காதலர்களுக்குத்தான்
காதலிப்பவர் மீது
காதலிப்பவர் மீது
பைத்தியம்
கணித அறிஞனுக்கு
எண்கள் மீது
பைத்தியம்
கவிஞனுக்குச்
சொற்கள் மீது
பைத்தியம்
ஓவியனுக்கு
வண்ணங்கள் மீது
பைத்தியம்
பாடகனுக்கு
இசை மீது
பைத்தியம்
குழந்தைகளுக்கு
பொம்மைகள் மீது
பைத்தியம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்றின் மீது
பைத்தியம்
நம் எல்லோருக்கும்
புகழ் மீது
பைத்தியம்
எந்தவொன்றின் மீதும்
பைத்தியமில்லாமல்
இருக்கிறது
பைத்தியம்.
அ. நிலாதரன்.
அ. நிலாதரன்.
4 கருத்துகள்:
நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
எந்தவொன்றின் மீதும் பைத்தியமில்லாமல் குழந்தை போல் இருப்பது நலம்... (ஆனால் சிரமம்...)
/// குழந்தை ஞானி இந்த...
இருவரை தவிர இங்கு...
சுகமாய் இருப்பது யார் காட்டு...!
ஜீவன் இருக்குமட்டும்...
வாழ்க்கை நமதுமட்டும்...
இதுதான் ஞானச்சித்தர் பாட்டு...!
மிகச்சரியான உதாரணம் தனபாலன் அவர்களே! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
சிலப் பைத்தியத்தினால் நன்மையும் உண்டு
அது என்ன பைத்தியமுன்னு சொல்லியிருக்கலாம்ல!
வருகைக்கு நன்றிகண்ணதாசன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!