திங்கள், 23 ஜனவரி, 2012

காதலெனும் அரும்பை...


அன்பே!
காதலெனும் அரும்பை
மலர்வதற்குள் பறித்தேனா?
உன் மனதை உடைத்துவிட்டேனா?
மனந்திறந்து மன்னிப்பு கேட்கிறேன்


மலர் கொடுத்தேன்
சூடிக்கொண்டாய் – என்
மனதைக் கொடுத்தேன்
தீயிலிட்டாய்!

பூ பூக்கலாம் உதிரலாம்
உதிர்ந்த்தடி என் நெஞ்சம்
கண்ணீரைச் சிந்தி
கரைத்துவிட்டாய் என் மனதை


ஆறுதல் சொல்வேன் அரவணைப்பேன்
ஆனால்
என்னவென்று சொல்வேன்
எது தடுக்கிறதென் நெஞ்சை?


மண்ணின் தாகத்தைத்
தீர்த்திடலாம் மேகம்!
பெண்ணே! உன் தாகத்தைத்
தீர்த்திடுமோ என் மோகம்?


நம் உறவு ஆரம்பித்தது எங்கே?
முடியப்போவது எங்கே?
பார்க்க முடியாத தூரத்தில்
நாம் இருந்தாலும்
பாவையுன் மீது நாளும் ஞாபகம்


நல்ல பதில் வருமென்று
நாளும் நான் காத்திருப்பேன்!?


இந்தக் கவிதை என் நண்பன் தாண்டவமூர்த்தி 12.12.1989 அன்று எனக்கெழுதிய கடிதத்தில் எழுதியது.


அடிக்-கடி கடிதம் எழுது. நீ பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை, விமர்சனங்களை எனக்கு காட்டவே இல்லை. எனக்கும் ஞாபகம் இல்லை. இன்னும் பல எழுதிவை. அடுத்தமுறை படித்துக் கொள்கிறேன். (எப்போது?)


இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும்போது உனது முதல் கடிதம் எனக்கு வரும். அதன்பின்பு மறுபடியும் ஏதாவது கிறுக்கி எழுதுவேன். அதுவரை விடைபெறுவது,
உன் நண்பன்,
தாண்டவமூர்த்தி.


மறக்க முடியாத நினைவுகளுடன்,

13 கருத்துகள்:

Avainayagan சொன்னது… [Reply]

நண்பன் "1989" இல் எழுதிய கடிதத்தை பத்திரப்படுத்தி இத்தனை வருடங்களுக்குப் பிறகு நினைவுகூர்ந்து எழுதிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி மோகன்திவ்யா அவர்களே!

பெயரில்லா சொன்னது… [Reply]

மனதை நெருடுகிறது , வருடுகிறது கவிதை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி வியபதி அவர்களே! எல்லா முக்கிய கடிதங்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதற்காகத்தான் இந்த வலைப்பதிவையே தொடங்கியிருக்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரவாணி அவர்களே!

Marc சொன்னது… [Reply]

மண்ணின் தாகத்தைத்
தீர்த்திடலாம் மேகம்!
பெண்ணே! உன் தாகத்தைத்
தீர்த்திடுமோ என் மோகம்?

அருமையான சொல்லாடல்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கவிதை பற்றிய கருத்திற்கும் நன்றி தனசேகரன் அவர்களே!

arasan சொன்னது… [Reply]

நல்ல வரிகளில் இயல்பான கவிதை ,...
வாழ்த்துக்கள இருவருக்கும்

பெயரில்லா சொன்னது… [Reply]

romba romba superaa irukku

Unknown சொன்னது… [Reply]

பழைய நண்பனின் நினைவு கூறலும் அவரின் கவிதையும் மிகவும் அருமை கவிப்ரியன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலை!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஞானசேகரன்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!