வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை!



நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை.

அவசரப் படாமல்

அனுபவிக்கத்தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்

சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை

அவசியத்துக்குக் கூடக்

கோபப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்

தெரியும் என்ற

வாய்ச் சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை.

-
கல்யான்ஜியின் முன்பின்கவிதைத் தொகுப்பிலிருந்து.

படித்ததில் பிடித்தவை !

உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க
புத்திசாலித்தனம் தேவையில்லை.
அமைதியாக இருக்கத்தான்
புத்திசாலித்தனம் தேவை

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

கல்யாண்ஜி அவர்கள் சரியாகத்தான் சொல்லியுள்ளார்...

அறிந்து கொள்வது...
தெரிந்து கொள்வது...
புரிந்து கொள்வது...
ஒவ்வொன்றும் வேறு... வேறு...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே.

ezhil சொன்னது… [Reply]

நல்ல கவிதை அறிமுகத்திற்கு நன்றி

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி எழில் அவர்களே.

Unknown சொன்னது… [Reply]

ஜி என்று பெயர் முடிந்தால் ,அவர்கள் சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் ..ஹிஹிஹி !
த ம 4

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அப்படியா ஜி! பகவான்ஜி! நன்றி ஜி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!