வெள்ளி, 4 நவம்பர், 2011

வலைச்சரத்தில் 'மறக்க முடியாத நினைவுகள்'

எனது 50 வது பதிவு
வலைச்சரம் நல்ல பதிவர்களையும், பதிவுகளையும் அறிமுகப்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே! அதே சமயம் சிறந்த வலைப்பதிவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வலைச்சரத்தின் ஆசரியர் பொறுப்பையும் அளித்து கௌரவித்து வருகிறது. இந்த வாரத்தின் (31.10.2011 - 06.11.2011) மகிழம்பூச்சரம் என்ற தளத்தின் பதிவர் திருமதி. சாகம்பரி அவர்கள் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 


வலைச்சரத்தின் அறிமுகம்;

இன்றைய குறிப்புகள்:
   செயல் திட்டங்கள்,   கல்லூரி வாழ்க்கை, அலுவலக நேரம், வேலை, குமார பருவம்., நண்பர்கள் , வேலைக்கு தேவையான திறமைகள்

1.  கவிப்பிரியனின் வலைப்பூ கடித இலக்கியத்தை போற்றுகிறது. கடிதம் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த கடிதத்தில் நம்பிக்கை பற்றி எழுதியிருக்கிறார்.  நம்பிக்கையோடு காத்திரு.. 

2.    சகோதரர் சிசு அவர்களின் கூட்டாஞ்சோறு வலைப்பூவில் இந்த கடிதத்தை படியுங்கள். கல்லூரி வாழ்க்கை ஒரு காட்சியாக இருக்கும்.    அன்புள்ள தோழனுக்கு.

 
3. 
சகோதரர்.சண்முகம் அவர்களின் வலைப்பூ எப்போதும் சமூகம் பற்றிய சிந்தனையை வெவ்வேறு பரிமாணங்களில் தூண்டிவிடும். தனி மனித முன்னேற்றத்தை அக்கரையாக எடுத்துரைக்கும்.   இந்த பதிவை படியுங்கள்.  பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிட்ட ஆங்கிலம் தேவை. ஆனால், ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?  .   


இன்றைய தேதியில் பல நேயர்கள் பதிவுலகின் பால் ஈர்க்கப்பட்டு தாமும் வலை பதியத் தொடங்கிவிடுகின்றனர். இது வரவேற்கத் தகுந்த செய்தி, என்றாலும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நானும் அப்படித்தான் வலைப்பதிவை ஆரம்பித்தேன்.

ஆனல் பணிச்சூழல், கற்பனை வறட்சி, எதைப்பற்றி எழுதுவது என்ற தெளிவின்மை ஆகியவற்றால் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி கொஞ்சநாளில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். நண்பர்கள் வட்டம்தான் வாசகர் வட்டமாகப் பெருகுகிறது என்பதை முதலில் அறிந்து கொண்டேன். பிரபலமான பதிவர்கள் புதியவர்களை ஊக்குவிப்பதில்லை என்பதையும் அறிந்தேன். 

பதிவுகள் எப்படி எழுதப்படுகின்றன என்பதையும், தலைப்புகள் வைப்பது, திரட்டிகளில் பகிர்வது என பலவற்றையும் உற்று நோக்கினேன்.
ஆபாசத்தலைப்புகள் வைத்தால் அங்கு மளமளவென்று கூட்டம் கூடுவதையும் உணர்ந்தேன். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கொடுத்து வாசகர்களைக் கவர்ந்தவர்களையும் கண்டேன். 

இப்படிப்பட்ட படிப்பினைகள் இருந்தாலும் பள்ளிப்படிப்பைத் தாண்டாத என்னால் வெற்றிகரமாக ஒரு வலைப்பக்கத்தை தொடர்ந்து நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. என் வலைப்பக்கம் இரண்டு ஆண்டுகளில் பக்கப் பார்வை எண்ணிக்கை ஆயிரத்தைக் கூட நெருங்கவில்லை என்பதுதான் என் இந்த சந்தேகத்திற்கான காரணம். பின் தொடர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? வெறும் 4 பேர்!

ஏதோ புத்துணர்வு வந்தது போல் மீண்டும் ஒரு உத்வேகம் எழுந்து புதிய பெயரில் வலைபதிவைத் தொடங்கிவிட்டேன். என்ன எழுதுவது என்ற யோசனை செய்தபோது, எனது பழைய நினைவுகள், பழைய நண்பர்கள், என்னைக் கவர்ந்த பழைய திரைப்படங்கள், கடந்தகால, சமகால அரசியல் நிகழ்வுகள், எனக்கு வந்த மறக்க முடியாத கடிதங்கள் பொன்றவற்றைப் பற்றிய பதிவுகளை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.



பழைய கடிதங்களை வெளியிடும்போது அதில் ஒரு சங்கடம் இருந்தது. என்னை நம்பி எனக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதங்களை அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் அல்லது என் நிஜப்பெயரில் வெளியிடுவது சில சங்கடங்களைத் தரும் என்பதால் பெயர்களை மாற்றி அந்தக்கால கடிதப் போக்குவரத்தை அப்படியே பதிவாக்க முடிவு செய்தேன்.

வலைப்பதிவு பற்றி இப்போது எல்லாம் அத்துபடி ஆகிவிட்டதால் இதுவரை வெற்றிகரமாக எழுதிவருவதாகவே நம்புகிறேன். நிறைய பதிவுகளை படித்து கருத்துக்களையும் பதிவு செய்கிறேன். இப்படி ஒருமுறை திருமதி. சாகம்பரி அவர்களின் மகிழம்பூச்சரத்தில் ஒரு பதிவைப் படித்து கருத்தைப் பதிவு செய்தபோது அவரும் என் வலைப்பதிவுக்கு வந்து படித்துப் பாராட்டியிருந்தார். அவர் இப்போது வலைச்சரத்தின் ஆசிரியரான 3-வது நாளில் எனது வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


அப்புறம் நாற்று வலைப்பக்கத்தின் நிரூபன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில் என் வலைப்பதிவை அவரது தளத்தில் அறிமுகம் செய்தார். வாசகர்கள் எண்ணிக்கையும் கூடத்தொடங்கியது. மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் 50 பதிவுகள், 33 பின் தொடர்பவர்கள். 6858  பக்கப் பார்வைகள் என பீடு நடைபோடுகிறது. 

இந்த ஐம்பதாவது பதிவில் என்னை ஆதரித்த அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும், தமிழ்மணம், இண்டிலி, தமிழ்10, திரட்டி, உலவு போன்ற திரட்டிகளுக்கும், பின் தொடர்ந்த எல்லா நண்பர்களுக்கும், பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நண்பர்கள் வட்டமே இல்லை. எனது பால்யகால நண்பர்கள் யாரும் தொடர்பில் இல்லை. தற்போது உடன் பணியாற்றுபவர்களில் யாருக்கும் கணிணி அறிவு இல்லை. எனவே பதிவுலக நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு எப்போதும் ஒத்துழைக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,

கவிப்ரியன்.   


10 கருத்துகள்:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது… [Reply]

((((((எனது பால்யகால நண்பர்கள் யாரும் தொடர்பில் இல்லை. தற்போது உடன் பணியாற்றுபவர்களில் யாருக்கும் கணிணி அறிவு இல்லை. எனவே பதிவுலக நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்))))))

என்ன நண்பரே இப்படி சொல்லிட்டீங்க, எவ்வளவு கொடுத்தாலும் குறையாதது நட்புதானே இங்கு அதற்கா பஞ்சம், இங்கு அனைவரும் நண்பர்களே தொடரட்டும் உங்கள் நற்பதிவுகள்!

சம்பத்குமார் சொன்னது… [Reply]

//எனக்கு நண்பர்கள் வட்டமே இல்லை. எனது பால்யகால நண்பர்கள் யாரும் தொடர்பில் இல்லை. தற்போது உடன் பணியாற்றுபவர்களில் யாருக்கும் கணிணி அறிவு இல்லை. எனவே பதிவுலக நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு எப்போதும் ஒத்துழைக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.//

உங்களுக்கான கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் நண்பரே..

பதிவுலகில் மென்மேலும் சிறந்துவிளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
www.tamilparents.com

கோகுல் சொன்னது… [Reply]

பதிவுகள் எப்படி எழுதப்படுகின்றன என்பதையும், தலைப்புகள் வைப்பது, திரட்டிகளில் பகிர்வது என பலவற்றையும் உற்று நோக்கினேன்.
ஆபாசத்தலைப்புகள் வைத்தால் அங்கு மளமளவென்று கூட்டம் கூடுவதையும் உணர்ந்தேன். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கொடுத்து வாசகர்களைக் கவர்ந்தவர்களையும் கண்டேன்.
//
பதிவுலகினைப்பற்றி நன்கு கற்றிருக்கிறீர்கள்!
இனி வெற்றிதான்.கலக்குங்கள் நண்பரே!
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்!
தொடருங்கள்!

சாகம்பரி சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள் கவிப்பிரியன். ஹிட்ஸ் எண்ணிக்கையைவிட நம்முடைய எழுத்துக்கள் இந்த பதிவுலகில் நீடித்து நிற்கப்போவதை எண்ணி எழுதுங்கள். இனி டிஜிட்டல் உலகம்தான்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

என் இனிய நண்பராக அறிமுகமாகி என்னை வாழ்த்தியிருக்கும் நண்பர் நம்பிக்கைப் பாண்டியன் அவர்களே! உங்களின் நட்புக்கரத்திற்கும், பாராட்டுதல்களுக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நட்பின் அழைப்புக்கும், வாழ்த்துக்கும், ஆதரவிற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் சம்பத்குமார் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருக கோகுல் அவர்களே! தங்களுடைய பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி தோழி சாகம்பரி அவர்களே! உண்மைதான் //ஹிட்ஸ் எண்ணிக்கையைவிட நம்முடைய எழுத்துக்கள் இந்த பதிவுலகில் நீடித்து நிற்கப்போவதை எண்ணி எழுதுங்கள்// இதை நானும் ஆமோதிக்கிறேன் தோழி!

Unknown சொன்னது… [Reply]

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் கவிப்ரியன். உங்களின் நட்புக்காக காத்திருக்கிறோம், கவலை வேண்டாம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி ஞானசேகரன் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!