செவ்வாய், 19 நவம்பர், 2013

ஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும்... (பாலகுமாரன் பக்கம்)



ஜெயிக்கிறதும் தோக்கறதும் அவனவன் தலையெழுத்து. நான் ஜெயிச்சேன்னு, நான் தோத்தேன்னு குருடன்தான் சொல்லுவான். செய்யற வேலையை ஒழுங்கா கவனமா செய்துட்டுப் போறதுதான் நமக்கு நல்லது.
ஜெயிக்கிறதோட முதல் விஷயம் மூஞ்சி மாறாமல் இருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, சந்தோஷமோ துக்கமோ மூஞ்சில காட்டாது இருக்கிறது நல்லது. புத்தி இரும்பா இருந்து, மனசு கல்லா இருந்தால்தான் முகம் அமைதியாய் இருக்கும்.
 
ஜெயிப்பதற்கு பறப்பவன் வெற்றி தேட அலைபவன் உயிர், மானம், பொருள் இழப்பு எல்லாவற்றையும் துச்சமாய் மதித்து பெரிய களத்தில் இறங்குபவன் இப்படித்தான் அலைகிறான். எச்சில் சோறு திண்கிறான்.
ஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும். பினி, பசி, பட்டினிங்கிறதே இருக்கக் கூடாது. காசுதான் வாழ்க்கை. காசுதான் உலகம் காசுதான் சந்தோஷம். காசுதான் கர்வம், காசுதான் மனுஷன், மனுஷன்தான் காசு. என்னவேணா செய்து காசு சம்பாதிக்கலாம்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு முகம் வெளிவரும். வாழ்க்கையில் அதிகம் நடிப்பவருக்கு தன் உண்மையான முகம் எதுவென்று தெரியாமலே போகும். தன் உண்மையான முகத்தை தெரிந்துகொள்ள ஆவல் இல்லாமல் போகும்.
இப்ப வாங்குற காசுக்கு நன்றியோட இருக்கணும்ல? என்ன நன்றி? பூ வித்தோம் காசு தராங்க. இதுல எங்க நன்றி வந்தது?
இடையறாது பொய் சொல்ல எல்லாராலும் முடியாது. வெகு சிலரால்தான் முடியும். அப்படி பொய் சொல்ல தனி வளர்ப்பும் வருடக் கணக்கில் பயிற்சியும் வேண்டும். அதிகமாக அவமானப்பட்டவர்களால்தான், அவமானமடைந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் இப்படி இடைவிடாது பொய் சொல்ல முடியும். வாழ்ந்தே காட்ட வேண்டும் என்கிற நிர்பந்தம் இந்த மனிதர்களை எல்லா எல்லைக்கும் இட்டுச் செல்கிறது.

இப்ப என்ன நடந்துபோச்சுன்னு புலம்பற. அழகான ஒரு பொம்பறைய பார்த்தா எல்லா ஆம்பிளையும் ஆடிப்போய் நிக்கறதில்லையா? அதே விதமா அழகான ஆம்பிளையைப் பார்த்தா பொம்பளைக்கு இருக்காதா? இருந்தா என்னா தப்பு?
ஒரு வயதிற்குப் பிறகு காமத்தை அனுபவிக்க காதல் இடைஞ்சலாகி விடுகிறது. வெறும் உடம்பு ஆட்டத்தோடு பெண்ணை விட்டு விலக முடியாமல் போகிறது. காமம்தான் காதல் செய்யத் தூண்டுகோல். காமம்தான் காதலின் மறைபொருள். காமம் என்பது ஆரவாரம். காதல் என்பது மொழி. காமம் என்பது ஒரு செய்தி எனில் காதல் என்பது கவிதை.
கவிதை தெரிந்துவிட கவிதையில் நாட்டம் விழ கவிதை செய்து செய்து புத்திக்கு அந்த ருசி பழக்கமாகிவிட வெறுமே நயமின்றி பேசமுடியாது. பெண் போகம்தான். உலகின் எல்லா விஷயங்களும் போகம்தான். உணவு உறைவிடம், உடை, வாசனைக் குவியல், தொழுகை, படிப்பு பயணம் எல்லாமே போகம்தான்.
காமத்திலிருந்து தப்பித்துக் கொள்வது எளிதே அல்ல. கணவன்-மனைவி சண்டைகளை பல்வேறு நேரங்களில் காமம்தான் தீர்த்து வைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பரஸ்பர ஈர்ப்பு காதலுக்கு அடித்தளமாக அமைகிறது. இந்தக் காதல் எனும் வாகனம்தான் வாழ்க்கைப் பயணத்தைச் சொகுசாக்கும் விஷயம்.
வயதுக்கு மீறின புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை. இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நேசிப்போடு பழக்கப்பட்டவர்களுக்குத்தான் நேசிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
நட்பை யார் வேண்டுமானாலும் யாருக்கும் கொடுக்கலாம். நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு. உலகம் தழுவிய காதல். நட்பில் உறவுச் சங்கிலி இல்லை. அன்புச்சுமை இல்லை. முடிந்தபோது முடிந்த வரையில் உதவி செய்வதே நட்பு.

6 கருத்துகள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது… [Reply]

பாலகுமாரனின் ரசிகரே இருப்பது அறிந்து மகிழ்ந்தேன். நானும் பால குமாரன் கவிதைகள் சிலவற்றை பகிர்ந்ததுண்டு.

ஜோதிஜி சொன்னது… [Reply]

ரொம்ப ரசித்துப் படித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

நன்றி...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி முரளிதரன். ஒரு காலத்தில் பாலகுமாரனின் புத்தகங்களை எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து வாங்கி படித்துவிடுவேன். அநேகமாக அவரின் எல்லா நூல்களும் என்னிடம் இருக்கும். பரணில்?! வருகைக்கு நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிக்க நன்றி ஜோதிஜி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!