புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் நம்மவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்பது அறிந்ததே. அதுவும் சற்று கலை நயத்தோடு எடுக்கத்தெரிந்துவிட்டால் அதற்கான மவுசு சொல்லி மாளாது.
பழைய புகைப்படங்கள், அபூர்வமான நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், தலைவர்களின் புகைப்படங்கள் என எல்லாமே ஒரு வகையில் பொக்கிஷம்தான். எனக்கு கிடைத்த சில அபூர்வ புகைப்படங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
1. இது மைக்ரோசாஃப்ட் அலுவலர்களின் புகைப்படம் எடுத்த ஆண்டு 1978. இடது பக்கம் கீழே இருப்பது சாட்சாத் பில்கேட்ஸ்தான்!
2. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்தர தேவி சிலை! சிலை நிறுவும் பணிகள் நடைபெற்றபோது! 1884 - ல்!
3. உலகப் போரின் போது லண்டன் மாநகர் வானில் போர் மேகம் சூழ இங்கிலாந்து விமானங்களும் ஜெர்மன் விமானங்களும் உலவும் பதற்றமான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்!
4. ஜப்பானின் நாகசாகி நகரம்! அணுகுண்டு வீச்சுக்கு இலக்கான பின் இருபது நிமிடங்கள் கழித்து எடுக்கப்பட்ட புகைப்படம்! 1945 - ல்!
5. லியோ டால்ஸ்டாய்! தன் பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்!
6. கடற்கரையோரத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் நீச்சலுடையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்!
7. புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஒரு மாலை வேளை இளைப்பாறலில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
8. ஐன்ஸ்டினின் டிப்ளமோ படிப்பின் சான்றிதழ்!
9. கீழே இருப்பவர் யார் என்று தெரிகிறதா? மாவீரன் சேகுவாரா!
10. பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில்... இயேசு கிறிஸ்துவின் சிலை நிறுவப்படும் போது எடுத்த புகைப்படம்!
11. யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? மார்டின் லூதர் கிங்!
அன்புடன்,
கவிப்ரியன்.
8 கருத்துகள்:
Excellent pictures, thanks.
முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்!
அனைத்தும் பொக்கிசங்கள் தான்...
வாழ்த்துக்கள்... நன்றி...
வாழ்த்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!
ஒரு பதிப்பக நண்பர் என்னிடம் சொன்னது. தமிழ்நாட்டில் வட ஆற்காடு தென்னாற்காடு குறித்த வரலாற்று நிகழ்வுகளை அதிக அளவில் எழுதியவர் யாருமே இல்லை என்றார். என் பார்வையில் இந்த மாவட்ட சம்மந்தப்பட்ட எழுத்துக்களும் குறைவே. உங்களால் முடிந்தால் இது குறித்த தகவல்களை திரட்டலாமே? படங்களாகக்கூட போடலாம்.
இதைப் பற்றி நான்சிந்திக்கவேயில்லை ஜோதிஜி! ஒரு புதிய கோணத்தில் எழுத தூண்டியிருக்கிறீர்கள், அதுவும் எங்கள்மாவட்டத்தைப் பற்றி! மிக்க நன்றி!
A rare collection
வருகைக்கு மிக்க நன்றி மாலா வாசுதேவன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!