திங்கள், 15 ஏப்ரல், 2013

நட்பு என்பது ...


இதுவல்ல தோழி
நட்பு என்பது ...

முகம் கண்டவுடன்
முந்திவரும்
உதட்டோர அழைப்பு

முன்னேறினால் முகமலர்வு
பின்னேறினால் அகமகிழ்வு

உணவு பகிர்தல்
நட்புக் கயிறு கட்டுதல்
ஊர் சுற்றிப் பறத்தல்
தொலைபேசியில் நேரம் தொலைத்தல்
வாழ்த்தட்டை அனுப்பல்
இரகசியம் அலசல்
பயணச்சீட்டு முதல் பசியாறும் உணவு வரை
பணம் செலவழித்தல்

இதுவல்ல தோழி
நட்பு என்பது!

மலர வேண்டும்
அன்றலர்ந்த மொட்டாய்
அகமும் முகமும் ...

பேசவேண்டும்
எல்லைக்கோடற்ற வாழ்த்தைகள்

பல வருடப் பழக்கமல்ல
நட்பின் ஆழம் சொல்வது
சில நிமுடப் புரிதல்

காலச் சுழற்சியில்
தொலைதூர இடைவெளியில்
நம் நட்பு தொலையாதிருந்தால்

சூழல்களால் சூறையாடப்பட்டாலும்
மனவிளிம்பில் என் நினைவு
ஒட்டியிருபிரிந்து பல வருடம் கழிந்தும் என்
பிறந்தநாள் உன் நினைவிலிருந்தால்

தொலைபேசி சுழற்ற்றுகையில்
உன் மனதிற்குள்
என் வீட்டு எண் ஒலித்தால்

நரை கூடிய பின்னும் என்
கையெழுத்து உன்
கண் கண்டறிந்தால்

இவையனைத்தும்
இவையனைத்தும்
எனக்குள்ளும் உயிர்த்திருந்தால்...
நம் நட்பு
என்றும் நிலைத்திருக்கும்
எழுதப்படாத சரித்திரமாய்!

'ஜன்னலோரச் சிறகுகளிலில்' இருந்து .... கலைமதி ஆனந்த்

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

/// மலர வேண்டும்
அன்றலர்ந்த மொட்டாய்
அகமும் முகமும் ... ///

அருமை... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே, தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும்.

கவியாழி சொன்னது… [Reply]

நீங்க சொல்லும் நட்பு உண்மைதான்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!