வியாழன், 5 ஜூலை, 2012

எனக்குப் பிடித்த காதல் கவிதைகள்!

(எனது நூறாவது பதிவு)


விடிந்த பின்பும்
இமைக் கதவைத் திறக்க
மனம் வரவில்லை!
என்ன செய்வது?
கனவுக்குள் நீயும் நானும்!

உன் பார்வை
என்னைத்
தீண்டிய போது
உன்னை வென்றேன்!

உன் விரல்கள்
என்னைத்
தீண்டிய போது
என்னை வென்றேன்!

உன் இதயம்
என்னைத்
தேடிய போது
உலகை வென்றேன்!

கலைந்து போகிறது மேகம்
என் கனவிலும்
கலையாது உன் முகம்!
உதிர்ந்து போகின்றன
மலர்கள்
என் உள்ளத்திலிருந்து
என்றும் உதிராதவை
உன் நினைவுகள்!
தொலைந்து போனது
சோகம் – தினம்
தொடர்ந்து வருகிறது
உன் நினைவுகளின் சுகம்!


4 கருத்துகள்:

rishvan சொன்னது… [Reply]

விடிந்த பின்பும்
இமைக் கதவைத் திறக்க
மனம் வரவில்லை!
என்ன செய்வது?
கனவுக்குள் நீயும் நானும்!

--- the best line... nice...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி ரிஸ்வான்!

சசிகலா சொன்னது… [Reply]

தொலைந்து போனது
சோகம் – தினம்
தொடர்ந்து வருகிறது
உன் நினைவுகளின் சுகம்!

அழகான வரிகள் ஆழ்மனதில் பதிந்தன.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிகலா!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!