இன்று நாட்டின் 65 வது சுதந்திர தினம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நாம் இத்தினத்தைக் கொண்டாடினாலும், தேசப்பற்று என்பது இந்த ஒருநாள் மட்டுமே நினைவு கூறத்தக்கதாக மாறிப்போய்விட்ட சூழ்நிலையை நாம் மறுக்க முடியாது. ஊழல் அரசியல் வாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற இளையர் சமுதாயம் விழித்தெழ வேண்டும்.
வரலாறு என்பதே காலக்கண்ணாடிதானே. கடந்த நூற்றாண்டில் நாம் சுதந்திரம் பெற்றது வரலாறாயின் நாம் இந்த நூற்றாண்டில் சாதிக்கப்போவதைத்தானே அடுத்த தலைமுறை அதை வரலாறாய்ப் படிக்கும் .
இன்னும் ஜாதி, மத துவேஷங்களும், தீவிரவாதமும், ஊழலும் மலிந்து போன நாடாக இருப்பதற்கு காரணகர்த்தாக்கள் யார்? என் சிற்றறிவிற்கெட்டியபடி முழுமுதற்காரணகர்த்தாக்கள் எதிர்கால சமுதாயத்தினரை வளர்க்கும் பொறுப்பில் உள்ள பெற்றோர்களும், ஆசிரியர்களுமே ஆவர்.
எங்கு பார்த்தாலும் சுயநலம். உறவுகளுக்கோ, நட்புக்கோ இடமில்லாத இயந்திர வாழ்க்கை. அடிப்படை மனிதநாகரிகம் குறைந்து, பணத்திற்காக எதைவேண்டுமானால் செய்யலாம் என்ற போக்கு இதற்கெல்லாம் யார் காரணம். நாம் எல்லோருமே குற்றவாளிகள் தாம். இதன் விளைவுகள் நம்மை அதிகம் பாதிக்காது. ஆனால் நம் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்.
நம் பங்குக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டாலே மாற்றம் நிச்சயம்.
நாட்டுப்பற்றாளர்கள் சிலருக்காக.. ( நன்றி;http://wesmob.blogspot.com/)
National Flag
National Flag in eps format (438 KB)
2 கருத்துகள்:
நல்வரவாக வாழ்த்துகள்
தங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!