரசே நீர் நீடூடி வாழ்க. வந்து வாழ்த்தியமைக்கு நன்றி அரசன்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!