நான்
வாக்களிக்கப் போவதில்லை! ஜனநாயகக் கடமையைச் செய்யப்போவதில்லையா என்று
கேட்க வேண்டாம். எந்தக் கட்சிக்காவது வாக்களிக்கலாம், ஆனால்
வாக்களிக்காமல் இருக்கக்கூடாது. நேட்டோவைக் கூட பயன்படுத்த வசதியிருக்கிறது. ஆனாலும் நான்
வாக்களிக்கப் போவதில்லை.
வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் கூட ஓட்டளிக்க வகை செய்யப்படுவதைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கையில் உள்நாட்டில் இருந்துகொண்டு ஏன் வாக்களிக்கப் போவதில்லை? ஒரு விஷயத்தை யாரும் யோசிப்பதே இல்லை. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள், வேலை செய்பவர்கள் வாக்களிப்பதைப் பற்றி பேசுபவர்கள், உள் நாட்டிலேயே தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்களின் ஓட்டைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை?
இந்த வார புதிய
தலைமுறையின் ஒரு கட்டுரையில் ஜாக்கிசேகரும் யுவகிருஷ்ணாவும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு
ஓட்டுரிமை கொடுக்கலாமா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்கியின் வலைப்பக்கத்தில்
இது தொடர்பாக சூடான இடுகையையும் பகிர்ந்திருக்கிறார். அதைவிட எனக்கு வெளிமாநிலங்களில்
வசிப்பவர்களுக்கு அதாவது இந்தியாவில் இருந்தும் ஓட்டுப்போட முடியாத என்னைப் போன்றவர்களின்
பிரச்னையை ஏன் யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தெரியவில்லை.
இனைறைக்கு லட்சக்கணக்கான
மக்கள் பீகார், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், ஒடிஸா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு,
கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வந்து கட்டுமானத்தொழில்களில் வேலை செய்கிறார்கள்.
ஒடிஸாவிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் வேலை செய்கிறார்கள்.
நம் தமிழ்நாட்டவர்கள் கூட கர்நாடகம், மஹாராஸ்ட்டிரா, புதுதில்லி போன்ற மாரநிலங்களில்
வேலை செய்கிறார்கள். ஒடிஸாவில் சுரங்கத்தொழிலிலும், இரும்பு உருக்குத் தொழில்களிலும் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் வேலை செய்கிறார்கள்.
இவர்கள் எல்லாம்
எப்போதோ ஒரு வாரம் பத்து நாட்கள் ஒருசேர விடுமுறை கிடைக்கும்போதுதான் தங்கள் சொந்த
மாநிலத்திற்கு சென்று வருவார்கள். அதனால் ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறைக்கெல்லாம் அவர்கள்
போவது கிடையாது. போக வர பயணம் செய்யவே இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும்.
வெளிநாட்டில் இருந்துகூட
நான் சென்னைக்கு 4 மணி நேரத்தில் வந்திருக்கிறேன். ஆனால் இந்தியாவில் இருந்துகொண்டே
ஒடிஸாவிலிருந்து சென்னை வருவதற்கு எனக்கு 24 மணி (இரயில் பயணம்) நேரமாகிறது என்று வேடிக்கையாக நண்பர்களிடம்
சொல்வதுண்டு. அதுவும் இரயில் பயணம் என்பது இப்போதெல்லாம் நரகவேதனையாகிக் கொண்டிருக்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டமும், பயணச்சீட்டை முன்பதிவு செய்யமுடியாத சூழ்நிலையும், அவசர
ஆத்திரத்திற்கு பொதுப் பிரயாணிகளின் பெட்டியில் பயணம் செய்யமுடியாத நிலைமையும்தான்
இருக்கிறது.
ஆக, ஒரு நாளோ இரண்டு
நாளோ விருமுறை அளித்தால்கூட என்னைப் போன்றவர்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்று வாக்களிக்க
முடியாத சூழ்நிலை. தவிரவும் பொருட்செலவு. இரயில் பயணத்தில் குறைந்த பட்சம் எனக்கு இரண்டாம்
வகுப்பு தூங்கும் வசதியில் போக வர ரூ.1000.00 செலவாகும். பிறகு மற்ற செலவுகள் ஒரு ஆயிரம்
தேறும். எவனோ சம்பாதிப்பதற்கு நாம் ஏன் நம் பணத்தை செலவு செய்து கொண்டு விழுந்தடித்துக்கொண்டு
போகவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், என்னைப் போன்ற நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு
மக்களுக்கு இது இயலாத காரியமே.
இதற்காக தேர்தல்
ஆணையமோ அல்லது அரசோ இதுவரை ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இராணுவத்தினருக்குக்
கூட அஞ்சல் ஓட்டுப்போட வாய்ப்பிருக்கும் போது இது போன்ற வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்களுக்கு
ஏன் ஓட்டளிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடாது? இவர்களையெல்லாம் அரசு இயந்திரம் வாக்காளர்களாகவே
கணக்கில் கொள்ளவில்லையா என்ன?
அல்லது வேறு ஏதேனும் வழியிருக்கிறாதா?
15 கருத்துகள்:
நான் வாக்களிக்கப் போதில்லை!///////////////////உங்களுக்கு பதினெட்டு வயசு ஆகல ன்னு நினைச்சிட்டேன்
நல்ல ஐடியா தான் ...ஹும்ம்ம் ......பார்ப்போம் வருமா ன்னு
பதினெட்டு கூட ஒரு முப்பதை சேர்த்துக்க கலை! ஆனாலும் குசும்புதான். வருகைக்கு நன்றி.
கலை! வரும் ஆனா வராது!
நோட்டோ... சே... நோட்டா - ஓட்டோ...(!)
http://www.sivakasikaran.com/2014/03/nota-49o.html
உங்கள் ஆதங்கம் நியாயமானது ,நிச்சயம் இதற்கு தீர்வு காணப் படவேண்டும் !
தம் 5
ஆதரவிற்கு நன்றி பகவான்ஜி!
வருக தனபாலன் அவர்களே! நோட்டோ பற்றிய விரிவான தகவல் அடங்கிய பதிவுக்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி!
இனிய நண்பருக்கு வணக்கம். தங்களைப் போலவே நானும் பல மாநிலங்கள் சுற்றி வருகின்ற சூழலில் உள்ளேன். இப்படியாக பிற இடங்கலுக்குச் சென்று பணியாற்றும் சுதந்திரம் எனக்கு கிடைத்து இருப்பது இந்திய ஜனநாயகம் எனக்கு அளித்த கொடை எனக் கருதுகிறேன். ஆகவே எப்பாடுபட்டாவது ஓட்டளிப்பேன். தங்களின் கோரிக்கை நியாமானது. அது நடைமுறைக்கு வரும் வரை தயவுசெய்து வாக்களியுங்கள். ஏனெனில் எந்தக் கோரிக்கையும் எதிர்காலத்தில் நிறைவேற்ற ஜனநாயகம் மிக முக்கியம். குறைபாடுகளைக் களைய வாக்களியுங்கள்.
-http://kmurugaboopathy.blogspot.com/2014/04/blog-post_11.html
எனது முகநூலின் தங்களின் தளம் பகிரப்பட்டுள்ளது.
https://m.facebook.com/MurugaboopathyK
வணக்கம் முருகபூபதி அவர்களே! இந்த அரசியல்வாதிகளில் யார் யோக்கியம் நீங்களே சொல்லுங்கள்? ஆனாலும் ஓட்டுப்போட போக முடியுமா என்று முயற்சிக்கிறேன். தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
முகநூலில் பகிர்ந்தமைக்கும் நன்றி முருகபூபதி அவர்களே!
38 தானா? ஆச்சரியம் தான்.
48 என்று வந்து இருக்க வேண்டுமோ?
49-O. Elector deciding not to vote இதைச்சொல்கிறீர்களா ஜோதிஜி. நான் ஓட்டு மட்டுமல்ல இந்த 49O ஐக்கூட போடப் போக இயலாது என்று நினைக்கிறேன்.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!