வெள்ளி, 16 மே, 2014

தேர்தல் முடிவுகள்



 
இன்று நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். பெரும்பான்மை கிடைக்கிறதோ இல்லையோ மோடிதான் பிரதமர் என்பது முடிவாகிவிட்ட விஷயம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும். மக்கள் லேடியா இல்லை ஸ்டாலினின் டாடி இவர்களில் யாருக்கு அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.

தமிழ்நாட்டு அரசியலை குட்டிச்சுவராக்கி செயல்படாத, திறமையில்லாத அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஹிட்லர் ஆட்சி செய்து வரும் அம்மையார் மத்தியில் பதவியேற்கப் போகும் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தால் பங்கு பாகப்பிரிவினையில் நாடு எந்த அளவுக்கு கீழே போகும் என்பதை யூகிக்க முடிகிறது. தி.மு.க. அடித்த கொள்ளைகளைப் போல் இவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை.

அந்த நிலைமையில் தேர்தல் முடிவுகள் இருந்துவிடக் கூடாது என்பதுதான் எனது விருப்பம். ஆக முக்கியமாக மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் வகையிலான அதிகாரத்தை இந்த தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. விற்கு வழங்கிவிடக்கூடாது. ஆனாலும் பதவி ஆசை, அதிகார ஆசை போன்றவை எந்தெந்த கட்சிகளை எப்படியெல்லாம் தடம் மாறவைக்கும் என்பதை இன்று மாலைக்குள் நாம் வேடிக்கை கலந்த வேதனையோடு பார்க்கப்போகிறோம்.

காங்கிரஸைப்போன்று பலவீனமான அரசாக இல்லாமல் முக்கிய துறைகளை பா.ஜ.க. தன்னிடம் வைத்துக்கொண்டு பெயருக்கு சில அமைச்சகப் பொறுப்புக்களை கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் மன்மோகன்சிங் அரசு போலத்தான் இந்த அரசும் இருக்கும்.

இன்றைய முடிவுகளை கல்லோரையும் போல நானும் ஆவலாய் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். பா.ஜ.கூட்டணிக்கட்சிகள் சுமார் 280 இடங்களில் வெல்லக்கூடும் என்பது எனது கணிப்பு. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.விற்கு 18 இடங்களும், தி.மு.க.விற்கு 16 இடங்களும் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 2 இடங்களிலும், பா.ஜ. கூட்டணி 4 இடங்களையும் வெல்லக்கூடும் என்பதும் எனது கணிப்பு.

அப்படி காங்கிரசுக்கும் பா.ஜ.க.கூட்டணிக்கும் இந்த இடங்களில் குறைவு ஏற்பட்டால் அதை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான் பகிர்ந்து கொள்ளும். பார்ப்போம். வலுவான மத்திய அரசு அமைய பிரார்திப்போம். வேறெண்ண செய்ய முடியும்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

வேடிக்கை இருக்கட்டும்... வேதனை இனிமேல் தொடர வேண்டாம்... ம்... பார்ப்போம்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

Unknown சொன்னது… [Reply]

போன முறை அடிக்கடி ஜஸ்வந்த் சிங்க் அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வந்து சென்ற நிலை ,இனி தொடராது என்ற முறையில் தேர்தல் முடிவு அமையட்டும் !
த ம 4

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமைந்திருக்கிறது. அதாவது மோடி வென்றுவிட்டார். தமிழ்நாட்டில் லேடி வென்றுவிட்டார். ஆனால் எனது கணிப்பின்படி தி.மு.க.வுக்கு ஒன்று கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது. பி.ஜே.பி.கூட்டணியில் பா.ம.க. ஒன்று ஜெயிக்கும் என்பதும் நடந்தேறியிருக்கிறது. வருகைக்கு நன்றி பகவான்ஜி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!