மூன்று மாதங்களுக்குப் பின் முதல்வர் கடந்த சனிக்கிழமை தமிழகம் திரும்பினார். அவரை வரவேற்க வழக்கம்போல ஜனசமுத்திரம்! மீனம்பாக்கம் ஏரியாவே கோலாகலமாயிருந்தது. அப்போது நேரில் கண்ட விஷயங்கள்……
- வழக்கமான நேரத்தைவிட ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக வந்தது விமானம். (என்னவோ எப்பவுமே கரக்ட்டா வர மாதிரி…)
- ஏர் இந்தியா அதிகாரி சத்தியநாராயணராவிடம் தாமதத்துக்கான காரணம் கேட்டபோது, 'இன்று (சனிக்கிழமை) 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமாயிற்றே… அதனால் பைலட்டிடம் சொல்லித் தாமதப்படுத்தி 10.31 -க்குச் சென்னையை வந்தடையச் செய்தேன்…. நாலரைக் கோடி மக்கள் நாயகனின் நலனுக்கு என்னால் முடிந்த பணி…' என்று சொன்னார்.
(அப்பவே அதிகாரிகள்ல கூட ஜால்ராக்கள்
இருந்திருக்காங்க போல)
- முதல்வர் தாமதமாக வருகிறார் என்ற செய்தியை ஃபோன் மூலம் அறிந்துகொண்ட பல்வேறு அமைச்சர்கள் கூடத் தாமதமாகவே வந்தார்கள்…. (இதுவே அம்மாவாக இருந்திருந்தால் முடியுமா….? ஹூம் குளிர் விட்டுப்போச்சி)
- ஆனால் பி.எச்.பாண்டியன், ம.பொ.சி., ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் ஒன்பது மணியிலிருந்தே காத்திருந்தனர். (இவங்க மட்டும்தான் உண்மையான விசுவாசிங்களோ…!)
- நடிகர்கள் பாக்யராஜூம், பாண்டியராஜனும் சேர்ந்து வந்திருந்தார்கள். பாண்டியராஜன், 'தனியா வந்தா 'பாஸ்' அது இதுன்னு கேட்டு உள்ளே விடமாட்டாங்களே… அதான் டைரக்டர் கூட(பாக்யராஜ்) வந்துட்டேன்…' என்றார். (பாவம் 'கலையுலக வாரிசு' என்ற பட்டத்தோட சரி. எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளுக்கு கொடுத்து வைக்கல…)
- இருவருக்கும்
அமைச்சர்கள் இரு சேர்கள் ஒதுக்கப்பட்டன. ம.பொ.சி., பாக்யராஜிடம், ஏன் தம்பி அடுத்த படம் என்னது…? என்றார். 'காவடிச்சிந்து' ஐயா…' என்று பாக்யராஜ்
சொன்னதும், அது இன்னும் முடியலையா? அப்ப அதுல நமக்கு வேஷம் இருந்தா குடேன் என்று
தமாஷாகக் கேட்டார். (ஓ… மந்திரிங்க கூட நெருக்கமா இருந்த மப்புலதான் அப்புறமா தனியா கட்சிய ஆரம்பிச்சாரோ….?)
- உடனே அருகில் இருந்த
பி.எச்.பாண்டியன், ம.பொ.சி-யிடம், 'நீங்க கதாநாயகனா
நடிக்கத்தயார்னா நானே ஒரு படம் எடுக்கறேன்… நடிக்கறீங்களா…?' என்று கேட்க… படு ஜாலியாக
இருந்தார்கள்!.(இவங்க தலைவரே சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த்துட்டாரு. அரசியல்ல இருக்கிற இவங்கள பாருங்க சினிமாவுல நடிக்கப்போறாங்களாம், ஹூம்… ஆசை யாரை விட்டது.)
- நிறைய எம்.எல்.ஏ-க்கள் நிருபர்களைத் தேடித் தங்கள் பெயரைப் பதிவு செய்து, 'நாளைக்கு பேப்பர்ல வந்துடுமில்ல…' என்று கேட்டுவிட்டுப்போனார்கள். (ஒருவேளை இவங்கெல்லாம் அம்மா விசுவாசிகளா இருந்திருப்பாங்களோ?!)
- வரவேற்பு மேடைக்கு முதல்வர் வந்ததும் பாண்டியராஜன் எமோஷனலாகி, 'புரட்சித்தலைவர்...' என்று கத்த, சில அமைச்சர்கள் உட்பட பலரும் 'வாழ்க!' கோஷம் போட்டார்கள். (சினிமாவுல முதல் சீன்ல தலைவரைப் பார்த்ததும் விசிலடிச்சி கத்தின ஞாபகம் வந்திடுச்சி போல பாண்டியராஜனுக்கு!)
- நிரம்பச் சோர்வாய்த்
தோற்றமளித்த முதல்வரை, ஈ.வெ.அ.வள்ளிமுத்து வரவேற்றுப் பெரிய மாலையைப்போட்டதும், வள்ளிமுத்துவின்
கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார் முதல்வர். ( பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சோ என்னவோ…)
- சில அமைச்சர்கள்
முண்டியடித்துக்கொண்டு முன்னேற, பின்னாலிருந்த பி.எச்.பாண்டியன், 'ஏம்ப்பா… ப்ரோட்டாகால் முறைப்படி சபாநாயகர்தானே முன்னாடி
மாலை போடணும்…' என்று குரல் கொடுத்தார். (தலைவர் படம் ரிலீஸ் அப்போ முண்டியடிச்சி
டிக்கட் வாங்குன அனுபவம் இங்கே கைகொடுக்குதுன்னு நினைக்கிறேன்)
- ராஜாராம், 'அடப்பாவமே…! நீ இங்கே தொண்டனப்பா…' என்று சொல்லியபடி அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். (இல்லாட்டி அவர் தன் வானளாவிய அதிகாரத்தைக் காட்டியிருப்பாரோ என்னவோ…)
- பாக்யராஜ் மாலை போடும்போது அவரின் இளம் தொப்பையை முதல்வர் சுட்டிக்காட்டி, 'ஏன் இப்படி? என்று உரிமையுடன் கேட்க, பாக்யராஜ் 'ரொம்ப நாளா ஒரு டிஸ்கஷன்… உட்கார்ந்து… உட்கார்ந்து… அதான்…' என்று நெளிந்தார். (கட்சியில சேரப்போற டிஸ்கஷனா இல்ல தலைவருக்கப்புறம் புதுசா கட்சி ஆரம்பிக்கிற டிஸ்கஷனா?)
- நீண்ட பயணம் காரணமோ என்னவோ, வழக்கமான தெம்போ கையசைப்போ இல்லாத முதல்வர், திடீரென தன் பி.ஏ.பரமசிவத்திடம் ஏதோ கேட்க, தன் பாக்கட்டிலிருந்து ஒரு மாத்திரை (?) எடுத்துக்கோடுத்தார். அதை மென்று கொண்டேயிருந்தார் முதல்வர். (பாவம்! ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு அனுப்பாம இதென்னப்பா இப்படி படுத்தறாங்களேன்னு நினைச்சிருப்பாரோ?)
- ஒரு எம்.எல்.ஏ. மாலையோடு, ஏதோ ஒரு கோரிக்கை மனுவைக் கொடுக்க, அதை வாங்காமலேயே 'நகர்ந்து போ…' என்று கோபமாக சைகைச் செய்தார். ( எதை, எப்போ, எங்கே செய்யனும்னு தெரியாத எம்.எல்.ஏ. போலிருக்கு, ம்… என்னத்தைச் சொல்ல…)
எம்.ஜி.ஆர். உடல் நலமில்லாமல் இருந்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று, நலமுடன் திரும்பி வந்தபோது அவருக்காக வரவேற்பு
நிகழ்ச்சி ஒன்று சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்டது.
அப்போது அதைப்பற்றி ஆனந்தவிகடன் வார இதழில் வெளிவந்த
செய்திதான் இது. (அடைப்புக்குறிக்குள்
வேறு வண்ணத்தில் இருப்பதேல்லாம் நம்ம கைங்கர்யமுங்க….)
எம்.ஜி.ஆரின் நினைவு நாளுக்காக…
கவிப்ரியன்
10 கருத்துகள்:
நல்ல செய்திகள் :)
ஆண்டுகள் பல சென்றாலும் நெஞ்சைவிட்டகலா மாமனிதர் மக்கள் திலகம். மறக்கத்தான் முடியுமா அந்த இதயக் கனியை.
தங்களின் வருகைக்கு நன்றி ஆத்மா!
அனானி! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!
மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி
வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி 'தேசியம் திவ்யமோகன்'!
மறக்க முடியாத மக்கள் திலகத்தின் நினைவுதினத்தில் அருமையான பதிவு!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஞானஞேகரன்!
naanum MGR fan dhaanugoo.
வருகைக்கு நன்றி சுப்ரமணி!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!