ஞாயிறு, 11 மே, 2014

எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகான சந்திப்பு!


எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் தரையில் உட்கார்ந்து பேசற மாதிரியான இந்தக்காட்சி பெரியார் இறந்த தினத்தில் எடுக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய சோகம் அது.

சென்னை ராஜாஜி ஹாலுக்கு பெரியாரின் உடல் எடுத்து வரப்படுவது அறிந்து ராமாவரம் தோட்டத்திலிருந்து காரில் நாங்களும் புரட்சித்தலைவரும் கிளம்பினோம். நாங்கள் போன அதே நேரத்தில் அப்போதைய முதல்வரான கருணாநிதி தன் மந்திரி சபை சகாக்கள் புடைசூழ அமர்ந்திருந்தார். இன்னொரு புறம் காமராஜரும் இருந்தார்.

ஹாலின் இடது புறம் தன் நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்ததும், 'என்ன தலைவரே!’ என்று அழைத்தார். ‘என்ன ராதாண்ணே..! என்றபடி அவர் அருகே சென்றார் எம்.ஜி.ஆர்'.!

எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அதற்கான சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு வந்தபின் அப்போதுதான் முதல்முறையாக சந்திக்கிறார் ராதா. ராதாவும் எம்.ஜி.ஆரும் இரு துருவங்களாக இருந்த நேரம் என்பதால் எங்கே சண்டை வெடித்து விடுமோ என்ற அச்சம் இரு தரப்பிலும் இருந்தது. தயக்கம் தரக்கூடிய ஒரு பனிப்போர் சந்திப்பு அது.

‘’எதுக்கு அவர் கூட மோதிக்கிட்டு தனிக்கட்சியெல்லாம்..? உங்க மோதல்ல சந்துல சிந்துபாடி காங்கிரஸ் குறுக்கே வந்துடப்போகுது’’ என்ற ரீதியில் ஆரம்பித்து பேசிக்கொண்டே போனார் எம்.ஆர்.ராதா. ‘இல்ல்லசில காரணங்களுக்காகதான் நான் அரசியல்ல இறங்கியிருக்கேன். என்ன ஆனாலும் சரி, முன் வச்ச காலை பின்வைக்கிறதா இல்லைன்னு! உறுதிபடச் சொன்னார் புரட்சித்தலைவர்.

அதைப்பற்றி மேலும் பேச விரும்பாமல், பெரியார் பற்றி பேச்சைத் திருப்பினார். அந்தச் சம்பவம் எங்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கு. 1973 டிசம்பர் 23-ம் தேதி புரட்சித்தலைவரும் நாங்களும் வேலூர் சென்று பெரியாரைப் பார்த்தோம். பேசவே சிரமமான நிலையில் படுக்கையில் இருந்த பெரியார், ‘திடும்என ராஜாஜி இறந்த்தெப்போ என்று கேட்டார். எம்.ஜி.ஆர். அதெல்லாம் இப்ப எதற்கு..? என்று இழுக்க… ‘சொல்லு அவர் இறந்தது என்ன தேதி?’ என்று குரலை உயர்த்திக் கேட்டார் பெரியார். டிசம்பர் 25-ம் தேதி ஐயா என்று சொன்னதும், அப்போ நாளை மறுநாள் முதலாண்டு நினைவு தினம்!’ அர்த்தத்தோடு தலையாட்டிக்கிட்டார் பெரியார். மறுநாள் அதிகாலை பெரியார் உயிர் பிரிந்தது.

இந்தச் சம்பவம் பத்திச் சொல்லி ராதாகிட்ட ரெண்டு மூணு நேரம் பேசிக்கிட்டிருந்தார் தலைவர். இதிலே உருக்கமான விஷயம் என்னென்னா பெரியார் இறந்த அதேநாள், அதே அதிகாலை நேரத்துலதான் எம்.ஜி.ஆரும் நம்மை விட்டுப் பிரிந்தார்.

ஹண்டேவும், கே..கிருஷ்ணசாமியும் சொன்னது….


6 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது… [Reply]

எதிரிகளாகப் பிரிந்த இரண்டு நண்பர்கள் மீண்டும் சந்த்தித்தால் என்ன நடக்கும்? எதிர்பாராத திருப்பம். மீண்டும் படித்தபோது பழைய நினைவுகள். பகிர்வுக்கு நன்றி!

இதுமாதிரி பதிவுகளுக்கு லேபிள் தரும்போது அரசியல் என்று மட்டும் கொடுங்கள். அப்போதுதான் தமிழ்மணத்தில் வரும். தமிழ்மணத்தில் வந்த பிறகு, அப்புறம் எடிட் செய்து சினிமா என்ற லேபிளைச் சேர்க்கவும்.

vijayan சொன்னது… [Reply]

இரண்டு கூத்தாடிகள் ஏதோ பணவிவகாரத்தில் சண்டைபோட்டு அதில் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு ,அதை போஸ்டர் போட்டு தேர்தலில் தேசத்திற்காக அடிபட்ட மாதிரி ஸீன் காண்பித்து தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே குட்டிசுவர் ஆக்கினார்கள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தமிழ் இளங்கோ அவர்களே! தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

விஜயன்! நீங்கள் எப்படித் தூற்றினாலும் தமிழ்நாட்டின் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தவிர்க்க முடியாத சக்திகளாகத்தான் அவர்கள் இருந்தார்கள். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

புரட்சித்தலைவரின் மனஉறுதியைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

எதிரியிடம் இப்படி சாதாரணமான மனநிலையில் நம்மைப்போன்ற சாதாரணமானவர்களால் உரையாட முடியுமா என்ன? அதுவும் கொலை செய்ய முயன்றவரை?! வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!