புதன், 24 ஜூலை, 2013

அவர் (இதயக்)கனி, இவர் (கருணா)நிதி


திராவிடர் கழகம் காலம் தொட்டு அண்ணாவுடன் தொடர்பு கொண்டிருப்பவர் கலைஞர்! அண்ணா நடத்திய பத்திரிகையில் கலைஞர் எழுத்தோவியம் ஒன்றைத் தீட்டினார். அந்த எழுத்தின் எழில் கண்டு மகிழ்ந்தார் அண்ணா.

திருவாரூருக்கு சென்றிருந்தபோதுமு.கருணாநிதி என்பவர் இங்கே இருக்கிறாரா? அழைத்து வாருங்கள் பார்க்க வேண்டும்என்று கூறினார் அண்ணா.

பெரிய எழுத்தாளர் வரப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த அண்ணாவுக்கு அரைக்கால் சட்டை நிலையிலுள்ள கருணாநிதிதான் முன்னே நின்றார்.
படிக்கிறாயா பள்ளியில்?’

ஆமாம் அண்ணா!’

நன்றாக படித்து முடி, பிறகு கதை கட்டுரை எழுதலாம்!’ – இப்படி அறிஞர் அண்ணா அறிவுரை கூறினார். ஆனால் அந்த அறிவுரையை கலைஞர் ஏற்றாரா? இல்லை.

அண்ணா சொல்லி நான் கேட்காதது அது ஒன்றுதான்!’ என்று கலைஞரே பிற்காலத்தல் எழுதினார்.

புரட்சித் தலைவர் வளரும் புகழ் நிலையில் உள்ளபோதுஅண்ணாவின் நாடகத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அந்த நாடகத்தின் பெயர்சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்.’

ஆனால் புரட்சித் தலைவர் அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்த நாடகத்தில் நடித்தார். ‘சிவாஜிஎன்ற பெயர் பெரியாரால் கணேசனுக்குச் சூட்டப்பட்டது.

தி.மு.கழகத்தில் புரட்சித் தலைவர் சேர்ந்த பிறகு அண்ணாவின் மதிப்பிற்குரிய நண்பர் ஆனார்! அண்ணா அவர்கள் மற்றவர்களை எல்லாம்தம்பிஎன்று மேடையில் அழைப்பார். புரட்சித்தலைவரை மட்டும் நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அழைப்பார்.

அண்ணாவை எதிர்த்து சொல்லின் செல்வர் சம்பத் போர்க்கொடி உயர்த்திய ’60-ஆம் ஆண்டுகளில்கலைஞரும் புரட்சித் தலைவரும் ஓரணியில் இருந்தார்கள். நல்லுறவோடு இருந்தார்கள்!

தமிழக மேலவை உறுப்பினராக புரட்சித் தலைவரை உயர்த்தி பெருமை சேர்த்தார் அண்ணா. அடுத்து நடந்த மேலவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.கழகத்திற்குள்போட்டிஏற்பட்டது. அண்ணாவின் அணுக்க நண்பர் சி.வி. ராஜகோபால் எம்.எல்.சி. ஆவதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்தது. சி.வி. ராஜகோபால் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.

இதைக் கண்டு மனம் நொந்த புரட்சித் தலைவர் தனது எம்.எல்.சி. பதவியை விட்டு விலகினார். அப்போது அண்ணா அவர்கள் சிறையில் இருந்தார்.
இன்று காலைப் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆர். மேலவை உறுப்பினர் பதவியைத் துறந்து விட்டார். அந்த நிலையை மாற்ற நாவலரும் மற்றவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்ற செய்தி கண்டு திடுக்கிட்டுப் போனேன்.

கழகத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் அமைந்துவிட்ட பாசம் சொல்லிக் கொடுத்து ஏற்பட்டதல்ல. தூண்டி விட்டுக் கிளம்பியதுமல்ல! தானாக மலர்ந்தது!

கனி என் கரத்தில் வந்து விழுந்தது என்று பெருமிதத்துடன்நாடோடி மன்னன்வெற்றி விழாக் கூட்டத்தில் நான் பேசியது என் நினைவுக்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்து விடுவதோ, கழகம் அவரை இழந்து விடுவதோ நினைத்துக் கூட பார்க்கக் கூடாது!
எம்.ஜி.ஆர். போன்ற நட்புக்குப் பொருத்தமானவர் மனச் சங்கடம் கொண்டு விலக முனையும் போது, சங்கடம் வேதனை ஆகிறது.
-         அண்ணாவின் சிறைக் கடிதம்’ (14.03.1964)

1967 தேர்தலின் போது தேர்தல் நிதி திரட்ட அன்றையப் பொருளாளர் கலைஞர் பெரு முயற்சி எடுத்தார். பதினோரு வட்சம் சேர்த்துத் தந்தார். சென்னை விருகம்பாக்கம் தி.மு..மாநாட்டில் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்த அண்ணா, சைதாப்பேட்டை தொகுதியில் நிற்கும் கழக வேட்பாளர் கலைஞரின் பெயரை புதுமையான முறையில் அறிவித்தார்.

சைதாப்பேட்டை… 11 லட்சம்என அண்ணா அறிவித்த போது மகிழ்ச்சி ஆராவாரம் எழுந்தது.

அதே மாநாட்டில் கழக நிதிக்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை தர புரட்சித் தலைவர் முன் வந்தார். அதை ஏற்க மறுத்துவிட்டார் அண்ணா. அப்போது கூறினார், ‘அந்த ஒரு லட்சத்தை விட தேர்தல் நேரத்தில் உன் முகத்தைக் காட்டு; கழகத்திற்கு பல லட்சம் வாக்குகள் விழும்!’

அண்ணா அவர்கள் இந்த இரு தலைவர்களிடமும் அணை கடந்த அன்பு வெள்ளத்தைப் பாய்ச்சினார். தனது தம்பிமார்களை தண்பர்களைப் புகழ்ந்து பணியாற்றச் செய்வதில் அண்ணாவுக்கு நிகர் அண்ணாதான்.
என் இதயக்கனி எம்.ஜி.ஆர்என்று அவரைப் புகழ்ந்துரைப்பார்; கழகத்தின் ஒரே நிதி கருணாநிதிஎன்று இவரைப் புகழ்ந்துரைப்பார்!

என் பிறந்த நாளிலும் எம்.ஜி.ஆருக்கு ஏழைகளின் நினைவுதான்!’ என்று அவரை ஏற்றிப் போற்றுவார். ‘நான் எழுதிய அத்தியாயத்தைத் தொடர்ந்து எழுதுவார் கருணாநிதிஎன்று இவரை மெச்சிப் புகழ்வார்!

அண்ணா அவர்கள் தம் வாழ்நாளில் அதிகமாக புகழ்ந்த இருவர் உண்டு என்றால்அவர்கள் இந்தஇருவரும்தான்.                   -       அடியார்.

8 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது… [Reply]

அண்ணாவும் எம்ஜியாரும் சரித்திர நாயகர்கள்......ஆனால் இவரோ தன குடும்பத்துக்காக எதையும், எந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்க கூடியவர்...!

shiva சொன்னது… [Reply]

It is right MK changes his family for the family but MGR give up his policy for women who is better?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

பொதுநலம் 1
சுயநலம் 1

vijayan சொன்னது… [Reply]

கழகத்தின் நிதி கருணாநிதி,கழகத்தின் இதயக்கனி MGR ,தமிழகத்தின் டுபாக்கூர் அண்ணாதுரை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நாஞ்சில் மனோ!

நீங்கள் சொல்வது உண்மைதான். அதுவும் ஊரறிந்த ரகசியம் ஆயிற்றே இது!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

சிவா! தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

விஜயன்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!