பரஸ்பரநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரஸ்பரநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

நானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…

சேமிப்பு, முதலீடு, காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான். விகடன் குழுமத்தின்நாணயம் விகடனை ஆரம்பத்தில் இதற்காகவே வாங்கியதுண்டு. அப்புறம் சோம வள்ளியப்பனின் முதலீடு, பங்குசந்தை சம்மந்தமான அள்ள அள்ளப் பணம் போன்ற புத்தகங்களைப் படித்தபின் அவைகளில் முதலீடு செய்யும் ஆர்வமும் ஏற்பட்டது.

2007-ம் ஆண்டு என நினைக்கிறேன். நிறைய யோசித்து இரண்டு மூன்று பரஸ்பர நிதித் திட்டங்களின் NFO (New Fund Offer) க்களில் முதலீடு செய்தேன். அப்போதைய என் சிற்றறிவுக்கு எட்டியது என்னவோ 10 ரூபாய்க்கு (மிக குறைந்த விலைக்கு) வாங்கும் ஒரு யூனிட் இரண்டு மூன்று வருடங்களில் வளர்ந்து பெரிய தொகையாகும் என்பது என் கணக்கு.

ஆனால் நடந்தது என்னவோ தலைகீழாய்! பத்து ரூபாய்க்கு வாங்கியது 8, 7, 6 ரூபாய்க்குப் போய் இன்றுவரை கூட 11 ரூபாய்க்கு மேல் போகவில்லை. இதுதான் முதல் அடி! அதற்குப் பிறகு கொஞ்சம் அலசி ஆராய்ந்து கடந்த காலத்தில் அந்த திட்டம் கொடுத்த வருமானத் எல்லாம் பார்த்து முதலீடு செய்ய அதுவும் SIP (Systematic Investment Plan) செய்ய அந்த திட்டங்கள் எனக்கு 60, 70 சதவீத லாபம் கொடுத்தன.
                                              


நான் பங்குச்சந்தையில் முதலீட்டைத் தொடங்கிய நேரம் இத்தனை மோசமானதாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நானாவது பரவாயில்லை, பலர் இடி விழுந்தது போல் பதறித்தான் போனார்கள். அன்றைய செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் என எல்லாமே அன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியை விலாவரியாய் சொன்னது

முதல் முறை என்றாலும் சுமார் முப்பதாயிரம் ரூபாயை நான் 2008 ஜனவரி மாதம் 16-ம் தேதியோ அல்லது 17-ம் தேதியன்றோதான் முதலீடு செய்திருந்தேன். (என்னோடு பணிபுரிந்து கொண்டிருந்த நண்பரொருவர் சுமார் இரண்டரை லட்சம் வரை முதலீடு செய்திருந்தார்). அடுத்த நான்கே நாட்களில் இப்படி பங்குச்சந்தை வீழ்ச்சி காணும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்

என்னுடைய முதலீடு மிகவும் குறைவு என்றாலும், சந்தை வீழ்ந்தால் மீண்டும் எழத்தானே போகிறது. ஏன் கவலைப் படவேண்டும்? நாம்தான் நீண்டகால முதலீட்டை விரும்புபவராயிற்றேஎன்று சமாதானம் செய்து கொண்டேன். அதனால் வீழ்ந்திருந்த அந்த நேரத்தில் இன்னம் கொஞ்சம் முலீடு செய்தேன். மீண்டும் அடி! கிட்டத்தட்ட மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் 21,000-த்திலுருந்து 9,000 புள்ளிகள் வரை சரிந்தது

நான் வாங்கிய பங்குகள் எதுவுமே எனக்கு இன்றுவரை கைகொடுக்கவே இல்லை. பங்கச்சந்தை புள்ளிகள் மீண்டும் 20,000-த்தை தொட்ட பின்பும் இன்னமும் அந்த பங்குகள் அதள பாதாளத்திலேயே இருக்கின்றது. ஆர்வமும் போய்விட்டது. புள்ளிகள் உயரும்போது ஆசை ஏற்படுவதும், வீழும்போது நல்லவேளை நாம தப்பிச்சோம் என்ற ஆறுதலுமாகத்தான் எனது நிலை போய்க்கொண்டிருக்கிறது.

ஆனாலும் முழுவதுமாக விட்டுவிடவோ, தலைமுழுக்கு போடவோ மனமில்லை. ஏன் சராசரி செய்து வரலாமே என்று சிலர் கேட்கக்கூடும். அந்த பக்குவப்பட்ட மனநிலை இன்னும் எனக்கு வரவில்லை. அதற்கு காரணங்களும் இருக்கின்றன.

வேலை நேரத்தில் செய்ய முடியவில்லை. அது சரியும் இல்லை. பங்குச்சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க முடியாத சூழ்நிலை. இணைய இணைப்பின் வேகம் போதுமானதாக இல்லை. நான் முதலீடு செய்து வரும்ஆன்லைன்தரகு நிறுவனமான SBICAPSEC நிறுவனத்தின் டிரேடிங் விண்டோ திறப்பதே இல்லை.

எவ்வளவு முயற்சி செய்தும் ஜாவா செட்டிங்ஸ், பாப்அப் பிளாக்கர், ஃபயர்வால் செட்டிங்ஸ் என எல்லாம் செய்தும் முயற்சி பலனளிக்கவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உதவிமையத்தின் ஆலோசனைகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் புதிய முதலீட் எதையும் செய்ய முடியவில்லை. வாங்கி வைத்திருக்கும் பங்குகள் எதையும் விற்கவும் முடியவில்லை!

இதற்கும் வழி தெரியவில்லை. தொழில்நுட்ப பதிவர்களோ அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களோ எனக்கு உதவுவீர்களா

நான் பயன்படுத்திவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான SBICAPSEC நிறுவனத்தில் தொடரலாமா, டிரேடிங் விண்டோ திறப்பதற்கான குறையை நிவர்த்தி செய்வது எப்படி? அல்லது வேறு ஆன்லைன் தரகு திறுவனத்தை அணுகலாமா? அணுகலாம் எனில் எது சிறந்தது? ICICIDIRECT சிறந்த தெரிவாக இருக்குமா? போன்றவற்றை அனுபவமுள்ள பதிவர்கள் தெரியப்படுத்தினால் எனக்கும் என்னைப்போல உள்ள பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமல்லவா?


இன்றைய தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 700 புள்ளிகள் சரிவைச் சந்தித்திருக்கிறது. சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கலாம் என்ற செய்திதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு (ரூ.68.00) குறைந்தது. இது குறித்த ஒரு அருமையான ஒரு பகிர்வு இந்த இணைப்பில்...

வவ்வால் அவர்களுக்காக.... ஆன்லைனில் வாங்க முடியும், விற்கமுடியும் என்பதற்கான விண்டோ...
  இதல் உள்ள புராடக்ட்ஸ் என்பதை கிளிக் செய்தால் மியீட்சுவல் ஃபண்ட் என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்தால் கீழ்க்கண்ட விண்டோ திறக்கும். 


அதில் எந்த வகையான மியூட்சுவல் ஃபண்டையும் வாங்கவோ விற்கவோ மாற்றவோ முடியும். இதன் சேவை திருப்திகரமாக இல்லை என்பதால்தான் வேறு நிறுவனத்துக்கு மாற யோசித்து இந்த இடுகையை எழுதியது.