ஜெயலலிதாவை
விசாரிக்கும் தனி நீதிமன்றத்தின் நீதிபதி பதவி, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தலைவர் பதவி, உலக அழகிப் போட்டியின் நடுவர் பதவி இவற்றில் ஏதாவது ஒன்றை ஏற்கச்சொன்னால் எதை ஏற்பீர்கள்?
முதலாவதை,
எனக்கு கண்ணீர் கதைகளையும், கிளுகிளு கதைகளையும் விட மர்மம் நிறைந்த திகில் கதைகள் பிடிக்கும்.
பெண்கள்
மென்மையானவர்களா? மேன்மையானவர்களா?
தனக்காக
அழும் பெண்கள் மென்மையானவர்கள். பிறருக்காக போராடும் பெண்கள் மேன்மையானவர்கள்.
அண்ணாவின்
தலைமையில் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். தலைமையில் நெடுஞ்செழியன், ஜெயலலிதா தலைமையில் நெடுஞ்செழியன் ஒப்பிடுக.
போர்
முரசு, பக்கவாத்தியம், பூஜை மணி.
மேலே உள்ளவை அனைத்தும் குமுதம் அரசு பதில்களில் வந்தவை.
நல்ல நண்பன் யார்?
உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய அருமையான விஷயங்களை அடுக்கிக்கொண்டே இருப்பவர்.
இந்தியாவின் துரதிஷ்டம் எது?
பொதுவாகத் தென்படும் நேர்மையற்றத்தனம்!
நிறம் மாறும் பச்சோந்தியைக் கேலி செய்பவர்கள், திசை மாறும் சூரிய காந்தியை அப்படிச் சொல்வதில்லையே ஏன்?
பச்சோந்தியின் நிற மாற்றம் சந்தர்ப்பவாதம், தந்திரம், ஏமாற்று வேலை. சூர்ய காந்தி அப்படியா? அது பக்த மீராவைப்போல மலர்களில் புகுந்த காதல் வைரஸ். சூரியனின் மீதான சோகம் ததும்பும் நிறைவேறாக் காமம்.
கோபத்தின் விளைவு என்ன?
ஒரு வீரன் போர்க்களத்தில் மட்டுமே தோற்றுப் போகிறான். கோபக்காரன் போரில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தோற்றுப் போகிறான்.
தாய் அன்புக்கும், மனைவி அன்புக்கும் என்ன வித்தியாசம்?
தாயின் அன்பை நீதிமன்றத்தில் ரத்து செய்ய முடியாது!
15 கருத்துகள்:
சிறந்த கேள்வி பதில்களைத தொகுத்து அறியத் தந்தீர்கள்.
தங்கள் தளத்திற்கு முதன் முறையாய் வருகிறேன்.
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி
த ம 2
நீங்க தான் எழுதியதோ என்று நினைத்தேன்
அருமை அருமை அந்த கடைசி கேள்வி பதில் அருமையோ அருமை
வருகைக்கு நன்றி ஊமைக்கனவுகள். தங்களின் வாக்கிற்கும் மிக்க நன்றி.
நன்றி ஜோதிஜி அவர்களே.
நன்றி கார்த்திகேயன் அவர்களே.
’இந்தியாவின் துரதிருஷ்டம்......?’ கேள்விக்கான பதிலும் கடைசிக் கேள்விக்கான பதிலும் நெஞ்சைத் தொட்டன.
’இந்தியாவின் துரதிருஷ்டம்......?’ கேள்விக்கான பதிலும் கடைசிக் கேள்விக்கான பதிலும் நெஞ்சைத் தொட்டன.
மிக்க நன்றி பசி பரமசிவம் அவர்களே.
அருமையான பதில்கள் ....மேலே உள்ளவை அரசு பதில்கள் சரி ,கீழே உள்ளவை யார் பதில்கள் :)
த ம 8
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி பகவான்ஜி. கீழே உள்ளவை நிச்சயமாய் என்னுடையவை இல்லை. போதுமா பகவான்ஜி!
உங்களுக்குப் பிடித்த இந்த கேள்வி பதில்கள் எனக்கும் பிடித்தமானவை ஆயின. பகிர்வுக்கு நன்றி.
த.ம.9
மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா அவர்களே.
தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி யாதவன் நம்பி என்கிற புதுவை வேலு அவர்களே.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!