திங்கள், 19 டிசம்பர், 2011

சொல் நிலவே!


ஒரு கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற சில கவிதைகளில் ஒன்றுதான் இந்த நிலவைப் பற்றிய கவிதை. இந்தக் கவிதைகளைப் பற்றிதான் எனது நண்பர்கள் கடிதங்களில் பாராட்டி எழுதியிருந்தார்கள். ஒவ்வொன்றாய் அவைகளை வெளியிடுகிறேன், என் கவிதைகள் என்ற தலைப்பில்.


பௌர்ணமி நாளினிலே நிலவே நீ
பகல் போல் ஒளி தருவாய் அந்த
பகலவன் வந்தாலோ நிலவே நீ
பாய்ந்தோடி மறைகின்றாய் அது ஏன்?
இரவினிலே வரும் நிலவே நீ
இனிமைதனைத் தருகின்றாய் தினம்
வளர்பிறையாய் வரும் நிலவே நீ
வளர்ந்த பின்னே மறைகின்றாய் அது ஏன்?
ஊருக்கெல்லாம் ஒரு விளக்காய் நீ
ஒளியேற்றும் திருவிளக்காய் அந்த
செயற்கை விளக்கையெல்லாம் நீ
செயலிழக்கச் செய்கின்றாய் அது ஏன்?
நாளெல்லாம் இருந்தாலும்
நாங்கள் உனைப் பார்ப்பதில்லை அந்த
ஞாயிறு தன் ஒளியாலே உனை
நலிந்திடச் செய்தானே அது ஏன்?


2 கருத்துகள்:

arasan சொன்னது… [Reply]

கவிதையின் வரிகள் இனிமை ...
மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர்ந்து வரும் அரசனுக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!