Monday, November 7, 2011

கள்ளக்காதல் எனும் கருமாந்திரம்

சென்ற மாததில்தான் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவைப் போட்டிருந்தேன். ஆனாலும் தொடர்ந்து வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குபவையாகவே இருக்கின்றன. கள்ளக்காதல்கள் தொடர்பான குற்றங்கள் பெருகிவருவது அதிர்ச்சி அளிப்பவையாகவே உள்ளது. 

இதில் மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம் துரோகம் எனபதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இந்த மனிதர்களை எந்த வகையில் சேர்ப்பது? கணவன் எங்கோபோய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு எப்படி உறுத்தலே இல்லாமல் சல்லாபிக்க முடிகிறது.

பத்திரிகைகளில் வெளியான இந்த இரண்டு செய்திகளையும் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் ரத்தம் கொதிக்கும்! கணவன் மீது வெடிகுண்டு பதுக்கிவைத்திருக்கும் தீவிரவாதி போன்ற குற்றப்பழியை சுமத்திவிட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு அப்புறம் கள்ளக்காதலனோடு.... ச்சே... என்ன வாழ்க்கை இது? என்ன பொம்பளை இவள்?

இன்னொரு செய்தியில் 4 குழந்தைகளுக்குத்தாய், ஊனமுற்ற கணவன் உழைப்பது போதாமல் தன் ஒரு சிறுநீரகத்தை விற்று வாங்கி வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனோடு ஒட்டமாம். எப்படிதான் மனது வருகிறது இவர்களுக்கெல்லாம். நமது சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

நாகர்கோவில் : கொல்லங்கோடு வெடிகுண்டு வழக்கில், மற்றொரு திருப்பமாக கள்ளக் காதலனுடன் பள்ளி ஆசிரியையும் கைது செய்யப்பட்டார்.

  கொல்லங்கோடு அருகே, பாலவிளையில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதுரையில் அத்வானி வருகையின் போது கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது எனவும், கொல்லங்கோடு போலீசுக்கு மர்மநபர் போனில் தகவல் தெரிவித்தார்.

போலீசார் நடத்திய சோதனையில், அந்த வீட்டிலிருந்து டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அருள்கீதன் என்பவரது வீட்டில் குலசேகரம் திருநந்திக்கரையை சேர்ந்த ஜெயகென்னடி என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவரது மனைவி விஜி, பாலவிளையில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

ஜெயகென்னடியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் அப்பாவி என்பதை உணர்ந்தனர். அவரது மனைவியை சுற்றி விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அவரது போனை பரிசோதனை செய்த போது, சாமியார்மடத்தை சேர்ந்த ஆஸ்டின் ஜெயராஜ் என்பவரது எண்ணிற்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது.

அவரை கைது செய்தபோது ஆசிரியை விஜியுடன் அவருக்கு இருந்த கள்ளத்தொடர்பு தெரிய வந்தது. ஜெயகென்னடி வெளிநாட்டில் இருந்து, வந்துவிட்டதால் விஜியுடன் கள்ளத்தொடர்பை நீடிக்க முடியாமல் தவித்த ஆஸ்டின் ஜெயராஜ், ஜெயகென்னடியை ஜெயிலில் அடைக்க வெடிபொருட்களை வாங்கி, அவரது வீட்டில் மதில் ஏறி குதித்து மறைத்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் விஜியின் கள்ளத்தொடர்பை உறுதி செய்த போலீசார், வெடிபொருளுக்கு சம்பந்தம் இல்லை என தெரிவித்தனர்.

ஆனால், விசாரணையின் இறுதியில், விஜிக்கு தெரிந்தே வெடிபொருட்கள் வைக்கப்பட்டது உறுதியானதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்காதலன் ஆஸ்டின் ஜெயராஜ், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்த ஜெயச்சந்திர பூபதி, ஆசிரியை விஜி, அவரது தாயார் ரோஸ்லின் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
.
விஜி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
ஆஸ்டின் ஜெயராஜ் என் குடும்பத்துக்கு பல வகைகளில் உதவியுள்ளார். ஆனால், அவருடன் பழகுவது என் கணவருக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த பின், என்னை கண்காணித்ததோடு, சித்திரவதையும் செய்தார். ஆஸ்டினை சந்திக்க விடாமல் செய்தார்.

மீண்டும் வெளிநாடு செல்லும் முடிவை என் கணவர் தள்ளி வைத்ததால், அவரை விட்டு பிரிய முடிவு செய்து, யோசனை செய்து கொண்டிருந்த போது, மதுரையில் அத்வானி வருகையின் போது வெடிகுண்டு வைக்கப்பட்ட செய்தி வெளியானது. எனவே, இதில் என் கணவரை சிக்க வைக்க முடிவு செய்தோம். எனது போனை போலீசார் வாங்கிய போதே, நாம் மாட்டிக் கொள்வோம் என தெரிந்து விட்டது. நான் பெரிய துரோகம் (யாருக்கு?)  செய்து விட்டேன். இவ்வாறு விஜி கூறினார்

கணவன் கிட்னியை விற்று வாங்கி வந்த பணத்தை எடுத்துக்கொண்டு
கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்
சேலம் மாவட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள மனியாரக்குன்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் கிருஷ்ணன். வயது-35, இவரது மனைவி, பூங்கொடி வயது-32.

இந்த கிருஷ்ணனுக்கு காலில்தான் ஊனம், ஆனால் மனதில் ஊனம் இல்லை போல... அதனால் மனம் போன போக்கில்... கணவன் மனைவி இருவரும் .
செல்வராணி வயது-15, அழகுராஜ் வயது-13, பாலமுருகன்-10, முடியரசன், வயது-5 என இந்த தம்பதிகளுக்கு வரிசையாக நான்கு குழந்தைகள் பெற்று தள்ளிவிட்டனர்.
கிருஷ்ணன் கருமந்துரையில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில வேலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று சேலம் மாவட்ட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நான் கருமந்துரையில் வசித்து வருகிரேன், என்னால் கடுமையாக உழைத்து வேலை செய்ய முடியாது, அதனால் ஓட்டல கடையில் வேலை செய்து வருகிறேன்.
 

என்னுடைய சம்பாத்தியம் குடும்ப செலவுக்கு பத்தாத போதும்,.  என்னுடைய மனைவியை நான் எங்கும் வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்திருந்தேன், இரண்டு வருடம் முன்னர் எனக்கு தெரிந்த ஜான் என்பவரிடம் எனது கிட்னியை ஐம்பது ஆயிரத்துக்கு விற்று, அந்த  பணத்தையும் எனது மனைவியிடம் கொடுத்திருந்தேன்.
என்னுடன் ஓட்டல் கடையில்சரக்கு மாஸ்டராகஇருந்த ராயப்பன் என்கிற ரவியை வீட்டுக்கு அடிக்கடி கூட்டிப்போனேன், அவனுக்கும் எனது மனைவி பூங்கொடிக்கும் கள்ள தொடர்புஏற்பட்டு விட்டது. இதை நான் பலதடவை கண்டித்தேன்.

கடந்த நான்கு மாதம் முன்னர், எனது மனைவி பூங்கொடி, ராயப்பன் இருவரும் நான் வைத்திருந்த பணம், எனது ரேஷன் கார்டு, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், எனது அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து நான், கருமந்துறை மற்றும் ஏத்தாப்பூர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துல்ளேன், ஆனால் காவல்துறையினர் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய ரேஷன் கார்டு  கூட என்னிடம் இல்லாமல் இருப்பதால் நான் சாப்பாட்டுக்கு கூட அரிசி  வாங்க கூட முடியாமல் நான்கு குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகிறேன்.

கிட்னியையும் விற்று விட்டதால், என்னால் இப்போது வேலையும் செய்ய முடியவில்லை... அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய எனது மனைவி பூங்கொடியை கண்டுபிடித்து எனது பணத்தையும், ரேஷன் கார்டையும் மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்குக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம்.

7 comments:

ஆறு said... [Reply]

அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரியானதாக தோன்றுகிறது போலும்

கவிப்ரியன் said... [Reply]

என்ன பார்வையோ.......... ஆறு அவர்களே! எல்லாம் அவரவருக்கு வந்தால்தான் தெரியும் கஷ்டம்!

எம்.ஞானசேகரன் said... [Reply]

மிகவும் வேதனையான வருத்தம் தரக்கூடிய செய்தி. இது தொடர்பான இடுகை எனது தளத்திலும்....

http://ragasiyasnegithiye.blogspot.com/2011/10/blog-post_16.html

! ஸ்பார்க் கார்த்தி @ said... [Reply]

வெக்கக்கேடு ,
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஞானசேகரன்! தங்களுடைய பதிவையும் சென்று பார்க்கிறேன் நண்பரே!

கவிப்ரியன் said... [Reply]

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி ஸ்பார்க் கார்த்தி!

Gokul said... [Reply]

இது தொடர்பாக சில வருடங்கள் முன்பு எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். அந்த கட்டுரையின் மையம் 'நாம் கொண்டு இருக்கும் போலி மதிப்பீடுகள் மற்றும் பாலியல் வறட்சி'.

இந்த பதிவில் இருக்கும் விஷயம் சம்பந்தமாக நான் கேட்க விரும்பும் கேள்வி,

இந்த ஜோடிகளில் உள்ள ஆண் / பெண் (அதாவது கள்ளக்காதலில் சம்பந்தப்பட்ட திருமணமானவர்) ஏன் விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்ய துணியவில்லை? அதை தடுப்பது எது?

இதில் ஏமாற்றப்பட்ட ஆண்கள் எதிர்பார்ப்பது என்ன?

மேலை நாடுகளில் இது போன்ற கள்ளக்காதல் சம்பவங்கள் நடந்தாலும் கொலையில் முடிவதில்லையே ஏன் இங்கு மட்டும் கொலையில் முடிகிறது?

இதற்கான பதிலை நேர்மையாக,சுத்தமான மனசாட்சியுடன்,அறிவியல்பூர்வமாக,முன்முடிவு இல்லாமல் சொல்ல முடிந்தால் ...வெட்ககேடு / கருமாந்திரம் போன்றவற்றிற்கான தேவையே இல்லை.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!