வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது… டாக்டர் ம.பொ.சிவஞானம்.


நினைவிலுள்ளதை வைத்துச் சொல்கிறேன். 1956 ஜூன் 26 சென்னை சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன் முதலாக புரட்சி நடிகரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது.
அதற்கு முன்னே சந்தித்து இருக்கலாம். அது சரியாக நினைவில் இல்லை. அந்த ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை பொன்விழாவாக தமிழரசு கழகத்தினர் நடத்தினர். கோலாகலமாக நடந்த அந்த விழாவிலே மக்கள் திலகம் அவர்கள் வந்து கலந்துகொண்டு எனக்கு வாழ்த்துக் கூறினார்கள். அந்த வாழ்த்திலே எனக்கு ஒரு பட்டத்தையும் எனக்குத் தந்தார். .பொ.சி. என்ற மூன்றெழுத்துக்கு வியாக்யானம் கூறினார்.

தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்என்று அவர் கூறிய போது அந்த மண்டபத்தில் இருந்த மக்கள் அவ்வளவு பேருடைய கரங்களும் ஒலித்து மண்டபத்தையே அதிரச் செய்தது இன்றும் என் கண் முன்னே காண முடிகிறது. காதுகளால் கேட்க முடிகிறது.

அவர் அப்படிச் சொன்ன பின்பு எல்லோரும் அப்படிச் சொல்வது வழக்கமா கிவிட்டது. பட்டம், பின்னே எனக்குப் பல கிடைத்திருந்தாலும், நம்முடைய முதல்வர் அவர்கள் அந்த நாளிலே தந்த மழை போல் பொழியும் சிவஞானம் என்பது எனக்கு ஒரு தனி சிறப்பைத் தந்தது என்பதில் ஐயமில்லை.

எனது பிறந்த நாள் விழாவிலே என் மனதைக் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் பல நடந்தன. அவற்றுள் ஒன்று, எனக்கு 33 ஆயிரம் ரூபாய் பண முடிப்பு தந்ததாகும். மற்றொன்று பல பேரறிஞர்கள் வாழ்த்துக் கூறியது.

இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் என்னுடைய பெயருக்குரிய தலையெழுத்துக்களுக்கு வியாக்யானம் கூறி நம்முடைய மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இன்னும் என் மனதிலே பதிந்திருக்கிறது

அதன்பின் நாங்கள் அவருடைய ஸ்டுடியோவிலும் வேறு பல பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். அவர் முதல்வராவதற்கு முன்பு நாங்கள் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்கள் போல ஒரே குடும்பத்தவர்கள் போலவே பழகிப் பேசி வந்திருக்கிறோம்.

நான் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்த காலத்திலே கூட எங்கள் இருவரிடையே பகைமை தோன்றியதே கிடையாது. காரணம் கட்சி வெறிக்கு அப்பாற்பட்டவராக அவர் இருந்ததுதான்.
அதற்குப் பிறகு அவர் தனியாக ஒரு கட்சியைத் துவக்கிய போது, நான் அந்தக் கட்சிக்கு மாறுபட்டு பிரசாரம் செய்து வந்தேன். மிகக் கடுமையாகக் கூடச் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அப்போது அவரை பத்திரிகை நிருபர்கள் சந்தித்து, ‘.பொ.சி. தங்கள் கட்சியைத் தாக்குகிறாரேஎன்று கேட்டபோது, ‘அவர் என் மதிப்பிற்குரிய தலைவர், அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லைஎன்ற அவர் சொன்னது அவருடைய பண்பாட்டைக் காட்டியது என்பதை நான் நன்றாக உணருகிறேன்.

இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு அவர் ஒரு மாபெரும் கலைஞர் என்பதை மனதில் பதியச் செய்தது. நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆரைச் சுட்ட அந்த நேரத்திலே, ‘அண்ணே என்ன காரியம் செய்துவிட்டீர்கள்என்று கேட்டதாகப் பத்திரிகைகளிலே படித்தேன்.

அது எனக்கு மகிழ்ச்சியையும், மற்றொரு புறத்தில் வியப்பையும் தந்தது. பெரிய புராணத்திலே தன்னைத் தாக்கிய வஞ்சகனைப் பற்றி தன்னுடைய சீடனிடம் கூறிய போது, ‘தத்தா இவர் நமர்என்றாராம் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார்.

அதுபோல எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னைச் சுட்டுக்கொல்ல முயன்றவரையும்அண்ணேஎன்று அழைத்த பண்பாடு என்னைக் கவர்ந்தது.
- அப்போதைய மேலவைத் தலைவர் டாக்டர் ம.பொ.சிவஞானம்.

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

இனிய பண்பாடு நிகழ்வுகள்... நன்றி...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

ஜோதிஜி சொன்னது… [Reply]

மறக்கப்பட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆமாம் ஜோதிஜி! யாருமே இவரை இப்போது நினைவு கூர்வதில்லை. வருகைக்கு நன்றி!

vijayan சொன்னது… [Reply]

சிலம்பு ஏந்திய செம்மல் இப்படி சினிமாக்காரனை நத்தி பிழைக்கும் படி விட்டது தமிழ் சமுதாயத்தின் விதி..

பெயரில்லா சொன்னது… [Reply]

தனது பண்பட்ட செயல்களால் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நின்று வாழ்பவர் மக்கள் திலகம் அவர்கள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பெரியோர்களை, தமிழறிஞர்களை மதிப்பதிலோ, அவர்களுக்கு மரியாதை செய்யவோ என்றுமே தயங்கியதில்லை எம்.ஜி.ஆர். அதே போல சினிமாக்காரர்களும் பொது மக்களில் ஒரு அங்கமே. அவர்களை இப்படி இகழ்வதன் காரணமாகவே அந்தத் துறை சார்ந்தவர்கள் ஒட்டு மொத்த தமிழகத்தையே தன் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள் விஜயன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் அனானி! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!