சனி, 7 ஜனவரி, 2012

வாழ்வில் சாதிக்க வேண்டுமா?


அதிகமாக சாதித்தவர்களிடம் பொதுவான ஏழு பழக்கங்கள் இருப்பதாக ஸ்டீஃபன் கோவி போன்றவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை உங்களிடம் உள்ளனவாஎன்று சோதித்துப் பாருங்கள்.


1.      விளைவுகளை எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்படுவது. இதை ஆங்கிலத்தில் ப்ரோ ஆக்டிவ் என்பார்கள். எளிய உதாரணம்.... சென்னையில் எத்தனை பேர் குடை கொண்டு செல்கிறார்கள், எத்தனை பேர் ஒரு பயணத்துக்கு முன்பாக பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு, எல்லா உபாதைகளுக்கும் மாத்திரை எடுத்துச் செல்கிறார்கள்.இவர்கள் எல்லாம் ப்ரோ ஆக்டிவ் இனம்!

2.      எந்தக் காரியத்தைத் துவங்கும் முன்பும், அதன் இறுதி இலக்கைப் பற்றித் தெளிவாக இருப்பார்கள். உதாரணம் சினிமா போகலாம் என்று தீர்மாணித்தால், எந்த சினிமா, எந்த தியேட்டர், பார்க்கிங் பிரச்னை உண்டா, எந்த ஷோ என்பதைப் பற்றி தெளிவாக இருப்பது.

3.      முதலில் செய்ய வேண்டியதை முதலில் கவனிப்பது. மறுபடி சினிமா உதாரணத்தில், இங்கே போய் பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல், இணையத்திலோ அல்லது யாரையாவது அனுப்பியோ டிக்கட்டுக்கு ஏற்பாடு பண்ணுவது. இந்த முறையை வாழ்வின் ஒவ்வொரு காரியத்துக்கும் பயன்படுத்துவார்கள். இம்மூன்று பழக்கங்களும் தனி மனித வாழ்வில் சாதிப்பவர்களிடம் கட்டாயம் இருக்கும்.


பொதுவாழ்வில் வெற்றி பெற....

4.      எந்தக் காரியத்திலும் தனக்கு மட்டும் வெற்றி என்றில்லாமல் மற்றவர்க்கும் வெற்றி தரும்படி செயல்படுவார்கள். இதற்கு பல உதாரணங்கள் தரலாம். எளிய உதாரணம், புத்தக விற்பனை. என்னதான் நல்ல புத்தகமாக இருந்தாலும், எழுதுபவரால் மட்டும் அதை விற்றுத் தீர்க்க முடியாது. விற்பனையாளருக்கும் அதன் வெற்றியில் பங்கு தரவேண்டும். சிலருக்குப் பணமாகத் தரலாம், புகழாகவும் தரலாம். இதைத்தான் ‘வின் வின் (Win Win)என்பார்கள்.

5.      எந்தப் பிரச்னையையும் முதலில் புரிந்துகொள்வார்கள். அதன்பின் மற்றவருக்குப் புரிய வைப்பார்கள். ஒரு அலுவலகத்தில் புதிய மாற்றம் கொண்டுவருமுன் அந்த மாற்றம் யார்யாரைப் பாதிக்கும் என்று தெரிந்துகொண்டு அவர்கள் ஒவ்வொருவராக அழைத்து விளக்குவார்கள்.

6.      ஆறாவது ஸினர்ஜி (Synergy) என்னும் குணம். உடன் இருப்பவர்களின் திறமைகளைத் தன் திறமைகளுடன் சேர்த்துக் கொண்டு இயங்குவது. ஒவ்வொருவர்களின் சிறப்புகளையும் தன் சிறப்புகளுடன் சேர்த்துக்கொள்வது. இந்தக் குணத்தை வெற்றிகரமான சினாமா இயக்குனர்களிடம் பார்க்கலாம். படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குனர், வசனகர்த்தா போன்ற எல்லாருடைய திறமைகளையும் தன் திறமையாக்கிக்கொள்வது.

7.      ஏழாவது முக்கியமான பழக்கம், புதுப்பித்தல். தன் திறமைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது. கணிப்பொறியியலில் சிறந்தவர்களிடம் இதை நிச்சயம் காணமுடியும். நிமிடத்துக்கு நிமிடம் மாறி வரும் இத்துறையில் புதுசாக நிகழ்வதை அவ்வப்போது ஒரு மாணவன் போல கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும், தனிப்பட்ட விரிவரைகளுக்குச் சென்றும் புதுப்பித்துக் கொள்ளாவிடில் பிழைக்க முடியாது. 1970-ம் வருடத்தின் எலக்ட்ரானிக்ஸ் பாடப் புத்தகங்களை இன்று படித்தால், அதில் சிலிகான் சில்லுகலாளான மைக்ரோபுராசஸர் பற்றி ஒரு வரி இருக்காது. தொழிலறிவைப் புதுப்பிக்க வேண்டியது வெற்றிக்கு மிக முக்கியம்.


20 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது… [Reply]

பயனுள்ள குறிப்புகள்..

அருமை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி (குணா தமிழ்)நண்பரே!

சசிகலா சொன்னது… [Reply]

மிகவும் சரியான உண்மையே அருமை பகிர்வுக்கு நன்றி

கீதமஞ்சரி சொன்னது… [Reply]

போட்டிகள் நிறைந்த உலகில் தம் இருப்பை உணர்த்தவும் தக்கவைத்துக் கொள்ளவும் தேவைப்படும் குணவியல்புகள். அத்தனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

ஓசூர் ராஜன் சொன்னது… [Reply]

http://generationneeds.blogspot.com/2012/01/blog-post_06.html#comment-form

Yaathoramani.blogspot.com சொன்னது… [Reply]

அனைவருக்கும் பயன்படும்படியான
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
அருமையான பதிவு
விளக்கிசொல்லிய விதமும்
விளக்கங்களும் மிக மிக அருமை
பகிர்வுக்கு நனறி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது… [Reply]

த.ம 2

Unknown சொன்னது… [Reply]

மிகவும் அருமையான கட்டுரை. பகிர்விற்கு நன்றி கவிப்ரியன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிகலா அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

முதன்முறையாக எனது பக்கத்திற்கு வந்து கருத்து கூறிய தோழி கீதாவிற்கு எனது மனமார்ந்த நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஓசூர் ராஜன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தங்களின் மேலான கருத்திற்கும் நன்றி ரமணி அவர்களே!

பெயரில்லா சொன்னது… [Reply]

மிக மிக அருமையான நம் வெற்றிக்கு வித்திடும் பண்புகள்.
நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ரமணி அவர்களே அது என்ன த.ம 2 புலியவில்லையே?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஞானசேகரன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

முதல்முறை எனது தளத்திற்கு வருகை தந்து பாராட்டிய தோழி ஸ்ரவாணிக்கு எனது மனமார்ந்த நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

பெயரில்லா சொன்னது… [Reply]

wav ..super ,,,,naangalum try pannurom

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கலை அவர்களே!

Unknown சொன்னது… [Reply]

வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மோகன்திவ்யா அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!