சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூலை, 2013

நாத்திகர் எம்.ஜி.ஆர் ஆத்திகர் ஆன போது…


எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேரும் வரை (1952) காந்தியவாதியாக கதர் உடை அணிந்து கழுத்தில் துளசி மாலை அணிந்து நெற்றியில் பட்டையாக சந்தனம், குறுக்காக குங்குமக் கோடிட்டு பக்திப் பழமாக இருப்பாராம்.

முருகக் கடவுள், அம்மனின் மீது அவருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜி.ஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோவில்களுக்கு தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் அன்னை சத்தியபாமா அடிக்கடி தன் உறவினர் வேலு நாயர் துணையுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வருவாராம். சில சமயம் எம்.ஜி.ஆரும் தாயுடன் சென்று வந்திருக்கிறார்.

தி.மு.க.வில் சேர்ந்த பின் எம்.ஜி.ஆர். நாத்திகவாதியாக மாறினார். கோவில்களுக்குச் செல்வதை நிறுத்தினார். கதர் உடை பட்டுத் துணியாக மாறியது. திரைப் படங்களிலும் நாத்திக உணர்வுடன் நடித்தார். நடிப்புக்காகக் கூட நெற்றியில் விபூதி இட்டுக் கொள்ளமாட்டார். ஆனாலும் வீட்டில் ஏசுவின் படத்தை மாட்டி வைத்திருக்கிறார். துன்பம் நேரிடும் சமயங்களில் ‘முருகா’ என்றும் ஏசுவே என்றும் கூறுவதை அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

புராணப் படங்களே அதிகமாக தயாரிக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் ‘புராணப் படங்களில் நடிப்பதில்லை. சமூக கதைப் படங்களில்தான் நடிப்பது என்ற சபதத்தோடு இரண்டு நடிகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும். ஆனாலும் இருவருமே அதை கடைபிடிக்க முடியவில்லை. இதற்கான காரணம் பற்றி 1949-ல் வெளிவந்த சினிமா இதழ் ஒன்றில் இப்படி சொல்லப் பட்டிருந்தது.

‘படத் தொழிலில் ஈடுபட்ட உடனேயே ராமச்சந்திரன் சமூகப் படங்களில்தான் நடிப்பது’ என்று தீர்மானம் செய்து கொண்டார். முதல் மூன்று படங்களையும் அவற்றில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும் கவனித்த பின்னர் ‘ இந்த தீர்மானத்தை முதலில் பறக்க விடவேண்டும். இல்லாவிட்டால் நாமே சினிமா உலகில் இருந்து பறந்து விடவேண்டும்’ என்பதை அறிந்து கொண்டார். சூழ்நிலை கருதி தன் தீர்மானத்தை கைவிட்டு விட்டார்.’

இதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த புராணப் படங்கள் தட்சயக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதா ஜனனம் (இந்திரஜித் வேடத்தில்), ஜோதி மலர் (சிவன் வேடம்), தமிழறியும் பெருமாள், அரிச்சந்திரா, மீரா, ஸ்ரீமுருகன் (சிவன் வேடம்), அபிமன்யூ (அர்ச்சுனன் வேடம்). இதெல்லாம் தி.மு.க.வில் சேருவதற்கு முன்.

சேர்ந்த பின் புராணம் சம்பந்தப்பட்ட படங்களை அறவே தவிர்த்திருக்கிறார். மாயாஜாலம், பக்தி சம்பந்தப்பட்ட படம் என்பதற்காக ராமண்ணா டைரக்ஷனில் காத்தவராயன் படத்தில் நடிக்க மறுத்தார். ராமண்ணாவை தன் விருப்பப்படி சம்மதிக்கச் செய்து விடலாம் என்று முதலில் காத்தவராயன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு செட்டுக்குப் போன எம்.ஜி.ஆர்- அங்கு மந்திரக் காட்சிகளை தந்திரத்தால் வெல்வது போன்ற காட்சிகளாக மாற்ற வேண்டும் என்று யோசனை தர, ராமண்ணா மனுத்துவிட்டார். அதனால் அந்த படத்தில் இருந்தே எம்.ஜி.ஆர். பின் வாங்கியதால் பிறகு சிவாஜி நடித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தேவரின் தனிப் பிறவி படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஜெயலலிதா வள்ளிக் குறத்தியாக, எம்.ஜி.ஆர். முருகக் கடவுளாக நடித்தார். அதுவும் கனவுக் காட்சி என்ற பெயரில். முருகன் எம்.ஜி.ஆரின் இஷ்ட தெய்வம் வேறு.

ஏசு படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த தலைவன் படத் தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸ் ஒரு யுக்தி செய்தார்.

தலைவன் படம் தொடங்கி நீண்ட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ் எம்.ஜி.ஆர். விருப்பப்படி ஏசுநாதர் படத்தை துவக்கினார். ஆனால் கதையின் முடிவில் ‘ஏசுவைச் சிலுவையில் அறைவது’ போன்ற காட்சியில் நடிப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம் என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க படம் பூஜையோடு நின்றது.

ஆனால் தாமஸ் அதை ஜீஸஸ் என்ற பெயரில் மளையாளத்தில் எடுத்து தமிழிலும் வெளியிட்டார். ஜெயலலிதா அதில் நடனக்காரியாக நடித்தார்.
1976-ல் வெளிவந்த உழைக்கும் கரங்கள் படத்தில் எம்.ஜி.ஆர். சிவன் வேடத்தில் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தார்.

எம்.ஜி.ஆரின் பல படங்களை டைரக்ட் செய்திருப்பவர் கே.சங்கர். அவர் மூகாம்பிகை கோயிலுக்கு வருடம் தவறாமல் சென்று வந்தவர். அந்த கோவிலின் மகிமையைப் பற்றி எம்.ஜி.ஆரிடமும் பலமுறை கூறியிருக்கிறார்.

1976 நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள உடுப்பியில் மீனவயண்பன் படப்பிடிப்பு நடந்தது. பட்ப்பிடிப்பு முடிந்தபின் ஒருநாள் டைரக்டர் கே.சங்கருடன் அதிகாலை ஐந்து மணிக்கு கொவிலுக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வணங்கிவிட்டு பொழுது விடிவதற்குள் திரும்பி விட்டார்.

1977-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஒருமுறை சென்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பின் தன் மனைவி வி.என்.ஜானகியுடம் (மதுரையில் நாடோடி மன்னன் வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளை கொடுத்து அனுப்பினார்.

உறையுடன் சேர்த்து முக்கால் கிலோ தங்கம் உள்ள அந்த வாளின் மொத்த எடை இரண்டரை கிலோ. தங்க வாளை இரவு மூகாம்பிகைக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள். மூகாம்பிகை கோவில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள கோவில்களில் உள்ள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி ஆண் பக்தர்கள் தங்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எம்.ஜி.ஆரும் ஒவ்வொரு முறையும் தொப்பி, கண்ணாடி, மேல் சட்டையைக் கழற்றி கோவிலுக்குள் சென்று வந்திருக்கிறார்.


வெள்ளி, 28 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா



பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை. 

பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

நான் வணக்கம் தெரிவித்தேன். 

பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.



‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன். 

சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன். 

‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
                -  நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)


புதன், 4 ஜூலை, 2012

உலக சரித்திரத்தில் இந்தியா!



  1. இந்தியா தனது பல்லாயிரமாண்டு சரித்திரத்தில் எந்த நாட்டின் மீதும் ஆக்ரமிப்பு செய்ததில்லை
  2. எண்கள் முறையை கண்டுபிடித்தவர் நம் இந்தியர்தான். ‘பூஜ்ஜியம்’ ஆர்யபட்டா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
  3. உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு.100-ல் ‘தக்ஷசீலா’ என்ற இடத்தில் நிறுவப்பட்டது. உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 10,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 60 விதமான பாடங்களை அதில் படித்தனர்.
  4. கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் சாதனை புரிந்தது ‘நாலந்தா’ பல்கலைக்கழகம்
  5. உலகிலேயே மிகப்பழமையான மருத்துவம் ஆயுர்வேதம்தான். 2500 வருடங்களுக்கு முன்னரே ஆயுர்வேதத்தின் தந்தையாக விளங்கியவர் ‘சரகர்’ என்பவர்.
  6. Smart என்ற வானியல் அறிஞருக்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே பாஸுகராச்சார்யா என்பவர் சூரியனைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் நேரத்தை துல்லியமாகக் கணித்துள்ளார். இதை அவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு கண்டுபிடித்தார். (365.258756484 நாட்கள்)
  7. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு உலகின் பல நாடுகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தபோது இந்தியாவில்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் செழித்தோங்கியிருந்தது.  
முதல்.............
முதல் பெண் ஆளுநர்             ; சரோஜினி நாயுடு
முதல் பெண் முதல்வர்           ; சுசேதா கிருபாளனி
முதல் பெண் மருத்துவர்          ; முத்துலட்சுமி ரெட்டி
முதல் பெண் ஷெரீப்             ; கிளப் வாலா ஜாதவ்
முதல் பெண் தலைமைச் செயலர் ; அஞ்சலி தயானந்து
முதல் பெண் அறிவியலாளர்      ; அபலா போன்குன்னா
முதல் பெண் இசையமைப்பாளர்   ; உஷா கன்னா
முதல் பெண் இயக்குனர்          ; டி.பி.ராஜலட்சுமி
முதல் பெண் நீதிபதி              ; பத்மினி சேதுரை