வியாழன், 5 செப்டம்பர், 2013

தொழில்நுட்பப் பதிவர்களே எனக்கு உதவுவீர்களா?



கற்றது கைமண்ணளவு; கல்லாதது கடல் அளவு! நாம் எல்லாருமே மேதாவிகள் என்ற அகந்தையை தகர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பொன்மொழி இது!

மற்றவர்களைக் காட்டிலும் (என்னோடு பணிபுரிபவர்களில்) எனக்கு கணிணி அறிவு அதிகம் என்று எண்ணி இறுமாந்திருக்கிறேன். அதற்காக அவ்வப்போது பாராட்டுக்கள் கிடைத்திருந்தாலும் நிறைய நேரங்களில் சறுக்கலும் ஏற்பட்டதுண்டு. இந்த கொஞ்ச நஞ்ச அறிவே கூட தமிழ் தொழில்நுட்பப் பதிவுகளைப் படித்து கற்றதுதானே தவிர எந்த பயிற்சி வகுப்புக்கும் போய் கற்றுக்கொண்டதல்ல

கணிணி அறிவைப் பொறுத்தவரை எனக்கு ஆசான்கள் தொழில்நுட்பப் பதிவர்களே! இப்போது எனக்கு ஒரு பெரிய சறுக்கல். என்னுடைய மடிக்கணிணி திடீரென்ற மின்தடை காரணமாக (பேட்டரி சேமிக்கும் சக்தியை இழந்துவிட்ட காரணத்தால் மின்தடையின்போது உடனடியாக மடிக்கணிணியானது நின்றுவிடும்) செயலிழந்து விட்டது.

எவ்வளவோ முயற்சி செய்தும் இயங்க வைக்க முடியவில்லை. இதற்கென்றே உள்ள வல்லுனர்களிடம் காண்பித்தபோது வண்தட்டு (HARD DISK) பழுதடைந்து விட்டது, இதை மாற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர்.
மாற்றி விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.  

ஆனால் அதில் உள்ள தகவல்கள், கோப்புகள், புகைப்படங்கள், கடந்த நான்கு வருடங்களாக சேமித்து வைத்த புத்தகங்கள், இரவு பகல் பாராமல் உருவாக்கிய பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்கள், அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய அனைத்தும் பழுதடைந்த வண்தட்டிலிருந்து மீட்டெடுக்க வழியில்லையா?


ஆம்! வழியில்லை என்றுதான் கைவிரித்து விட்டார்கள்!? பரிசோதித்துப் பார்க்கும்போது வண்தட்டு (HARD DISK) தன் இருப்பை (DETECT) காண்பிக்கவில்லை. அப்படி காண்பித்தால் அதிலுள்ள தகவல்களை வேறு வண்தட்டிற்கு மாற்றித்தர வாய்ப்பு இருக்கிறது. இதில் வண்தட்டு முற்றிலுமாக பழுதடைந்து விட்டது என்று சொல்லி விட்டனர்.

இதற்கு என்னதான் வழி? தகவல்களை நான் எதிலும் சேமித்தும் (BACK-UP) வைக்கவில்லை. இப்போது வேறு வழியில்லாமல் புதிய வண்தட்டு ஒன்றை வாங்கிப் பொருத்தி கணிணியை இயங்க வைத்திருக்கிறேன். ஆனாலும் மனசு சமாதானம் ஆகவில்லை. ஏதோ கை கால் உடைந்த மாதிரியான உணர்வுதான் மேலோங்குகிறது.

அடிக்கடி மின்தடை ஏற்படும் போதெல்லாம் பயம் இருந்துகொண்டே இருக்கிறது. பழுதடைந்த வண்தட்டிலிருந்து கோப்புகளை மீட்டெடுப்பது தொடர்பாக இணையத்திலும் தேடியாகிவிட்டது. உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் சில நிறுவனங்கள் இந்தப் பணியை செய்து தருவதாக விளம்ரப் படுத்தியிருக்கிறார்கள்.  

அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது வண்தட்டை பரிசோதித்தபின்புதான் தகவல்களை மீட்டெடுப்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியும் என்கின்றனர். பண விரயமும் அதிகமாகும் என தெரிகிறது.

நம் தமிழ் தொழில்நுட்ப பதிவுகளில் எல்லாவற்றிற்கும் வழிகளைச் சொல்கிறார்கள். ஆனல் இந்தப் பிரச்னைக்கு மட்டும் யாரும் இதுவரை தீர்வு சொல்லவில்லை என நினைக்கிறேன். சொல்வார்களா? எனக்கு யாராவது உதவுவார்களா?
 
இரண்டாமாண்டு பதிவர் திருவிழா!

வழக்கம்போலவே இந்த ஆண்டும் மிகுந்த ஆர்வம் இருந்தும் பதிவர் திருவிழாவிற்கு போக முடியவில்லை. மனசெல்லாம் அங்கேதான் இருந்தது. புதிய நண்பர்களின் அறிமுகங்களும், நேரில் சந்திக்கும் பொன்னான சந்திப்பையும் நான் தவறவிட்டுவிட்டேன்

சின்னச்சின்ன இலக்கியக் கூட்டங்களுக்கு எல்லாம் வேலூரிலிருந்து நான் சென்னை வந்துபோன நிகழ்வுகள் ஏராளம். ஆனால் சென்னைக்கு குடி பெயர்ந்தவுடன் எந்த கூட்டத்திற்கும் போகமுடிந்ததே இல்லை. இந்த பதிவுலக சம்மந்தப்பட்ட கூட்டத்திற்கும் வரமுடியாத சூழல். வெளிமாநிலத்தில் பணிபுரிவதாலும் இரயிலில் முன்பதிவு கிடைக்காமையுமே முக்கிய காரணம்.

விழா இனிது முடிந்திருக்கிறது. எனக்கு அழைப்பு விடுத்த 'தென்றல்' சசிகலா அவர்களுக்கும், 'தேவியர் இல்லம் திருப்பூர்' ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

16 கருத்துகள்:

ADMIN சொன்னது… [Reply]

வன்தட்டு செயலிழந்த பிறகு அதிலுள்ள தகவல்களை மீட்பது என்பது மிக கடினமானதுதான். அதற்கான வல்லுநர்கள் அணுகுவதே சிறந்தது.

எனக்கத் தெரிந்தவரை என்னுடைய அலுவலக கணினியின் வன்தட்டு செயலிழந்த பிறகு அதிலுள்ள கோப்புகளை மீட்க முடியாமற் போனது.

அந்த வன்தட்டு, கோயம்புத்தூர், பெங்களூர், மும்பை என ஒரு சவாரி அடித்துவிட்டு பிறகு எங்களிடமே திரும்பி வந்தது...

பலன் பூஜ்ஜியம்...

கணினிப் பிரச்னைகளிலும் கூட "வருமுன் காப்பதே சிறந்தது"

இனியாவது உங்களுடைய முக்கியமான கோப்புகளை மாதந்தோறும் "பேக்கப்" எடுத்து வேறொரு சேமிப்பகத்தில் சேமிக்க வைக்க மறந்துவிடாதீர்கள்...

பேக்கப் எடுப்பது இதுபோன்ற இக்கட்டான சூழலில் உதவும்.

drogba சொன்னது… [Reply]

Contact the manufacture(either seagate or western digital). They can take the inner disks and recover the data. However it may cost over 1500 DOLLERS.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

// தகவல்களை நான் எதிலும் சேமித்தும் (BACK-UP) வைக்கவில்லை... //

நல்லது... இது முதல் அனுபவம்... இனி மற்றவர்களுக்கு என ஒரு பதிவு வரும்...

நன்றி... வாழ்த்துக்கள்... இதுவும் கடந்து போகும்...!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் முதல் வருகைக்கும் விரிவான ஆலோசனைக்கும் மிக்க நன்றி தங்கம் பழனி அவர்களே!
இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிற்று?! இதை ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு இனி மிகவும் எச்சரிக்கையாக தங்களின் ஆலோசனைப்படி மாதந்தோறும் 'பேக்கப்' எடுத்து வைக்க ஆரம்பிக்க வேண்டும்.
சென்னையில் சில முகவரிகளை குறித்து வைத்திருக்கிறேன். அங்கு கொண்டுபோய் கேட்கலாம் என்றிருக்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

Dear Drogba! என்னது... 1500 டாலரா? கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 90,000 ரூபாய். வேண்டவே வேண்டாம். என்னுடையது 'சாம்சங்'ஹார்ட் டிஸ்க்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி தனபாலன்! பதிவர் சந்திப்பு வேலை எல்லாம் முடிந்ததா?
ஆம்! இது முதல் அனுபவம்தான்.
//மற்றவர்களுக்கு என ஒரு பதிவு வரும்\\
இந்த பதிவே போதாதா மற்றவர்களை எச்சரிக்க!

பங்குச்சந்தை ஆர்வலன் சொன்னது… [Reply]

நண்பரே,

உங்கள் கணிணியின் பிராண்ட் என்ன?
அந்த பிராண்டின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் கொடுத்துப் பாருங்கள். அனேகமாக OS க்ராஷ் ஆகியிருக்கலாம். அப்படி இருந்தால் மேசைக்கணிணிகளில் அந்த வன்தட்டை இன்னொரு கணிணியில் secondary disk-க்காக போட்டு தகவல்களை எடுக்கலாம். எங்கள் நிறுவனத்தில் மடிக்கணிணியிலும் ரெக்கவரி செய்வார்கள். எதுக்கும் சென்னையிலோ, பெங்களூரிலோ உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் போன் செய்து கேட்டுப் பாருங்கள். முடியுமென்றால் (தேவையிருப்பின்) அவர்களிடம் எடுத்துச் செல்லவும்.

சரி போனது போகட்டும்.
1. இப்போதுள்ள வன்தகட்டிலாவது, இரு partition போட்டு வையுங்கள். உங்கள் கோப்புகளை d: driveல் சேமியுங்கள்.
2. இன்னோரு 100/200gb தனிவட்டில் முதலீடு செய்து அவ்வப்போது காப்பி செய்து கொள்ளுங்கள்.
3. UPS இல்லையென்றால் மின்வெட்டின்போது கணிணியில் வேலை செய்யாதீர்கள். hibernate mode போட்டு கணிணிக்கு ஓய்வு கொடுங்கள். (சார்ஜில் இல்லாதபோது வலது கீழ் மூலையில் பேட்டரி icon மீது ப்ளக் படம் தெரியாது. இது உங்களுக்குத் தெரியுமா?) கடும் மின்வெட்டு எனில் shutdown செய்து விடுங்கள்.

4. ஆமாம் கணிணியில் இப்போது பேட்டரி வேலை செய்கிறதா? 30 நிமிடமாவது வருகிறதா? விண்டோஸ் செட்டிங்ஸ் போய் 20% பேட்டரி இருக்கும்போதே hibernate செட் செய்தால் நீங்கள் விரும்பினாலும் கணிணி தூங்கப் போய்விடும்.

பெயரில்லா சொன்னது… [Reply]


check here.

http://datarecovery.webnirnaya.com/

Web Nirnaya,

#174/40, Ground Floor, Lucky Paradise,
22nd cross, 8 F Main Road,
Jayanagar 3rd Block,
Bangalore ? 560011. (Karnataka) INDIA.

We can recover data in the following circumstances:
Your hard drive has crashed or died;
Your laptop or PC does not boot or does start up;
You experience blue screens, frozen applications or any disk errors;
Your cannot access data stored on a USB hard drive or USB pen telling you "Drive Not Formatted, Do You Want To Format Drive";
Your hard drive makes clicking or ticking noises;
Your hard drive is not recognized in the BIOS
Your laptop or PC has died and no longer works;
Your hard drive has been accidentally or deliberately formatted;
You have accentually deleted data
Your files, emails or folders have disappeared or been lost;
Your hard drive has been damaged as a result of water spillage, impact or exposure to fire;
Your computer gives the message "Operating System Not Found" at start-up;
Your USB hard drive is not being detected by any computer;
Your hard drive partition is lost or damaged;

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பங்குச்சந்தை ஆர்வலன்!

தங்களின் வருகைக்கும், விரிவான ஆலோசனைக்கும் உதவும் மனப்பான்மைக்கும் மிக்க நன்றி!
என்னுடைய மடிக்கணிணி காம்பாக் (HP). ஆம் OS கிராஷ் ஆனது. மீண்டும் ஓ.எஸ். நிறுவி முயற்சித்துப் பராத்தாகிவிட்டது. வேறொரு கணிணியிலும் இந்த ஹார்ட் டிஸ்க்-ஐ போட்டு பேக்கப் எடுக்க முயற்சித்தேன். ஆனால் ஹார்ட் டிஸ்க் டிட்டெக்ட் ஆகவில்லை. தற்போது நான் ஓடிசாவில் பணிபுரிவதால் சென்னை செல்லும்போது அந்த கம்பனியின் சர்வீஸ் சென்டருக்கு கொண்டுபோய் காண்பிக்கிறேன்.

இப்போது அவ்வப்போது கோப்புகளை சேமித்து வைக்கிறேன். எப்போதுமே எல்லா கோப்புகளையும் D அல்லது E டிரைவில்தான் சேமிக்கிறேன்.

UPS இல்லை. மின்வெட்டு அதிகமாக இருக்கிறது. உடனடியாக UPS வாங்குகிறேன். பேட்டரி சுத்தமாக செயலிழந்துவிட்டது. அதிகபட்சமாக 2 நிமிடங்கள் தான் தாக்கு பிடிக்கிறது. அதையும் மாற்ற வேண்டும்.!
விரிவான ஆலோசனைக்கு மீண்டும் நன்றி நண்பரே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அனானி!
தங்களின் வருகைக்கும் முகவரி தந்தமைக்கும் மிக்க நன்றி! முதலில் சென்னையில் முயற்சி செய்து பார்க்கிறேன். முடியவில்லை எனில் நீங்கள் கொடுத்த பெங்களூரு முகவரிக்கு கொண்டுபோய் முயற்சிக்கிறேன்.

பங்குச்சந்தை ஆர்வலன் சொன்னது… [Reply]


//பேட்டரி சுத்தமாக செயலிழந்துவிட்டது. அதிகபட்சமாக 2 நிமிடங்கள் தான் தாக்கு பிடிக்கிறது. அதையும் மாற்ற வேண்டும்.!//

புது ஹார்ட் டிரைவ் பழைய மடிக்கணிணி?
இல்ல புது மடிக்கணிணியிலும் பேட்டரி அவுட்டா?

பழைய வண்தகட்டிலும் பார்ட்டிஷன் வைத்திருந்தீர்களா? அப்படின்னா முன் சொன்ன பெங்களூர் கடையில் திரும்ப படியெடுக்க வாய்ப்பிருக்கு. என்ன 3000/4000 ரூ செலவாகலாம்.

பொதுவா சர்வீஸ் சென்டர்கள் சைக்கிள் பஞ்சர் ஒட்டுவதில் வல்லவர்கள். அதுக்கும் மேலே என்றால் டயர்/ட்யூபையே மாற்றச் சொல்பவர்கள்.

சரி பேட்டரி calibration செஞ்சு பாத்தீங்களா? அவ்வ ப்போது (every 3 month) பேட்டரி calibrate பண்ணுங்க. அப்பத்தான் பேட்டரி நீண்ட நாள் உழைக்கும். இல்லாவிட்டால் கழுதை-கட்டெரும்பு கதைதான்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பங்குச்சந்தை ஆர்வலன்!
புது ஹார்ட் டிஸ்க், பழைய மடிகணிணி! பழையதிலும் பார்ட்டிஷன் வைத்திருந்தேன். பெங்களூரு கடையில் முயற்சிக்கிறேன். 3000 என்றால் பரவாயில்லை. அதற்கும் மேல் என்றால் விட்டுவிட வேண்டியதுதான். இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
அதுசரி! பேட்டரி காலிப்ரேஷன் செய்வது எப்படி? புதிய செய்தியாக இருக்கிறதே! கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் நண்பரே!

வவ்வால் சொன்னது… [Reply]

கவிப்பிரியன் ,

வழக்கம் போலவே மொட்டையா சொல்லி வச்சிருக்கீங்க:-))

ஹார்ட் டிஸ்க் டிடெக்ட் ஆகலைனு என்ன பரிசோதனை செய்தார்கள்?

விவரம் சொன்னால் தெளிவாக பதில் சொல்லமுடியும்.

ஹார்ட் டிஸ்க் டிடெக்ட் ஆகலைனா,

! due to bad sector formation hd "MBR" file கரப்ட் ஆகி இருக்கும்.

நீங்க பேட்டரி இல்லாம பயன்ப்படுத்தியதால்,அடிக்கடி ஷட் டவுன் செய்யாம ஆஃப் ஆகி பேட் செக்டார் உருவாகி இருக்க வாய்ப்பு அதிகம்.
இப்படி ஆகி இருந்தா சரி செய்யவும், டேட்டா ரெகவரி செய்யவும் முடியும்.

அப்புறம் பார்டிஷன் போட்டு வச்சிருந்தாலும், எம்பிஆர் ஃபைல் கரப்ட் ஆச்சுனா டிஸ்க் டிடெக்ட் ஆகாது,எனவே பேக் அப் எடுப்பதே பாதுகாப்பானது.

3)) பவர் இன்புட், டேட்டா இன்புட் பின்ஸ் டேமேஜ் ஆகி டிடெடக் ஆகாம போயிருக்கலாம்,கேபிள் எல்லாம் மாத்தி, டிஸ்க்க நிக்க வச்சு,படுக்க வச்சுனு டிரை செய்தால் ஒரு வேளை டிடெக்ட் ஆகும்.

அப்படியும் டிடெக்ட் ஆகலைனா,

முதலில் ஹார்ட் டிஸ்க் ரன் ஆவதன் அறிகுறியாக ஒரு வைப்ரேஷன், சவுண்ட் எல்லாம் வருதானு பாருங்க, மேல கை வச்சு பார்த்தாலே உணரலாம்,அப்படி ஹார் டிஸ்க் இயங்குவதற்கான அறிகுறியே இல்லைனா கீழ்கண்டவற்ரால் டிஸ்க் டெட் ஆகி இருக்கும்,

3) டிஸ்கின் சர்கியூட் போர்ட் வீணாபோயிருக்கும்,போர்ட் மாத்தினா வேலை செய்யும்.

4) ஹார்ட் டிஸ்க் உள்ளே மோட்டார், ஹெட் போன்றவை பழுதாகி செயல்படாமல் போவது.

சர்க்கியூட் போர்ட் போயிருந்தால் மட்டுமே சென்னையில கூட சரிய செய்ய முடியும், டிஸ்க் உள்ள மோட்டர் போயிடுச்சு, ஹெட் போயிடுச்சுனா ஒன்னும் செய்ய மாட்டாங்க.

டெக்னிகலா பார்த்தா அதுவும் சரி செய்ய முடியும் ஆனால் செலவு எக்கசக்கமாகும் :-))

லேப் டாப்புக்கு யுபிஎஸ் எதுக்குங்க? அப்படியே எக்ஸ்டெர்னல் பவர் ஸ்டேண்பை வேண்டும்னா ,பவர் பேன்க் எனப்படும் கூடுதல் லேப்டாப் பேட்டரி சார்ஜிங் வசதியுடன் இருக்கு, அதை வாங்கி வச்சிக்கலாம், வெளியூருக்கு போகும் போது கூட தூக்கிட்டு போகலாம் வெயிட் கம்மி.

ரிச்சி ஸ்ட்ரீட் போனால் எல்லாம் கிடைக்கும் ஆனால் ஒருக்கடைக்கு நாலு கடையில விலை விசாரிக்கனும் :-))

பின்குறிப்பு:

பேட்டரியே வேலை செய்யாத லேப் டாப்பில் புது டிஸ்க் போட்டதுக்கு சும்மாவே இருந்து இருக்கலாம், அந்த டிஸ்க்கும் கூடிய சீக்கிரம் அடிவாங்கத்தான் போகுது அவ்வ்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வவ்வால்! வருகைக்கும் ஆலோசனை தந்தமைக்கும் மிக்க நன்றி. நீங்கள் கொடுத்த ஆலோசனைப்படி முயன்று பார்க்கிறேன். பேட்டரி பேக்கப் இல்லையாதலால் மீண்டும் ஒருமுறை இதேபோல நடக்க வாய்ப்புண்டு என்பதை அறிந்தே இருக்கிறேன். ஏற்கனவே சிறைய செலவு செய்தாயிற்று. மீண்டும் ஏன் என்றுதான் யோசனை! புதிய மடிக்கணிணி வாங்க யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

prem anand சொன்னது… [Reply]

உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன். நண்பர்கள் கூறிய வழிமுறையை செய்து பார்க்கவும். உங்களுக்கு எதுவுமே கை கொடுக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட link இல் உள்ள freeze it, drop it technique ஐ செய்து பார்க்கவும்.
http://www.hirensbootcd.org/200-ways-to-revive-a-hard-drive/
ஒருவேளை hard disc detect ஆகி partitions தெரியவில்லை என்றால் acronis disc director home பயன் படுத்தி recover செய்யவும்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பிரேம் ஆனந்த் அவர்களே! தங்களின் வருகைக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. தாங்கள் கொடுத்துள்ள இணைப்பில் சென்று பார்க்கிறேன். முயற்சி செய்கிறேன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!