Saturday, July 6, 2013

தன் வினை தன்னைச் சுடும்!

 
இந்தப் பதிவை எழுதலாமா கூடாதா என்ற நீண்ட யோசனைக்குப் பிறகே பதிவிடுகிறேன். ஏனென்றால் தற்போதைய தமிழ்நாட்டுச் சூழலும் சரி, பதிவுலகச் சூழலும் சரி மிக மோசமான ஒரு காலகட்டத்துக்கு வந்திருக்கிறது.

தர்ம நியாயங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் ஒரு தரப்பாய் வாதாட முடியும். இந்த அசிங்கத்துக்குள் நடுநிலையாளர்கள் யாரும் வரவில்லை என்பதே ஆறுதலான விஷயம். ஜாதி... ஜாதிக்காரர்களின் சண்டையாகத்தான் இது எல்லாராலும் பார்க்கப் படுகிறது. 

இதிலுள்ள அடிப்படை பிரச்னைகளைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. இந்த ஜாதித் துவேஷம் பிடித்தவர்களால் எத்தனை தூரம் பெரிதாக்க முடியுமோ அத்தனை தூரம் பெரிதாக்கி கலவரம், 144 தடை உத்தரவு, கொலை, தற்கொலை என்று விரிவடைந்து கொண்டே போகிறது. காதலுக்கும் ஜாதிக்கும் குரல் கொடுக்க தங்களை விட்டால் ஆளே இல்லை என்கிற ரீதியில் மிகவும் கேவலமான வார்த்தைகளால் இணையத்தை நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள். சகட்டுமேனிக்கு எல்லா ஜாதிகளையுமே வசைமாரி பொழிகிறார்கள்.

ஜாதிப் பிரச்னையைப் பற்றி வெளிவரும் அனைத்து பதிவுகளும் ஒன்றை ஒன்று குதறி எடுப்பதில்தான் முனைப்பைக் காட்டுகின்றன. யாராவது நடு நிலைமையில் எழுதினால் இரண்டு தரப்புமே வந்து தாக்குகிறார்கள்.

சரி, இந்தப் பிரச்னை இத்தனை தூரம் வளர்ந்ததற்கான காரணம் என்ன?

அதற்கு முன் சில கேள்விகள்?

உங்களுக்கு வயசுக்கு வந்த பெண்ணோ பையனோ இருந்தால்... அதுவும் படிக்கிற வயதில் இருந்தால் கொஞ்சம் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். வழியில் எங்கேயோ யாரையோ பார்த்துப் பேசி பழிகி காதல் எனும் கருமாந்திரத்தில் விழுந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்.

ஆஹா மகன்(ள்) காதலித்துவிட்டாள். படிப்பாவது மண்ணாங்கட்டியாவது, உற்றாராவது உறவினராவது, பதினெட்டோ, பத்தொன்பதோ , வசதி இருக்கோ இல்லலையோ உடனே மாலை மருவாதி செஞ்சி அவங்கள சேர்த்து வைப்பீங்களா?

ஐயோ... கனவெல்லாம் கலைஞ்சி போச்சே... படிப்பு போய்ச்சே... பையனைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே. வேலை வெட்டி இல்லாத பையனாமே, இங்க நாமளே கஷடப் படறோம், இன்னும் மோசமான சூழ்நிலையிலா வாக்கப்பட போகணும். அவ குழந்தையாச்சே... இன்னும் இரண்டு வருஷம் போனா படிப்பும் முடிஞ்சா நல்ல இடமா பார்த்து, பத்திரிகை அடிச்சி விமர்சியா கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேனே.....என்று புலம்புவீர்களா?

ஒவ்வொரு பெற்றவர்களும் எப்படி எல்லாம் குழந்தையை வளர்த்தெடுக்கிறார்கள். அது பையனாகட்டும் பெண்ணாகட்டும். பையனாக இருந்தால் வளர்ந்து வேலைக்குப் போய் தகப்பனின் பாரத்தை குறைப்பன் என்றுதானே ஒவ்வொரு தகப்பனும் நினைப்பான். காதல் கத்திரிக்கான்னு படிக்கிற வயசுல ஒரு பெண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து நின்னா அந்தக் குடும்பத்தோட நிலைமை? எங்கே எப்படி காப்பாத்துவான் அவன்.

இதை எப்படி பிள்ளை வீட்டில் அனுமதிக்கிறார்கள். பெண்ணைப் பெற்றவன் என்ன கவலைப்படக் கூடாதா? என்ன நியாயம் இது. பெண்ணை உயிரோடு பறிகொடுத்துவிட்டு எப்படி அவன் நடமாடுவான்? தன் பெண்ணுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கனவுக் கோட்டை கட்டியிருப்பான்.

துக்கம் தாளாமல் அவன் தூக்கில் தொங்கியபோது எங்கே போனார்கள் இன்று குரைப்பவர்கள் எல்லாம். அவன் குடும்பம் நிற்கதியாய் நின்றபோது அவன் பெற்ற பெண்ணோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தார்களே இவர்கள். திருமண வயதைக் கூட நிரம்பாத ஒரு பையனுக்கு வக்காலத்து வாங்கி ஜாதி துவேஷத்தைத் தூண்டி பிரச்னையை பெரிதாக்கி வேடிக்கை பார்த்தார்கள்.

இந்த வயதில் என்ன தெரியும் அவர்களுக்கு? புள்ள பெத்துக்கத் தெரியும் அவ்வளவுதான். அப்புறம்....

சீராட்டிப் பாராட்டி வளர்த்த பிள்ளைகள் ஓடிப்போவது என்பது எத்தனை மானக்கேடு! எத்தனை துக்கம். இது பெண்ணைப் பெற்ற அத்தனை பேருக்கும் தெரியும். தெரியவில்லை எனில் அவன் எல்லவற்றிற்கும் துணிந்தவனாக இருப்பான்.

சினிமா என்கிற வஸ்து இப்படி எல்லாரையும் ஆட்டுவிக்கிறது. நல்ல குடும்பங்களில், படித்த குடும்பங்களில் இந்த ஓடிப்போதலே இல்லை என்பது உண்மை ஏன்? படிப்பு முக்கியம், வேலை முக்கியம், இலட்சியம் முக்கியம். இதெல்லாம் முக்கியமாக இருப்பவர்களுக்கு காதலும் கத்திரிக்காயும் தோணாது. அப்படி தோணுகிற போது நல்ல வேலையில் இருப்பார்கள். நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பார்கள். பெற்றோர்களிடத்தில் சொல்லி அவர்களையே மணம் முடிப்பார்கள்.

பொறுக்கிகள், ஊதாரிகள், எவன் வீட்டுப் பெண் எங்கே போகிறாள், எப்படி கவிழ்க்கலாம் என்ற பிழைப்போடு வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. காதல் வலை வீசி மயக்கி... அப்புறம் என்ன ... எல்லாம் முடிந்ததும்.. சண்டை சச்சரவு என வழமையான பிரச்னைகள். நண்பர்கள்னு ஒரு போலி உதவாக்கரை கூட்டம் இவங்களுக்கு உதவ எப்பவும் எல்லா இடத்துலயும் இருக்கும். சோத்துக்கு டிங்கி அடிக்கும் போதுதான் பிரச்னையே பெரிசாவும்.

இங்கே ஜாதி எப்படி யாரால் திணிக்கிப்படுகிறது பாருங்கள். இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கும்போல. உண்மையில் பெண் ஓடிப்போவதுதான் அவமானம். அது யாரோடு ஓடிப்போனாள் என்பது பிரச்னையில்லை. சொந்த ஜாதியாக இருந்தாலும் சரி, சொந்தக் காரணாக இருந்தாலும் சரி. அவமானம் அவமானம்தான். துக்கம் துக்கம்தான். அதை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது.

இவர்களின் கூற்றைப் பார்த்தால் ஜாதிக்காரனாக இருந்தால் அவர்களே கூட்டிக்கொடுத்து அனுப்பிவிடுவார்களா என்ன? அது எந்தச்சாதியாக இருந்தாலும்  தம்மை விட வசதியானவர்களோடோ அல்லது தமக்கு சமமாக இருப்பவர்களோடோதான் சம்மந்தம் வைத்துக் கொள்கிறார்கள். இது நடைமுறை எதார்த்தமும் கூட. பொருளாதாரம்தான் வாழ்க்கையை தீர்மாணிக்கிறது. பணம் இல்லையேல் காதல் சீக்கிரத்தில் கசந்துவிடும்.

எத்தனையோ உதாரணங்களை விவரிக்க முடியும். அது தேவையில்லாதது என நினைக்கிறேன். நீதி, நேர்மை, காரணகாரியமெல்லாம் அப்புறம்தான். ஏன்னா ஜாதி உணர்வு. ஜாதிக்காரனுக்கு வக்காலத்து என்ற அடிப்படை விஷயம்தான் இங்கே முதன்மையா இருக்கு.

குறிப்பிட்ட ஜாதியைப் பிடிக்காதவங்க அல்லது அந்த ஜாதியால பாதிக்கப்பட்டவங்கன்னு இரண்டு கும்பல்களின் அலப்பறை தாங்காமல் அந்த 19 வயது பாலகனும் தற்கொலை செய்து கொண்டான். அவனுக்கு எப்படியும் அந்தப் பெண் வேண்டும். ஊரும், ஊடகங்களும் அவன் பக்கம் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பெண்ணோ மிஞ்சியிருக்கும் தனது தாயையும் இழக்க விரும்பாமல் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள்.

எதையுமே தீர்மாணிக்க முடியாமல் இருக்கும் அந்தச் சிறுவனோ இனி அவள் இல்லை என்கிற துக்கத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். திருமண வயது வரை காத்திருந்திருக்கலாம்.  எல்லாம் சுமுகமாக அமைதியாக இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் (அது உண்மையான காதலாக இருந்திருந்தால்) அவர்கள் இணைந்திருக்கலாம்.

ஊடகங்களும், உறவினர்களும் செய்த அட்டகாசத்தால் இன்று அவனை இழந்து நிற்கிறார்கள். அன்று பெண்ணின் தகப்பன் இறந்தபோது அப்படித்தானே இருந்திருக்கும். வினை விதைத்தவர்கள் அதன் பலனையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

எதிர்வினைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால் அது அவர்களின் இயல்பு என்றே ஒதுங்கிப் போவேன். எல்லோரும் அவர்கள் கருத்தை உரக்கச் சொல்லும்போது என் கருத்தையும் பதிவு செய்வது என் கடமையும் கூட. இன்னும் எழுதுவேன்....

தொடர்புடைய இடுகைகள்;  தேவியர் இல்லம் திருப்பூர் தளத்தின் பதிவு ஒன்று
நிசப்தம் என்ற தளத்தின் பதிவு ஒன்று...

 

25 comments:

பழனி. கந்தசாமி said... [Reply]

நண்பரே, உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன். கண்டனங்களுக்கும், வசைகளுக்கும் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தக் கருத்துகளுடன் நானே ஒரு பதிவு போடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சமீபத்தில்தான் ஈழத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டு வாங்கிக்கட்டிக் கொண்டேன். உடனடியாக இன்னொரு வம்பு வேண்டாமென்றுதான் எழுதவில்லை.

நீங்கள் கூறியிருக்கும் அனைத்து கருத்துகளும் நியாயமானவையே. ஆனால் அதை அப்படியே ஒத்துக்கொண்டால் ஜாதியை வைத்துப் பிழைக்கும் தலைவர்களுக்கு என்ன லாபம்? அவர்கள் தங்கள் பிழைப்பை எப்படி ஓட்டுவது? ஆகவே இளவரசன் மரணத்தை அரசியலாக்கி குட்டையைக் குழப்பி அதில் மீன் பிடிக்கவே அனைவரும் விரும்புவர்.

தர்மபுரி ஆஸ்பத்திரியில் 5000 பேர் கூடி சாதித்தது என்ன? இந்த முயற்சியில் நூற்றில் ஒரு பங்காவது அவர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்காக எடுத்திருக்கிறார்களா? அவர்கள் தலைவர்கள் இவர்களை மேம்படுத்துவதற்காக என்ன செய்திருக்கிறார்கள்?

செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்களை இப்படியே அடிமட்டத்தில் வைத்திருந்தால்தான் அவர்கள் பிழைப்பு ஓடும்.

இந்த கருத்துக்காக எனக்கும் வசைகள் வரலாம், வரும். பார்ப்போம்.

Anonymous said... [Reply]

Looks like you were closing your eyes and ears all these days and now decided to open sudenly.

No one was waiting for Ilavarasan and Divya to get married and create an issue out of that. It all started when three villages were burnt by the lunatics using this marriage as the reason. Even if they are minors (kid in your word..I see PMK Arul's resemblance here. Are you one among them), no one except for his parents has the rights to handle this issue)

Please dont pretend to be a neutral man/woman while subtly justifying the killings (both of Divya's father and of Ilavarasan's are nothing but murders - either directly or indirectly)

Regarding Mr.Palani Kandasamy's support, I would have surprised if he is in the opposite side. He never wrote anything useful and worth reading (both the headlines - 'Akkala kattina thangatchi Ilavasam' being the latest one - and the contents are not expected of a man of his age)

Suresh

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

சுரேஷ் எழுதியுள்ள கருத்துக்கு உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.பழனி கந்தசாமி அவர்களே!

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி சுரேஷ்! உங்களுக்கும் திரு.ஜோதிஜிக்கும் பதில் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளது.

http://arulgreen.blogspot.com/2013/07/Dharmapuri-conspiracy-theory.html

கவிப்ரியன் said... [Reply]

சுரேஷ்!
நடப்பது எதுவும் சரியில்லை என்பதால் தான் இது வரை அமைதியாய் இருந்தது. அதற்காக் கலவரத்தை ஆதரிப்பதாகஅர்த்தம் கொள்ளக்கூடாது.
நான் அருள் பக்கம் இல்லை. நியாயத்தின் பக்கம்.
நீங்கள் எதிரணி என்றால் நான் மற்றொரு பக்கம். இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது. ஆனால் ஒரு தரப்பினர் பூதாகரமாக்குகிறார்கள்.

அடுத்தடுத்து வரும் செய்திகளையும் பாருங்கள். அப்புறம் முடிவு செய்யுங்கள்.

ezhil said... [Reply]

ஒரே ஒரு கருத்துடன் உடன்படுகிறேன் உண்மையான காதல் எனில் காத்திருந்து,எதிர்காலம் தீர்மானித்து முடிந்தவரை பெற்றோரின் அனுமதி பெற்று திருமண பந்தத்தில் நுழையும் போது அவர்களின் காதல் அவர்களால் மட்டுமாவது காக்கப்படும்....

ஒரு முக நூல் பதிவர் ஆவேசப்பட்டிருந்தார்..அவர்கள் மறைவாக இருந்தபோது உடல் நலக் குறைவிற்குக்கூட உதவாத நீங்கள் பேசுகிறீர்களா என்பதாக.... பொருளாதார ரீதியில் வலுப்பெற்றிருந்தால் தமிழ் நாட்டில் ஏன் ஓடி ஒளிய வேண்டும்..எங்காவது சென்று பிழைத்துகொண்டிருக்கலாமே... ஆனால் இதை ஆயுதமாக கையில் ஏந்தி சாதிக்கட்சிகள் தங்கள் கட்சி வளர்ச்சிக்கு இவர்களை பயன்படுத்திக்கொண்டார்கள்.... அதற்கு ஒரே வழி சாதிக்கட்சிகளை அரசியலிலிருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் ..மக்கள் செய்ய வேண்டும்....

கவிப்ரியன் said... [Reply]

ஜோதிஜி!

உங்களுக்கும் மேலுள்ள பதில் தான்.இன்னும் விபரமாக வேண்டும்என்றால்,

http://arulgreen.blogspot.com/2013/07/Dharmapuri-conspiracy-theory.html

இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.

கவிப்ரியன் said... [Reply]

எழில்!
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! உங்கள் கருத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.

அன்பு துரை said... [Reply]

கூப்பாடுபோட்டும் யாரும் கவனிக்க தயாரில்லாத சேதியை கையிலெடுத்து அலசியிருக்கிறீர்கள்..
உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்..
பெண் பிள்ளையை பெற்ற குடும்பங்களின் மனக்குமுறல் இங்கு மட்டுமே ஒலித்திருக்கிறது..

k.rahman said... [Reply]

ok. so why did pmk got involved in these?

if everything else is same but the boy was a vanniar instead of a dalit would pmk get involved in this? pmk got involved only because they saw a good opportunity for making politics and to cover the lost base.

pmk has blood in its hands and the sins that pmk committed will come back to them again.

Anonymous said... [Reply]

மிக மிக சரியான கருத்து. பதினேழு வயதில் 'ப்ரோபோஸ்' செய்தேன் என்கிறான் இளவரசன். கடவுளே. பிஞ்சிலே பழுத்தது என்கிறோம் நாம். ஆனால் ஊடகங்களோ அதை காதல் என்று கொண்டாடுகின்றன. அதை தவறு என்றால் நான் ஜாதி வெறியன் ஆக்கப்படுவேன். நிங்கள் சொல்வது போல் தமிழ்நாட்டுச் சூழலும் சரி, பதிவுலகச் சூழலும் சரி மிக மோசமான ஒரு காலகட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்த ஜாதி வெறி கும்பல்களால் ஏற்ப்படும் கொடுமையை விட நடுநிலையாளர்களின் மௌனமே பெரும் தீ,ஐயை தரும் இந்த சமூகத்துக்கு. -பகுத்தறிவு.

கவிப்ரியன் said... [Reply]

ஆம், அன்பு துரை அவர்களே! கருத்து சொல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள். சகட்டு மேனிக்கு சகதி வந்து விழுமே என்கிற பயம்தான்.

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

கவிப்ரியன் said... [Reply]

வருக! ரஹ்மான்,

காரணம் அது இல்லை. அவர்கள் தரப்புக்கு சில அமைப்புகள் உதவுவதைப் போல இவர்களுக்கும் உதவ சிலர் வந்திருக்கலாம். ஆனால் திட்டமிட்டு ஜாதி வெறியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் உண்மை.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கவிப்ரியன் said... [Reply]

அனானி!

பதினேழு வயதில் ஆரம்பித்து 19-ல் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டு அறிவு ஜீவிகள் இப்போது பிஞ்சில் பழுப்பதைத்தானே ஆதரிக்கிறார்கள். அதுவும் புனிதக் காதலாம். எங்கே போய் முட்டிக்கொண்டு அழுவது? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

Anonymous said... [Reply]

நல்லது!...தங்கள் ஜாதிய மக்கள் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெற,
,அரசின் நலதிட்டங்களை பெற,மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெற,அரசு அலுவலகங்களுக்கு சென்று அழைகழிக்கபடும் விஷயத்தில் உதவ இந்த ஜாதீய கட்சிகளும் அவர்களின் தொண்டர்களும் உதவுவது இல்லை...தங்கள் ஜாதியில் படித்த இளைஞர்களை கொண்டு பள்ளி செல்லா குழந்தை தொழிழாளர்களுக்கு மாலை நேர கல்வி கற்பிப்பது இல்லை..வேலை வாய்ப்பு தகவல்களை திரட்டி தங்கள் சமூக இளைஞர்களுக்கு வழங்கும் பணிகளை செய்வதில்லை...தங்கள் ஜாதியினை சேர்ந்த படித்த இளைஞர்/இளைஞிகளுக்கு பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் திறனை வளர்க்கும் சுய திறன் மேம்பாட்டு வகுப்புகளை,கல்வியறிஞர்களை கொண்டு நடத்துவதில்லை...டெங்குகாய்ச்சல் போன்ற நோய்கள் பரவும்போது அதிலிருந்து தங்களை காத்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என விழிப்புனர்வுகளை தங்கள் ஜாதி மக்களுக்கு பிரச்சாரம் செய்வது இல்லை...விவசாய குடும்பங்களுக்கு நவீன விவசாயம் சார்ந்த தகவல்களை அளிக்கும் பணிகளை மேற்கொள்வது இல்லை....விளைபொருட்களை நல்ல விலைக்கு சந்தைபடுத்தும் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகளை நடத்துவது இல்லை இந்த ஜாதிகட்சிகள்....

தான் சார்ந்த ஜாதி மேம்பாட்டுக்காக ஜாதிய சங்கங்கள் துவக்குவதும்,செயல்படுவதும் வரவேற்க தக்கதே....ஆனால் எந்த ஜாதி சங்கங்களும்,ஜாதி கட்சிகளும் சுய மக்கள் மேம்பாட்டுக்கான பணிகளை செய்வதே இல்லை...

மாறாக தன் ஜாத்க்காரர்களை தங்களின் ஓட்டு வங்கியாக மாற்றகூடிய வகையில்,மக்கள் எந்த விஷயங்களில் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்களோ அந்த விஷயங்களை கையில் எடுத்துகொண்டு,விஷ பிரச்சாரங்களை விதைத்து அவர்களின் உணர்வுகளை தங்கள் கட்சியின் சொத்தாக மாற்றிகொள்வதிலேயே குறியாக இருக்கின்றன.இதுவே அப்பட்டமான உண்மை...அது பிற்படுத்தபட்ட சமுதாயத்தை சேர்ந்த கட்சியாக இருந்தாலும் சரி,ஒடுக்கபட்ட மக்களுக்கானது என்று பாவித்து கொள்ளும் கட்சியாக இருந்தாலும் சரி...இரண்டுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக தெரியவில்லை...

உண்மையில் மக்கள்தான் உணரவேண்டும்..தங்களுக்கு உதவுவதாக,உரிமைகளை வெண்றெடுப்பதாக,ஜாதி கவுரவத்தை காப்பதாக எப்பொழுதெல்லாம் தாங்கள் சார்ந்த ஜாதி கட்சிகள் வருகின்றன என்று...

உண்மையில் பாதிக்கபட்ட இரு குடும்பங்களும்,இழப்புகளால் எதிர்கொள்ளும் இருளை விலக்க இந்த கட்சிகள் உதவ வேண்டும்.மாறாக எரிகின்ற வீட்டில் புடுங்குவதே மிச்சம் என்கிற ரீதியில் இதனை அரசியலாக்கும் செயலில் இறாங்கினால்,உண்மையில் தங்கள் ஜாதியினருக்கு சொந்த ஜாதியை சேர்ந்த கட்சிகளே உண்மையான விரோதிகள்....

கவிப்ரியன் said... [Reply]

பி.எம்.சரண் அவர்களே!
இந்த ஏக்கங்கள் எனக்கும் உண்டு. ஓட்டு அரசியலுக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் இவர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட சமுதாயத் தொண்டுக்கு யாருமே தயாராக இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக இவர்களை தமிழகம் புறக்கணிக்க வேண்டும். மாறாக இவர்கள் பெரிய கட்சிகளின் தயவில் பிச்சையாக ஒன்றிரண்டு இடங்களைக் கேட்டுப் பெற்று அதில்தான் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள்.

தங்களின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி!

சீனு said... [Reply]

//இந்தக் கருத்துகளுடன் நானே ஒரு பதிவு போடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சமீபத்தில்தான் ஈழத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டு வாங்கிக்கட்டிக் கொண்டேன். உடனடியாக இன்னொரு வம்பு வேண்டாமென்றுதான் எழுதவில்லை.//

இதில் வம்பு என்ன இருக்கு? 'அந்த' கூட்டம் இப்பவா இப்படி செய்யுது? எதுனா அவனுங்களுக்கு பிடிக்கலைன்னா வரிஞ்சுகிட்டு வந்து திட்டுவானுங்க. சொல்ல வர்றவங்க வாயே திறக்காம ஓடிடனும். இது தான் அவனுங்க கேடுகெட்ட எண்ணம்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு அவர்களே!

kutty said... [Reply]

Good...keep it up...Ilango

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி குட்டி!

Anonymous said... [Reply]

அருமையான பதிவு.
ஒரு விடலை பையனை , வேலை வெட்டி இல்லாம அப்பாவிடம் பணம் வாங்கி செலவு செய்யும் பக்குவமில்லாத பையனை தியாகி ஆக்கிவிட்டார்கள்.

செய்தி தாளில் தினம் படிக்கும் ஒரு செய்தி , ஏதோ சுதந்திர போராட்ட லெவெலுக்கு ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது நிச்சயம் எதிர்கால சந்ததிக்கு நல்லதல்ல.

இதே அந்த பையன் நல்ல வேளையில் இருந்து, சுயமாக சம்பாதித்து ஒரு நல்ல நிலையில் இருந்தால் பிரச்சனை இந்த அளவுக்கு வந்து இருக்காது, ஏன்னா , மெஜாரிட்டி யான பசங்க , இது மாதிரி சும்மா சுத்திகிட்டு இருக்குற பசங்க தான். நாளைக்கு இதுமாதிரி கேசுங்க தான் இந்த மாதிரி வந்து நிக்கும். இத ஏதோ புரட்ச்சி மாதிரி பேசுவது வெறுப்பேத்துது.

நல்ல சம்பாதிச்சி குடும்பத்த காப்பதுரவனுக்கு ஆயிரம் தொல்லை, ஒரு உதவி கிடையாது, பிஞ்சிலேயே வெம்புனதுக்கு இவ்வளோ ஆர்ப்பாட்டம்.

கொடுமை.

கவிப்ரியன் said... [Reply]

அனானி!
மிக அருமையான கருத்து. என் மனதிலுள்ள ஆதங்கத்தையே நீங்களும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இந்த மாதிரி விஷயங்களுக்ககு எப்படி விளம்பரம் கிடைக்குது பார்த்தீங்களா? ஏதோ தமிழ்நாடே கொந்தளிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி.... நினைக்கவே வேதனையாக இருக்கு. இவங்க வீட்டிலிருக்கும் பெண் குழந்தைகளையெல்லாம் இப்படித்தான் அனுப்புவாங்களா? இல்லை பாதுகாப்பு கொடுப்பாங்களா? ஒண்ணும் புரியலை!?

ELANGO T said... [Reply]

ஒரு ஆணும் பெண்ணும் காதல் செய்தனர், கல்யாணம் செய்து கொண்டனர். இருவருமே தமிழர்கள். ஆனால் இருவேறு ஜாதியினர். இந்தக் காதல் இவ்வளவு நெருக்கமாக வந்ததற்குக் காரணமே இருவரது அப்பாக்களும் நண்பர்களாக இருந்ததுதான். இது அவர்கள் இருவரது குடும்பத்தோடு முடிந்துபோக வேண்டிய விஷயம். நாட்டில் இது போன்ற காதல் திருமணங்கள் நடக்காமல் இல்லை. நாடகக் காதல் என்றால் ஒரு பெண் எப்போதோ உதறி இருப்பாள். எத்தனையோ விவாகரத்து வழக்குகள் சொந்த ஜாதிக்குள்ளேயே நடைபெறுகின்றன. அவற்றை தீர்க்க முன்வராத டாக்டர் ராமதாஸ், தனது அரசியல் வளர்ச்சிக்காக ஒரு கட்டை பஞ்சாயத்து தலைவரைப்போல, இதில் மூக்கை நுழைத்து. இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டார். இதனால் திவ்யா – இளவரசன் காதல் பெரிதாக பேசப்பட்டது. அவர் தனது ஜாதிக்காக போராடட்டும். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு காதல் திருமணத்தை ( ஒரு பஞ்சாயத்திலேயே முடிந்த விவகாரம் ) முன்னிட்டு, தலித்துகள் அனைவருமே விரோதி என்று அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கேவலமாக பேசுவது எந்தவிதத்தில் நியாயம்?
http://kollidakkaraiyil.blogspot.com/2013/07/blog-post_9.html

கவிப்ரியன் said... [Reply]

இளங்கோ!
//இந்தக் காதல் இவ்வளவு நெருக்கமாக வந்ததற்கு காரணமே இருவரது அப்பாக்களும் நண்பர்களாக இருந்ததுதான் \\
என்ன நண்பர்களா? அப்புறம் ஏன் தூக்கில் தொங்கினார். நண்பர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார் என்றா? மற்ற உங்கள் கருத்துக்களும் ஏற்கும்படியாக இல்லை. வருகைக்கு நன்றி நண்பரே!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!