பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2013

தொழில்நுட்பப் பதிவர்களே எனக்கு உதவுவீர்களா?



கற்றது கைமண்ணளவு; கல்லாதது கடல் அளவு! நாம் எல்லாருமே மேதாவிகள் என்ற அகந்தையை தகர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பொன்மொழி இது!

மற்றவர்களைக் காட்டிலும் (என்னோடு பணிபுரிபவர்களில்) எனக்கு கணிணி அறிவு அதிகம் என்று எண்ணி இறுமாந்திருக்கிறேன். அதற்காக அவ்வப்போது பாராட்டுக்கள் கிடைத்திருந்தாலும் நிறைய நேரங்களில் சறுக்கலும் ஏற்பட்டதுண்டு. இந்த கொஞ்ச நஞ்ச அறிவே கூட தமிழ் தொழில்நுட்பப் பதிவுகளைப் படித்து கற்றதுதானே தவிர எந்த பயிற்சி வகுப்புக்கும் போய் கற்றுக்கொண்டதல்ல

கணிணி அறிவைப் பொறுத்தவரை எனக்கு ஆசான்கள் தொழில்நுட்பப் பதிவர்களே! இப்போது எனக்கு ஒரு பெரிய சறுக்கல். என்னுடைய மடிக்கணிணி திடீரென்ற மின்தடை காரணமாக (பேட்டரி சேமிக்கும் சக்தியை இழந்துவிட்ட காரணத்தால் மின்தடையின்போது உடனடியாக மடிக்கணிணியானது நின்றுவிடும்) செயலிழந்து விட்டது.

எவ்வளவோ முயற்சி செய்தும் இயங்க வைக்க முடியவில்லை. இதற்கென்றே உள்ள வல்லுனர்களிடம் காண்பித்தபோது வண்தட்டு (HARD DISK) பழுதடைந்து விட்டது, இதை மாற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர்.
மாற்றி விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.  

ஆனால் அதில் உள்ள தகவல்கள், கோப்புகள், புகைப்படங்கள், கடந்த நான்கு வருடங்களாக சேமித்து வைத்த புத்தகங்கள், இரவு பகல் பாராமல் உருவாக்கிய பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்கள், அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய அனைத்தும் பழுதடைந்த வண்தட்டிலிருந்து மீட்டெடுக்க வழியில்லையா?


ஆம்! வழியில்லை என்றுதான் கைவிரித்து விட்டார்கள்!? பரிசோதித்துப் பார்க்கும்போது வண்தட்டு (HARD DISK) தன் இருப்பை (DETECT) காண்பிக்கவில்லை. அப்படி காண்பித்தால் அதிலுள்ள தகவல்களை வேறு வண்தட்டிற்கு மாற்றித்தர வாய்ப்பு இருக்கிறது. இதில் வண்தட்டு முற்றிலுமாக பழுதடைந்து விட்டது என்று சொல்லி விட்டனர்.

இதற்கு என்னதான் வழி? தகவல்களை நான் எதிலும் சேமித்தும் (BACK-UP) வைக்கவில்லை. இப்போது வேறு வழியில்லாமல் புதிய வண்தட்டு ஒன்றை வாங்கிப் பொருத்தி கணிணியை இயங்க வைத்திருக்கிறேன். ஆனாலும் மனசு சமாதானம் ஆகவில்லை. ஏதோ கை கால் உடைந்த மாதிரியான உணர்வுதான் மேலோங்குகிறது.

அடிக்கடி மின்தடை ஏற்படும் போதெல்லாம் பயம் இருந்துகொண்டே இருக்கிறது. பழுதடைந்த வண்தட்டிலிருந்து கோப்புகளை மீட்டெடுப்பது தொடர்பாக இணையத்திலும் தேடியாகிவிட்டது. உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் சில நிறுவனங்கள் இந்தப் பணியை செய்து தருவதாக விளம்ரப் படுத்தியிருக்கிறார்கள்.  

அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது வண்தட்டை பரிசோதித்தபின்புதான் தகவல்களை மீட்டெடுப்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியும் என்கின்றனர். பண விரயமும் அதிகமாகும் என தெரிகிறது.

நம் தமிழ் தொழில்நுட்ப பதிவுகளில் எல்லாவற்றிற்கும் வழிகளைச் சொல்கிறார்கள். ஆனல் இந்தப் பிரச்னைக்கு மட்டும் யாரும் இதுவரை தீர்வு சொல்லவில்லை என நினைக்கிறேன். சொல்வார்களா? எனக்கு யாராவது உதவுவார்களா?
 
இரண்டாமாண்டு பதிவர் திருவிழா!

வழக்கம்போலவே இந்த ஆண்டும் மிகுந்த ஆர்வம் இருந்தும் பதிவர் திருவிழாவிற்கு போக முடியவில்லை. மனசெல்லாம் அங்கேதான் இருந்தது. புதிய நண்பர்களின் அறிமுகங்களும், நேரில் சந்திக்கும் பொன்னான சந்திப்பையும் நான் தவறவிட்டுவிட்டேன்

சின்னச்சின்ன இலக்கியக் கூட்டங்களுக்கு எல்லாம் வேலூரிலிருந்து நான் சென்னை வந்துபோன நிகழ்வுகள் ஏராளம். ஆனால் சென்னைக்கு குடி பெயர்ந்தவுடன் எந்த கூட்டத்திற்கும் போகமுடிந்ததே இல்லை. இந்த பதிவுலக சம்மந்தப்பட்ட கூட்டத்திற்கும் வரமுடியாத சூழல். வெளிமாநிலத்தில் பணிபுரிவதாலும் இரயிலில் முன்பதிவு கிடைக்காமையுமே முக்கிய காரணம்.

விழா இனிது முடிந்திருக்கிறது. எனக்கு அழைப்பு விடுத்த 'தென்றல்' சசிகலா அவர்களுக்கும், 'தேவியர் இல்லம் திருப்பூர்' ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!