Tuesday, November 17, 2015

நான் ரசித்த கேள்வி-பதில்கள்


 

குடும்ப உறவுகளைத் தீர்மாணிப்பது பணம்தானே?
அந்தக் காலத்தில்உடைந்த கூரை வீடுகள்; உடையாத கூட்டுக் குடும்பங்கள்
இந்தக் காலத்தில்உடையாத மாடிகள்; உடைந்த குடும்பங்கள். பணமிருந்தால் மட்டும் போதுமா?

மனசாட்சி எப்படிப்பட்டது?
நீதிபதியாகி தண்டிப்பதற்கு முன்னால், தோழனாக நம்மை எச்சரிப்பது அதுதான்.

ஆசைகளே இல்லாவிட்டால் ஏமாற்றம் இருக்காதல்லவா?
ஏமாற்றம் மட்டுமா, முன்னேற்றமும் கூடத்தான்.

செய்யும் வேலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
ஹென்றி ஃபோர்டு கார்களைத் தயாரித்து விற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர். அவர் ஒரு முறை சொன்னார்; ‘பணம் தவிர வேறு எதையும் தராத தொழில் அற்பமான தொழில்.’

வெற்றிகரமான கணவன் மனைவிக்கு அடையாளம்?
மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வருமானமுள்ள கணவனும், அப்படிப்பட்டவனைக் கண்டுபிடித்துக் கல்யாணம் செய்யும் மனைவியும் வெற்றிகரமானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

சினிமாத்துறை பண்பாட்டைக் குலைக்கும் என்கிறார்களே! நீங்கள் எப்படி?
எனக்கு சில நல்ல பண்பாடுகளைக் கற்றுக்கொடுத்ததும் திரைத்துறைதான். ஒரு நாள் நடிகர் திலகம் சிவாஜியிடம் சிரித்துக்கொண்டே கேட்டேன்; எம்.ஜி.ஆர். பாசமானவர், நீங்கள் கொஞ்சம் கர்வி என்கிறார்களேஉண்மையா? அவரும் சிரித்தார்.

அது வேற ஒண்ணுமில்ல ராசா… ‘அவர் யார் வந்தாலும் சட்டுன்னு எழுந்து நின்னு வரவேற்பாரு. நான் கொஞ்சம் சுகவாசி. உட்கார்ந்துகிட்டேவாங்கம்பேன்’. அதை அப்படியே மாத்திப் பரப்பிட்டானுங்க பல பேரு.’
அன்று முதல் நான் எழுந்து நின்று வரவேற்க ஆரம்பித்தேன். என்னை எம்.ஜி.ஆர் ஆக்கினார் சிவாஜி.
-        கடைசி கேள்வி மட்டும் - கவிஞர் வைரமுத்து குமுதத்தில் 13.06.2007-ல்

17 comments:

ராஜி said... [Reply]

நல்ல கேள்விகள், நல்ல பதில்கள்.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@ராஜி தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ராஜி அவர்களே.

ஆரூர் பாஸ்கர் said... [Reply]

ரசித்தேன் அன்பரே. தொடர்க..

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@ஆரூர் பாஸ்கர் வருகைக்கு மிக்க நன்றி ஆரூர் பாஸ்கர் அவர்களே.

வே.நடனசபாபதி said... [Reply]

நானும் இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@வே.நடனசபாபதி வருகைக்கு மிக்க நன்றி நடனசபாபதி ஐயா அவர்களே.

Thulasidharan V Thillaiakathu said... [Reply]

நல்ல கேள்விகள் ரசனையான பதில்கள்! ரசித்தோம்...அதுவும் கடைசி இரண்டு கேள்வி பதில்கள்!

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Thulasidharan V Thillaiakathu வருகைக்கு மிக்க நன்றி துளசிதரன் அவர்களே.

mageswari balachandran said... [Reply]

நான் கூட கடைசி பதில் நேரில் என்று நினைத்தேன்.
அருமை.
முன்புள்ள கவியும் அருமை
கண்ணீர்த்துளிகள்,,,,,,,,,,,,,,

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@mageswari balachandran வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே.

Kiran Khan said... [Reply]

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Today Funnies | Largest Collection of Latest Funny Videos, Funny Pictures, Funny Girls, Funny Babies, Funny Wife, Funny Husband, Funny Police, Funny Students And Cartoon Plus Bizarre Pics Around The World.
Just Visit 2 My Site...
http://todayfunnies.com

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

~*~ Free Online Work At Home ~*~
Here's Everything You Need to Know About Online Working At Home, Including Where to Find Work At Home Job Listings,
The Best Sites For Finding Work At Home Jobs And How to Avoid Work From Home Scams.
Visit...
http://SooperOnlineJobs.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

காரிகன் said... [Reply]

வைரமுத்துவை எம் ஜிஆராக சிவாஜி மாற்றியது (சரிதானே?) படித்து ரசித்தேன்.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@காரிகன் வருகைக்கு மிக்க நன்றி காரிகன் அவர்களே.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... [Reply]

இரசிக்கும்படியான கேள்விகளும் பதில்களும்...

saamaaniyan saam said... [Reply]

வணக்கம்...

ரசிப்புடன் யோசிக்கவும் வைத்த கேள்வி பதில்கள் !

தொடருவோம்

சாமானியன்

எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@saamaaniyan saam வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

xxx said... [Reply]

//ஆட்டோ ஓட்டுனரின் அலைபேசியிலிருந்து செந்தமிழ் தேன்மொழியாள் என்று டி ஆர் மகாலிங்கம் பாட ஆரம்பித்தார். அலைபாய்ந்த மனது சற்று நிதானமடைந்து பாடலைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. காலம் இடம் தெரியாத எதோ இனம் புரியாத எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. பாடல் உள்ளே செல்லச் செல்ல ஒரு திடீர் கணத்தில் நான் அந்தப் பாடலின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். ஒரே நொடியில் நான் நம் தமிழ்ச் சமூகத்தின் வேர்களுக்குள் புதைந்து போனேன். நம்முடைய மரபு சார்ந்த ரசனைகளும், பாரம்பரிய தொடர்புகளும், அதன் நீட்சியாக நம் வாழ்வின் அன்றாட இயக்கங்களோடு இணைந்துகொண்ட இசையும், நானும் ஒரே புள்ளியில் இணைந்தோம். கால இயந்திரம்!//

காரிகன்
இந்தப்பாடலில் நீங்கள் தமிழ் மரபை கண்டெடுத்தது ...உங்கள் அறியாமையை பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கிறது.ஏனென்றால் அந்தப் பாடல் "ஹிந்தி மரபில்" வந்த பாடல்.நௌசாத் என்பவர் [ நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ] இசையமைத்த பாடலின் அப்பட்டமான காப்பி.

"செய்வன திருந்த செய்" என்பது தமிழ் முதுமொழி..மரபு.
நிதனாமாக ஆராய்ந்து எழுதுங்கள்.எம் எஸ் வீ அவர்களுக்கு ஓவராக பில்டப் கொடுக்க வேண்டாம்.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!