ஞாயிறு, 29 ஜனவரி, 2012

போலித்தனமே வாழ்க்கையாகிவிட்டதா?


உன்னைப் பற்றிப் பெருமைப்படு!

அன்புள்ள தம்பு!



அமைச்சரவையில் இருந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். நல்ல வெள்ளை ஆடை; வெள்ளைப் பல். கை குலுக்கினார். பிறகு விரல்கள், எனது கைவிரல் மோதிரங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டேன்.

காரணம் அவர் மீது 43 குற்றங்கள் இருக்கின்றன. ஒரு கொலை செய்த குற்றம் உள்பட.

இப்படிப்பட்ட மனிதர்கள் உலா வருகிறார்கள் பொது வாழ்வில். நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை.

வேலை வாங்கித்தர நேரடியாக பணம் லஞ்சமாகக் கேட்டவர்; பல்கலைக்கழகம் என்ற பெயரில் படிப்பு சொல்லித்தர பல லட்சங்கள் வாங்குபவர்; காட்டில் மரங்களை வெட்டி பணம் சம்பாதிப்பவர் – இவர்களெல்லாம் காரில் வருகிறார்கள் கல்யாண வீட்டிற்கு! அவர்களுக்கு மரியாதை; முதல் வரிசையில் முதலிடம் உட்கார, காலில் விழுகிறார்கள் மணமக்கள்!

இவர் சாராயம் விற்று குடியைக் கெடுத்தவர்; அதுவும் கள்ளச்சாராயம். இவரைக்கேட்டு அரசில் பெரிய பதவிகள் அளிக்கப்படுகின்றன.
எப்படி இப்படிப்பட்ட ஊழல் மனிதர்களெல்லாம் பெரிய மனிதர்களாக மேடை ஏறுகிறார்கள்? உலகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது?

நாம் எல்லோரும் ஒரு பொய் விளையாட்டு விளையாடுகிறோம். அவன் திருடன் என்று தெரிகிறது. இருந்தாலும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கை குலுக்குகிறோம்.

பெரிய மனிதர்களை வளைத்துப்போட்டு விபச்சார வாழ்க்கை நடத்தும் ‘ஊரைக்கெடுத்த உத்தமி என்று தெரிகிறது இருந்தாலும் கழுத்திலுள்ள நகைகளையும் பட்டுப்புடவையையும் பார்த்து புன்னகையுடன் கைகூப்பி வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம்.

இப்படி போலித்தனமே வாழ்க்கையாகிவிட்டது. ஊர்மக்கள் போலி நாடகம் ஆடுகிறார்கள். விவஸ்தை கெட்டவர்கள்.

உனக்கும் இப்படி குறுக்கு வழியில் சம்பாத்தித்தால் என்ன என்று தோன்றுகிறது! ஆசை அடிக்கடி எழுகிறது. மறந்தும் போலி வாழ்க்கை நடத்தாதே! நீ அசல். ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.

அவர்களுக்கெல்லாம் அவர்கள் சந்ததிகளுக்கெல்லாம் காலம் என்ன வைத்திருக்கிறது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.

ஏனெனில், இவ்வுலகில் சத்தியம், நேர்மை, சமத்துவம், சுதந்திரம் என்று சில விஷயங்கள் மாறா உண்மைகள்! அவற்றுடன் விளையாடுபவர்கள் அதற்கு ஒரு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் இப் பிரபஞ்சம் ஒரு நெறிமுறையில்தான் இயங்குகிறது. அந்த நெறிமுறைதான் சத்தியம், நேர்மை, அகிம்சை.

நீ ஒரு அசல்!
அசலாக வாழ்ந்துவிடு;
உன்னைப் பற்றிப் பெருமைப்படு.
நேர் வழியில் நில். நேர் வழியில் செல்.
சபலம் உன்னைத் தொடாமல் பார்த்துக்கொள்.

டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி.


18 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

சுபேரா சொல்லி இருக்கீங்க ...
கடைசியா சொன்ன பஞ்ச் ரொம்ப சுபெர்பா இருக்கு ...
நடுவுல சொன்ன t.வேலி அல்வா காமெடியா இருஞ்சி ...
முதலில் சொல்லி இருக்கும் தம்பு என்பது எழுத்துப் பிழையா அய்யா ...அல்லது சரியான தமிழ் சொல் அது தானா ..
அறிவுரை என்ற பெயரில் மொக்கை போடாமல் தெளிவா சுருங்க கொண்ஹ்சம் காமெடி கலந்து சொல்லி இருப்பது ரொம்ப சுபெர்பா இருக்கு ...
வாழ்த்துக்கள் அய்யா

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி கலை! தம்பு என்பது பிழையில்லை. சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். இதில் நகைச்சுவையே இல்லை. நீங்கள் காமெடி என்கிறீர்கள். போகட்டும்! உங்கள் கருத்தில் ஏன் இத்தனை பிழைகள் இருக்கிறது? அதை கவனித்தீர்களா தோழி? தொடர்ந்து வந்து வாசிப்பதற்கும் நன்றி தோழி!

பெயரில்லா சொன்னது… [Reply]

ooo ..thambu enbathu thaan sari..ippo thaan arinthu konden....super...arumai....

ippudillaam ennidam kelvi kanai thoduththeergal endral naan solla vanthathai maranthu veeduvenaakkum...

original tirunelveli alwaa laam sonningale athaan konjam sirichen...

spelling mistake varamaal paarthuk kolgiren ayyaa...

(tangalish laa comments potta spell mistake kandupidikka mudiyaathee)

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பேச்சு வழக்கில் தம்பு என்றும் அழைக்கலாம். நீங்கள் நகைச்சுவைக்காகத்தான் இப்படி எழுதுகிறீர்கள் போலும். மீண்டு(ம்) வந்ததற்கு நன்றி கலை.

Yaathoramani.blogspot.com சொன்னது… [Reply]

ஒரு நல்ல சிந்தனையை பதிவாக்கித்
தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், வாழ்த்திற்கும், கருத்திற்கும் நன்றி ரமணி அவர்களே! அது என்ன Tha.ma 1.........?

பெயரில்லா சொன்னது… [Reply]

திரு. உதயமூர்த்தி அவர்களின்
சிந்தனையைப் பகிர்ந்ததிற்கு
மிக்க நன்றி நண்பரே .

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஸ்வராணி அவர்களே!

bandhu சொன்னது… [Reply]

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர் பந்து அவர்களே!

Unknown சொன்னது… [Reply]

நான் திரு.உதயமூர்த்தி அவர்களின் வாசகன். அவரின் எழுத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி கவிப்ரியன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஞானசேகரன்!

Unknown சொன்னது… [Reply]

தல சூப்பரா சொன்னீங்க எங்க தல நியாயம் தர்மம் இருக்கு

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்திவ்யா அவர்களே!

சாகம்பரி சொன்னது… [Reply]

ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். http://mahizhampoosaram.blogspot.in/2012/02/blog-post.html

ADMIN சொன்னது… [Reply]

////இவ்வுலகில் சத்தியம், நேர்மை, சமத்துவம், சுதந்திரம் என்று சில விஷயங்கள் மாறா உண்மைகள்! ////

உண்மை. அப்படி மாறும்நிலை ஏற்படும்போது உலகமே நிலைதடுமாறி, எதிர்பக்கம் சுழல ஆரம்பித்துவிடும். பகிர்வுக்கு மிக்க நன்றி திரு. கவிப்பிரியன் அவர்களே..!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

விருது வழங்கி கௌரவித்தமைக்கு நன்றி சகோதரி சாகம்பரி அவர்களே! சொந்த வேலை காரணமாக வலைப்பக்கமே கொஞ்சநாட்கள் வராமலிருந்தேன். அதனால் தங்களின் பதிவையும் பின்னூட்டத்தையும் கவனிக்கமுடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். இந்த விருதை எனக்குப்படித்த பதிவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்துகிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தங்களின் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி தங்கம் பழனி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!