1991 முதல் 1995 வரை முதல்வராக இருந்தபோது இவர் நடத்திய தான்தோன்றித்தனமான ஆட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. முதலில் 'ஜெ' வை ஆதரித்த அத்தனை பத்திரிகைகளும் பின்பு அவருக்கு எதிராகத் திரும்பியது. அந்த நேரத்தில் 'ஆனந்த விகடன்' வார இதழில் வந்த தலையங்கம் இன்றைக்கும் மிகப்பொருத்தமாய் இருக்கிறது.
'இரட்டை இலை?' என்ற தலைப்பில் விகடன் எழுதிய தலையங்கம் கீழே....
இரட்டை இலைச் சின்னம் இப்போதும் ஜெயலலிதாவைக் கைவிடாமல் ஓட்டுக்களைச் சேகரித்துத் தரும் என்றும், எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்துள்ள கிராம மக்கள், அவரது 'இரட்டை இலை'க்கு எதிராக ஓட்டுப்போட தயங்குவார்கள் என்றும் ஆளுங்கட்சித் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.
எம்.ஜி.ஆர். எங்கே..! ஜெயலலிதா எங்கே!
மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப் போட முடியுமா?
அவரது அரசியல் என்பது தெளிந்த சுவை நீர்...
இவரது அரசியலோ ஊழல் மலிந்த சாக்கடை நீர்...
அவரது இதயம் மனித நேய மலர்க் குவியல்...
இவரது இதயமோ துவேஈம் நிறைந்த தொட்டார்சுருங்கி..
அவரது கரங்கள் உதவி செய்து தேய்ந்தவை...
இவரது கரங்களோ பணப்பெட்டியின் கறை படிந்தவை...
மொத்தத்தில்...
அவர் எளிமையின் அவதாரம்...
இவர் ஆடம்பர அலங்கோலம்...
ஆகவே இரட்டை இலையை எம்.ஜி.ஆர். சின்னம் என்று நினைத்து ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடலாம் என்று யாரேனும் நினைத்தால் அது எம்.ஜி.ஆருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்காது. தன்னுடைய முன்னோர் வெட்டியது என்ற பெருமைக்காகப் பாழுங்கிணற்றில் விழுவதற்குச் சமமாகும்.
எனவே திருவரங்கம் தொகுதி மக்களே சிந்தித்து செயல்படுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஊழலுக்குத் துணை போகாதீர்கள்.
10 கருத்துகள்:
விகடன் அப்பட்டமாக எழுதியது ஆச்சரியமாக உள்ளது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே.
அருமையான வாசகம் மக் '' கல் '' என்ன செய்யப்போகிறார்களோ......
நண்பரே எனது புதிய பதிவு அருந்ததி பார்த்தேன்.
ஜோதிஜியின் ஆச்சர்யம்தான் எனக்கும்
அரசியலில் நடக்கும் பல நிகழ்வுகள் பல்வேறு காலகட்டங்களில் பொருந்தி வரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பொருத்தமாகத் தேடிப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ஆம் கில்லர்ஜி அவர்களே. மக்கள் 'கள்' குடித்த மனநிலையில்தான் வாக்களிப்பார்கள் என்பது தெரிந்ததுதானே! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி முரளிதரன் அவர்களே.
வருகைக்கு மிக்க நன்றி சோழநாட்டில் பௌத்தம்.
ஊழலை ஒழிக்க தலைநகர் டெல்லியில் மீண்டும் 2 வது புனிதப்போர்--- மயிலாடுதுறையிலிருந்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்
டெல்லி தேர்தலைச் சொல்றீங்களா? தேர்தல் வந்தா ஊழல் ஒழிஞ்சிடுமா என்ன? இல்ல கெஜ்ரிவால் வந்தா ஒழிஞ்சிடும்னு நினைக்கிறீங்களா? வருகைகhd நன்றி அப்பர் சுந்தரம் அவர்களே.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!